Thursday, July 30, 2020

திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் பரிதாபமான கதை

Kalyan Kumar 

50 வருடம் ஹிந்தி தெரியாமல் திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் பரிதாபமான கதை.....

உயர் கல்வி :

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்… அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..

#தமிழ் நாடு –                  49 %

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –             17.6% ; 
மபி –                     17.4% ; 
உபி –                    16.8% ; 
ராஜஸ்தான் –     18.0% ;

இந்திய சராசரி : 20.4%

கல்வி நிலையங்களின் தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 
37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.. 

இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட
இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், 
தமிழ் நாடு –              22 ;
குஜராத் –                     5 ; 
மபி –                             3 ; 
உபி –                            6 ; 
பிகார் –                        1 ; 
ராஜஸ்தான் –             3

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;
குஜராத் – 2 ; 
மபி – 0 ; 
உபி – 7 ; 
பிகார் – 0 ; 
ராஜஸ்தான் – 4

பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-

இந்தியாவில் இருக்கும் 
29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 
3 மாநிலங்கள் அளிக்கிறன. 

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தமிழ் நாடு – ₹18.80 lakh crore 
(2nd Place) ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – ₹10.94 lakh crore (5th) ; 
மபி – ₹7.35 lakh crore (10th) ; 
உபி – ₹12.37 lakh crore (4th) ; ராஜஸ்தான் – ₹7.67 lakh crore (7th) ;
சத்தீஸ்கர் – ₹2.77 lakh crore (17th)

Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :-

#தமிழ் நாடு – 21 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 36 ; 
மபி – 54 ; 
உபி – 50 ; 
ராஜஸ்தான் – 47 ; 
சத்தீஸ்கர் – 46 ; 
#இந்திய சராசரி : 40

Maternal Mortality Rate (MMR – ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-
—————————————–
#தமிழ் நாடு – 79 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள்
 
குஜராத் – 112 ; 
மபி – 221 ; 
உபி – 285 ;
ராஜஸ்தான் – 244 ; 
சத்தீஸ்கர் – 221 ; 
#இந்திய சராசரி : 167

தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :-
————————————————–
#தமிழ் நாடு – 86.7% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 55.2% ; 
மபி – 48.9% ; 
உபி – 29.9% ; 
ராஜஸ்தான் – 31.9% ; 
சத்தீஸ்கர் – 54% ; 
#இந்திய சராசரி : 51.2%

கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-
—————————————————————-
#தமிழ் நாடு – 80.33% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 79% ; 
மபி – 70% ; 
உபி – 69% ; 
ராஜஸ்தான் – 67% ; 
சத்தீஸ்கர் – 71% ; 
#இந்திய சராசரி : 74%

ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-
———————————————————–
#தமிழ் நாடு – 943 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 890 ; 
மபி – 918 ; 
உபி – 902 ;
ராஜஸ்தான் – 888 ; 
#இந்திய சராசரி : 919

தனி நபர் வருமானம் (Per Capita Income – ரூபாயில்)

#தமிழ் நாடு – 1,28,366 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 1,06,831; 
மபி – 59,770 ;
உபி – 40,373 ; 
ராஜஸ்தான் – 65,974 ; 
சத்தீஸ்கர் – 64,442 ; 
#இந்திய சராசரி : 93,293

மனித வள குறியீடு (Human Development Index)

#தமிழ் நாடு – 0.6663 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 0.6164 ; 
மபி – 0.5567 ; 
உபி – 0.5415 ; 
ராஜஸ்தான் – 0.5768 ; 
சத்தீஸ்கர் – 0.358 ; 
#இந்திய சராசரி : 0.6087

ஏழ்மை சதவீதம் (Poverty (% of people below poverty line))

#தமிழ் நாடு – 11.28% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 16.63% ; 
மபி – 31.65% ; 
உபி – 29.43% ; 
ராஜஸ்தான் – 14.71% ; 
சத்தீஸ்கர் – 39.93% ; 
#இந்திய சராசரி : 21.92%

ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition)

#தமிழ் நாடு – 18% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 33.5% ; 
மபி – 40% ; 
உபி – 45% ; 
ராஜஸ்தான் – 32% ; 
சத்தீஸ்கர் – 35% ; 
#இந்திய சராசரி : 28%

மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

#தமிழ் நாடு – 149 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 87 ; 
மபி – 41 ; 
உபி – 31;
ராஜஸ்தான் – 48 ; 
சத்தீஸ்கர் – 23 ; 
#இந்திய சராசரி : 36

— இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது…. இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..

மேலும்,

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பாண்டேக்களும் மதன்களும் மாரிதாசுகளும் பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….

Post shared . Author unknown .

Saturday, July 11, 2020

புத்தகங்கள்

தமிழரசன்
சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்

அண்ணன் ஆ. ராசாவின் 
2G அவிழும் உண்மைகள். 

எழுச்சி தமிழரின் 
அமைப்பாய் திரள்வோம். 

பேராசிரியர் நாகநாதன் அய்யா 
கூட்டாட்சி அரசியல் சாதகமா பாதகமா .

மேனாள் அமைச்சர் அய்யா முரசொலிமாறன் எழுதிய 
ஏன் வேண்டும் இன்ப திராவிடம். 

திராவிட இயக்க ஆய்வாளர் எம் . எஸ்.  எஸ் பாண்டியனின் 
“பிம்பச் சிறை “.

மேனாள் அமைச்சர் அய்யா சாதிக் பாட்ஷாவின் 
“மாநில சுயாட்சி ஏன் ? “ 

அறிஞர் அண்ணாவின் "மாஜிக்கடவுள்கள், நீதிதேவன் மயக்கம்" 

எழுத்தாளர் கரன் பிரபாவின்
“அம்பேத்க்கரின் பெண்ணியம்”

மருத்துவர் ஷாலினியின் 
“கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்”

தலைவர் கலைஞரின் 
“மும்முனை போராட்டம் கல்லக்குடி களம்”

Babasaheb's 
Thoughts on Linguistic states.

J.V Pawars 
Dalit panthers (Authorative history) 

M.S.S. PANDIAN's 
Brahmin and Non-Brahmin Genealogies of the Tamil Political Present. 


------------

பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும். குடியரசு நாளிதழில் அவர் எழுதியவை மற்றும் அவர் பேசியவை என அனைத்தும். 

புத்தகம் pdf வடிவில். அனைவருக்கும் பகிரவும்.

https://drive.google.com/file/d/1TVOcGlWMZ7FaLBFstPevdMPa9TWVpfVS/view?usp=drivesdk

------------

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் - ஆனைமுத்து அய்யா தொகுத்தது 

பாகம் 1 - 20 

பெரியார் சிந்தனை களஞ்சியம் - ஆசிரியர் கி.வீரமணி தொகுத்தது 

பாகம் - 1 முதல் 32 வரை 

பெரியார் எழுத்தும் பேச்சும் - குடியரசு தொகுதிகள் 

பாகம் 1- 45

இன்னும் பல

-----111111-------

Assalaam alaikum wa rahmatullahi wa barakatuhu 

 The following link has a large number of beneficial islamic books that are available for download.  Please check it out and forward its a sadaqah jariah and please create time to read some of them.

https://drive.google.com/open?id=0B8lEw_negqRyMll3NlBZSEo1dUU

---------



https://readandshare123.blogspot.com/2017/12/blog-post.html
-----
https://drive.google.com/drive/mobile/folders/0ByWO0aO1eI_MN1BEd3VNRUZENkU?sort=13&direction=a
-------
தமிழக அரசின் Tamil digital library வழங்கும் 8600 நூல்களில் பட்டியல். Download இணைப்புகளுடன். அரிய புதையல்.

https://goo.gl/mFgqi7
--------
http://books.tamilcube.com/tamil/
_------

டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களின் சாதி ஒழிப்பு - தமிழ் - ஒலி நூல் ..

எனது கூகுள் டிரைவ் லிங்க் பகிர்ந்துள்ளேன். தேவைபடுவோர் தரவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி. 

தோழமையுடன்,
லியோ .

-------------------------

#புரட்சியாளர் பாபாசாகேப் அவர்களின் அனைத்து நூல்களும் தமிழில் PDF வடிவில் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றது..

http://drambedkarwritings.gov.in/content/


------------------------11
Balakumaran Stories PDF free download


https://poovascollections.blogspot.com/p/balakumaran-stories-pdf-free-download.html?m=1


அறிஞர் அண்ணா 

ஒலிகள்(original quality):

 https://mega.nz/#F!0nhXzarB!sNX-RrigOhsYNvPAH1fDRA

ஒலிகள்(Edited quality-HQ):

https://mega.nz/#F!JvJQ3SZC!PMrHLZarKWF8bTYemQb41w

அண்ணாவின் உரைகள், புத்தகங்கள், சிறுகதைகள், எழுத்துக்கள்:

https://mega.nz/#F!0uZEzaAZ!ke2MdeHWPAih80E7ZunyrA

இதிலுள்ள பல தொகுப்புகள் Sembian Ramalingam அவர்களின் முயற்சி.

------

https://m.facebook.com/story.php?story_fbid=10216687833501222&id=1622651206

ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய 52 புத்தகங்கள்

வணக்கம் 🙏

*ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்* என்று 52 புத்தகங்கள் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறன்று ஆசிரியர்கள் கூடி திருச்சியில் வாசித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம்... விருப்பமுள்ள ஆசிரியர் நண்பர்கள் எங்களுடன் இணையலாம்... மேலும் தகவலுக்கு 9787035184 என்கிற எண்ணிற்கு வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ளவும்... 

1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.
2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.
3. ஆயிஷா – இரா.நடராசன்.
4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.
5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.
6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி
7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.
8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு
9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
10. கற்க கசடற – பாரதி தம்பி
11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.
12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.
13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.
14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி
15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.
16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.
17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.
18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.
19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்
20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.
21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.
22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி
23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்
24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்
25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி
26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்
27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்
28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு
29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி
30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்
31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா
32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.
33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.
34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.
35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்
36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.
37. ரோஸ் – இரா.நடராசன்.
38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்
39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி
40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.
41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.
42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்
43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி
44. கண்டேன் புதையலை – பிரியசகி
45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்
46. கனவுப்பட்டறை – மதி
47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.
48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.
49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.
50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்
51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா
52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்

ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.
சுவாசிப்பு  உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….
வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்…
நன்றி!

காங்கிரஸ் கட்சியை சார்ந்த படேலுக்கு பீஜேபீ சிலை வைப்பது ஏன்?

*காங்கிரஸ் கட்சியை சார்ந்த படேலுக்கு பீஜேபீ சிலை வைப்பது ஏன்?*

---(சம்பவம்1)---

இந்திய விடுதலைப் போரின் முன்னணித் தலைவர் காந்தி.

காந்தியார் கொலை செய்யப்பட்ட நாள் 1948 ஜனவரி 30, சுட்டுக் கொல்லப்பட்ட நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்.

அவர் பிர்லா மாளிகையில் இருந்து பிரார்த்தனைக்கு செல்லும்போது கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தது படேலிடம் தான். அப்போது மணி 4.50.

எப்போதும் உடன் இருக்கும் படேல், கோட்ஷே சுடும்போது மட்டும் இல்லை. 

---(சம்பவம்2)---

1) காந்தி கொலை செய்யப்பட்ட நாள் 1948 ஜனவரி 30. கொன்றது ஆர்.எஸ்.எஸ்.

2) ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கப்பட்டது 1948 பிப்ரவரி 4

3) தடை விலக்கப்பட்டது 1949 ஜூலை 11.

4) 1 வருடம் 4 மாதத்திற்குள் தடை விலக்கப்பட்டது.

5) தடையை விலக்கியவர் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) 

படேல்  காங்கிரசுக்குள் இருந்த ஒரு சங்கி.  திட்டத்தை வகுத்து கொடுத்ததிலிருந்து குற்றவாளிகளை தப்பவிட்டது வரை படேலின் பங்கு முக்கியமானது. 

1) ஜனவரி 20, 1948 அன்று நடைபெற்ற காந்தியார் மீதான முதல் கொலைமுயற்சி விசாரணையை பிசுபிசுத்துப் போக செய்தது. 

2) அதன் பின்னரும் காந்தியாருக்கு தேவையான பாதுகாப்பை பலப்படுத்தாமல் கொலையாளிகளுக்கு உதவியது 

3) கொலை வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளியான சாவர்கரை விடுவித்தது

4) மிகக் குறைந்த காலஇடைவெளியில், அற்பமான உறுதிமொழியின் அடிப்படையில்  ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது 

என்பது போன்ற, காந்தியின் கொலையில் படேலின் தொடர்புகள் விசாரிக்கப்படவே இல்லை.

---(சம்பவம்3)---

1) தேசத்தந்தை காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் மீதான தடை ஒரு வருடத்தில் விலக்கப்பட்டது.

2) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமானதாக சொல்லப்படும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 25 வருடமாக தடை நீடிக்கிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எளிமையாக ஒரு விஷயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என பொருள்.! 

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தீக்குளிக்கச் சொல்லாதீர்கள்

Karthick Ramasamy
2019-06-07

உங்களுக்கான நண்பர்களை, வாழ்க்கைத்துணைகளை அல்லது சித்தாந்த/அரசியல் கொள்கையைகளை/தலைவர்களை தேர்ந்தெடுக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

முடிவு செய்த பிறகு உங்களிடம் நிரூபிப்பதற்காக தினம் தினம் அவர்களை தீக்குளிக்கச் சொல்லாதீர்கள்.

Saturday, July 4, 2020

சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக் கொள்

Lafees Shasheed
2020-07-04

'சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக் கொள்' என்பது முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு நாயக வாக்கு. ஆனால் உண்மையில் இந்த ஹதீஸை (?) ஒரு புனைந்துரை (மவ்லூஆத்) என்கிறார்கள் ஹதீஸ் திறனாய்வாளர்கள். சிலர் இதனை புனையப்பட்ட அறிவிப்பு கூட அல்ல, மாறாக இது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கூற்று என்கிறார்கள். எப்படியோ இது ஆதாரபூர்வமான நாயக வாக்கு அல்ல. ஆனால் முஸ்லிம் வெகுஜன உளவியலில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களில் இந்த அறிவுப்பு அளவுக்கு நன்றாக பதிந்து போன வேறு ஹதீஸ்கள் கிடையாது. கல்வி குறித்த இதர ஆதாரபூர்வமான ஹதீஸ்களை விஞ்சிய பிரபல்யம் 'சீனா தேசம் சென்றாலும்...' ஹதீஸுக்கு உள்ளது. இந்த அறிவிப்பின் கருத்தாக ' ஒருவேளை, சீனா வெகு தொலைவில் உள்ள நாடாக அக்காலத்தில் கருதப்பட்டமை ஆக இருக்கும். அல்லது அது (சீனா) அக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறையினதும், தொழிற் துறையினதும் தொட்டிலாக புகழ்பெற்று விளங்கியதனாலும் இருக்கும் ' என்கிறார், உஸ்தாத் முர்தஸா முதஹ்ஹரி... ஆனால் எனக்கு ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் அணுகுமுறை அடிப்படையில் இந்த பிரபல்யமான கூற்று குறித்து சிலவற்றை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

முஸ்லிம்களின் மார்க்கம் பற்றிய புரிதலில் காணப்படும் ஒத்திசைவற்ற தன்மை (Incoherence) குறித்து கவனம் குவிப்பார், எமது ஆசிரியர் ஷெய்க் அல் கஸ்ஸாலி. அதாவது ஒரு விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாக கோட்பாட்டையும் நடைமுறையையும் கட்டியெழுப்பி இருப்பது.

உதாரணமாக நம்பிக்கை சுதந்திரம் குறித்து முஸ்லிம் அறிஞர்கள் வலியுறுத்தி பேசி இருக்கிறார்கள். இந்த மார்க்கத்தை ஏற்பதில் எந்த நிர்பந்தமும் இல்லை, ஒருவர் புற ரீதியான அழுத்தங்கள் எதுவுமின்றி சுயமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் சட்ட வல்லுநர்களிடத்தில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் சமவேளையில் இஸ்லாத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவருக்கு மரண தண்டனை என்றும் அவர்கள் கூறுவார்கள். இது நம்பிக்கை சுதந்திரத்துக்கு எதிரான ஒரு கருத்து என்பது அவர்களுக்கு புரிவது இல்லை. இத்தகைய ஒத்திசைவற்ற புரிதல்களை கேள்விக்குட்படுத்தி அறிவுப் புலத்திலும், பொது மன்றத்திலும் இயங்கியவர், முஹ‌ம்ம‌த் அல் கஸ்ஸாலி. அதே அணுகுமுறை அடிப்படையில் 'சீனா தேசம் சென்றாலும்....' என்கிற அறிவிப்பை நோக்கலாம்.

இந்த அறிவிப்பை உலமாக்களும், மார்க்க உபன்யாசகர்களும், ஆன்மீக பயிற்றுவிப்பாளர்களும், பொது மக்களும் அடிக்கடி பாவித்து வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தில் மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வி என்கிற என்கிற பிரிவினையும் தீவிரமாக உள்ளது. உலகக் × மார்க்கக் கல்வி என்கிற எதிர் முரணை உருவாக்கி உலமாக்கள் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியை சிறந்ததாகவும், ஆன்மிக பரிபூரணம் கொண்டதாகவும் வாதிட்டு வருகிறார்கள். இந்த வகையில் மார்க்கக் கல்வி என்பது இன்றைய காலத்தின் மாபெரும் அதிகார சொல்லாடல் கட்டுமானமாக இருந்து வருகிறது. இந்த சொல்லாடல் கட்டுமானத்தின் செல்வாக்கு காரணமாகவே மத்ரஸாக்களின் அடித்தளம் இவ்வளவு பலம் வாய்ந்ததாக முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகிறது. இதன் சமூக பரிமாணங்களை ஆராய இப்படியான பதிவுகளின் எல்லை போதாது. ஆனால் நுணுக்கமாக யோசித்துப் பார்த்தால் மேற்போந்த 'சீனா தேசம் சென்றாலும்....' என்கிற ஹதீஸின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் இந்த நடைமுறை அடிப்படையிலேயே முரண்படுகிறது.

நபிகளாரின் காலத்தில் சீனா தேசத்தில் எந்த மத்ரஸாவும் இருக்கவில்லை ; இறைதூதர்களும் இருக்கவில்லை. எனில் அங்கே சென்று அறிவு பெறுவது என்பதன் அர்த்தம் என்ன? உண்மையில் அப்படி ஒன்று இருப்பின் அது ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி கூறியது போன்று விஞ்ஞானத்தினதும், தொழில் நுட்பத்தினதும், தத்துவத்தினதும் அறிவு தான். ஏனெனில் அது தான் அப்போது சீனா தேசத்தில் இருந்தது. உண்மையில் அல் குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்தின் படி அறிவு என்பது பிளவுபடாதது. அனைத்து அறிவுகளினதும் மூலம் பிரபஞ்சத்தின் தலைவனான இறைவனே. இந்த தெளிவு எமது முஸ்லிம் அறிஞர்களுக்கு இருந்ததனால் தான் அவர்கள் கிரேக்க தத்துவத்தையும், பாரசீக மெய்யியலையும், இந்திய கணிதத்தையும் அரபியில் கொண்டு வந்தார்கள். அவற்றை அகவயப்படுத்திக் கொண்டு அல் குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்திற்கு முரண்படாமல் வளர்த்து எடுத்தார்கள். அல் குர்ஆன், ஸுன்னாவை போலவே இயற்கையும் இறைவனை காட்டும் மூலங்களில் ஒன்று தான். இதனால் தான் 'அல் குர்ஆன் பேசும் பிரபஞ்சம் ; பிரபஞ்சம் மெளன அல் குர்ஆன்' என்று கூறினார், ஷெய்க் அல் கஸ்ஸாலி. உலகக் கல்வி, மார்க்க கல்வி என்கிற பிரிவினை எமது அறிவு மரபுக்கு அந்நியமான ஒன்று. அது நவீனத்துவத்தை எதிர் கொண்ட பழமைவாதத்தின் தோல்வி உளவியலின் வெளிப்பாடே அன்றி இஸ்லாமிய பண்பாட்டு மரபின் குரலல்ல அது.

பாரியதொரு கலாசார, விஞ்ஞான இயக்கத்தை இஸ்லாம் உலகிற்கு வழங்கியது. பல நூற்றாண்டுகளாக அதுவே கல்வி, அறிவியல், கலாசார, பண்பாட்டு துறைகளில் கொடி கட்டிப் பறந்தது. இப்னு சீனா, அல் பிரூனி, இமாம் கஸ்ஸாலி ஒமர் கைய்யாம் போன்ற மகத்தான இஸ்லாமியக் கற்றறிவாளர்களை அதுவே உருவாக்கியது. ஆனால் இந்த மரபை கொண்டாடும் நாம் சமவேளையில் உலகக் கல்வியை விட மார்க்க கல்வி உயர்ந்தது என்கிறோம்.. இத்தகைய மார்க்கம் குறித்த ஒத்திசைவற்ற புரிதல்களை களைவதே எமது எழுச்சிக்கான அடிப்படை நிபந்தனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இமாம் முஹம்மத் அப்துஹு, ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி போன்றவர்களின் கோட்பாடு சட்டகங்களில் சமூக எழுச்சிக்கான முக்கியமான முறைமை சார்ந்த அணுகுமுறைகள் உள்ளது. அவற்றை நாம் கவனமாக பயில வேண்டும். சிந்தனை என்பது தொடரியக்கம். விமர்சன சிந்தனை தான் அறிவு!

#இங்கிருந்து அறிவோம்

#பாதையை_செப்பனிடல்

#பயகம்பர் நாயகமே

#இது_போன்று இன்னொன்றில்லை

Friday, July 3, 2020

BEING ETHICAL IS THE BIGGEST CRIME.!

Dr.John Aaron Prabhu.
Sr. Asst. Surgeon.
2020-07-03

BEING ETHICAL IS THE BIGGEST CRIME.!
It's my personal message to my colleagues. 

*முன்குறிப்பு*

சாத்தான்குளம் சம்பவத்தில் சான்று வழங்கிய அரசு மருத்துவர் மீதும் நிச்சயமாக தவறுள்ளது.!!  அரசியல் / அதிகார அழுத்தத்தால் மீண்டும் ஒரு மருத்துவர் பலியாகாமல் இருக்கட்டும் என்பதற்காக மட்டுமே இந்த பதிவு.!

*Disclaimer*

எல்லா நிகழ்வுகளுமே என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே.

*இனி உங்களுக்காக*

இன்றைக்கு கோவில்பட்டி டாக்டரைத் தண்டிக்கணும், கைது பண்ணனும். கொலைக்கு அவங்களும் உடந்தை.. அவங்களோட மருத்துவ கவுன்சில் உரிமத்தை ரத்து பண்ணியே ஆகணும்னு பேசுறவன்லாம் யார்னா.? இதுல ஏதாவது ஒருத்தனாத்தான் இருப்பான்...

*நிகழ்வு 1*

அவர்:
"என் மருமகள் Air travel பண்ணனும்.
அவளுக்கு Non Pregnant-னு ஒரு Certificate மட்டும் வேணும்.!"

நான்: 
"சரிங்க.! அதெப்படி எனக்கு தெரியும்.?! USG Abdomen பாத்துட்டு சொல்ல முடியும்.! 
இல்லைன்னா இங்க வரச்சொல்லுங்க. 
ஒரு UPTஆவது பாத்துட்டு, அந்த report mention பண்ணித்தான Certificate தர முடியும்.! நான் அவங்கள நேர்லகூட பாக்காம, நீங்க வந்து கேக்குறீங்களே..?!" - னு திரும்பக் கேட்டதுக்கு, முறைச்சிட்டு போறவன். 

*நிகழ்வு 2*

அவர்:
"என் பையன், நம்ம KV-ல படிக்குறான். டெல்லிக்கு Sports meet போறான்.! அதான், SCHOOL-ல DOCTOR-கிட்ட, ச்சும்மா பேருக்கு ஒரு Certificate-தான் கேட்டாங்க.!"

நான்: 
"Sports meetக்கு Physical fitness certificate தான.?! ECG, ECHO , ஒரு Basic blood investigations-கூட எதுவுமே Test பண்ணாம எப்படிங்க அவன் FIT-னு குடுக்க முடியும்.??!!
நாளைக்கு உங்க பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, School management தப்பிச்சுக்கத்தான் இந்த Certificate.!"

டாக்டரை பலிகடா ஆக்குறதுக்குதான் இந்த Certificateனு நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணுமா.?! வேற எதுக்குன்னு தெரிஞ்சவன் சொல்லு பாப்போம்.? ஏன்.? Track event-லயே குழந்தை இறந்த செய்தியெல்லாம் தெரியாதா உங்களுக்கு.?!  HOCMல போன மாசம்கூட ஒரு CRRI Sudden death. அதுக்குள்ளயா மறந்துட்டீங்க.?!!

*நிகழ்வு 3*

Corona காலகட்டத்துல, எந்த School-ம் function ஆகக் கூடாதுன்னு அரசாங்கமே ஆணையிட்டுள்ள நிலையில்

அவர்: 
"புள்ளைக்கு School admission-க்கு 
ஒரு Doctor certificate வேணும் மச்சான், வேறொன்னும் இல்லை.!!!"

நான்: 
"தயவுசெஞ்சு தொந்தரவு பண்ணாத, என்னால தர முடியாது.!"

*நிகழ்வு 4@*

"Govt.School Teacherஆ வேலை பாக்குறேன்.!
Alagappa Universityலதான் MA course பண்ணிட்டு இருக்கேன்.!
Exams வருது.!! படிச்சுருவேன்.!
Exam datesக்கு மட்டும் 3 ,3 நாள் மட்டும் நீங்க போன மாசமும் , இந்த மாசமும்
இந்த குறிப்பிட்ட தேதியில மட்டும், 
Medical Leave தந்தா போதும்..!!"

"அப்போ நீங்க ML கேக்குற Datesல தான Exam appear ஆகியிருப்பீங்க..?
உடம்பு சரியில்லை வேலைக்கு போக வேணாம்னு நான் சொல்ல,
அதே நாள்ல நீங்க பரிட்சை எழுதலாமா.?
அது எப்படிங்க முடியும்.??
CL போடுங்க, இல்லைன்னா,
Study Leaveனு apply பண்ணுங்க .!!
நான் தர மாட்டேன்..!!"

நிகழ்வு 5 :

"அக்கா பொண்ணு மாசமாயிருக்கா,
எனக்கு நெறைய Medical Leave இருக்கு,
ஒரு 2 months மட்டும் ML வேணும்.!!"

"Asst Surgeon cadre தான் டீச்சர் நான். Maximum 15 daysக்கு வேணும்னா தரலாம்.! அதுக்கு மேலதான் வேணும்னா, நீங்க வேற யார்ட்டயாவது வாங்கிக்கோங்க.!"

பாடம் சொல்லிக்குடுத்த டீச்சருக்கே ஒரு certificate தரமாட்டுறான் பாருங்க.
நம்மகிட்ட படிச்சவன்.! 
இன்னைக்கு டாக்டர் ஆகிட்டோம்னு அவ்ளோ தலைக்கணத்துல திரியுறான்.!

இத்தனைக்கும் நான் என்னோட பதவிக்கு இவ்ளோதான் முடியும்னு விளக்கமா சொன்னப்பிறகும்.!

நிகழ்வு 6 :

"சென்னைல இருந்து நாத்தனார் நம்ம ஊருக்கு வரணுமாம், 
அங்க E-Pass வாங்குறதுக்கு,
இங்க மாமியார் Critically ill-னு certificate இருந்தா போதுமாம்.! அதான். . .!!"

"தரமாட்டேன்.!" மறுத்ததற்கு.

வீட்டிற்கே வந்து,
"அவன் என்ன பெரிய சு#$*-யா.?
அவன நான் பாத்துக்கிறேன்.!"னு மிரட்டிட்டு போன மாண்புமிகு ஒருவர். . .

நிகழ்வு 7 :

"Abroad வேலைக்கு Apply பண்ணிருக்கேன்.!
அதுக்கு VISA வாங்க,
Covid19 - Negativeனு தா.!
இதுல என்ன ஆகிடப் போகுது உனக்கு.!!"

"அதெப்படி TEST பாக்காம தர முடியும்.?
ICMR Portal entry numberலாம் அந்த reportல பண்ணித்தான் தர முடியும்.!
அதுவும் அரசாங்க வேலைல இருந்துட்டே.!
Test பண்றதுக்கும் அப்படி guidelines எதுவும் இல்லை.!
அப்படி கண்டிப்பா வேணும்னா Private test பாருங்க. Result கொண்டுவாங்க.!
அதை base பண்ணி Certificate தரலாம்.!!"

நிகழ்வு 8 :

"போன வாரம் அண்ணன் வீட்ல கல்யாணம் நடந்துச்சுல.?! 
புள்ளை Matriculation Schoolல படிக்குதுல., அந்த Schoolல ஒரு நாள் Leaveகெல்லாம் உங்ககிட்ட certificate வாங்கிட்டு வரச்சொல்றாங்க. .!"
இதச் சொல்லும்போதே Parentsக்கு மொகத்துல அவ்ளோ சந்தோசம்.! 
இதுல பெருமை மயிருவேற,
புள்ளை படிக்குற School அவ்ளோ Strict-னு.!!!

நிகழ்வு 9 :

"அத்தை 1 மாசம் Medical Leave எடுத்திருந்தாங்கல்ல.?!
நாளைக்கு Join பண்றாங்க. அதான் fitness மட்டும் Sign வாங்கிட்டு வரச்சொன்னாங்க.!!"

"யாரா இருந்தாலும் நேர்ல பாக்காம 
எந்த certificateம் தாரதில்லைன்னு , 
நான் சொன்னேன்னு போய் சொல்லு போ.!"

நிகழ்வு 10 :

"கால்ல அடிபட்டுச்சு நம்ம டிப்போலதான் டிரைவரா இருக்கேன்.! 
போன மாசம் 10ம் தேதியிலிருந்து Leave வேணும் Sir.!!"

"நீங்க தப்பா நெனைச்சாலும் பரவால்லைங்க நான் pre-date போட்டு certificate தாரதில்லைங்க.!!"

இப்படித்தான் ஒரு டாக்டர், 
இவங்க சொல்றத நம்பி 
தெரிஞ்சவங்கதானேன்னு ML குடுத்துட்டு
அந்த driver, அவர் சொன்ன அடுத்தநாள்ல
Govt bus ஒரு பெரிய RTAல ஒருத்தன் சாகவும், தான் suspend ஆகாம தப்பிக்க, 
முன்தேதியிட்டு Medical certificateம் வாங்கி,
அந்த குறிப்பிட்ட நாளில் தான் duty-க்கே வரலைன்னு,
Enquiry committeeகிட்ட இந்த medical certificate produce பண்ணிட்டான்.
இப்போ, இதுநாள்வரை அந்த Doctorம் 
இந்த Driverஓட சேர்ந்து courtக்கு அலைஞ்சிட்டு இருக்க கதை தெரியுமா.??!

நிகழ்வு 11 :

"Old age pensionக்கு கையெழுத்து போட்டுத்தான ஆகணும்.!"

"Adhaar / voter ID-படி 48தான ஆகுது.?!"

"ஆமா, 48 வயச 58னு போட்டுக் குடுத்தா.
OAP வாங்கலாம். பாவப்பட்ட குடும்பம். பாத்து பண்ணுங்க.!!"

"முடியாது.! காசு வாங்கிட்டு காட்டுற இடத்துல கையெழுத்துப்போடுற எவன்கிட்டயாவது வாங்கிக்க. கிளம்பு.!!"

நிகழ்வு 12 :

சாயங்காலம் 4:30க்கு தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி,
"நாளைக்கு பவர் பத்திரம் பதியணும். 
அதான் Life certificate வாங்க வந்தேன்.!"

"நான் என்ன நீங்க தூக்கிட்டு சுத்துற Rubber stamp-னு நெனச்சீங்களா.?!
இது என்ன தலைபோற Emergencyயா.?!
நாளைக்கு Hospitalலதான் இருப்பேன் Duty timeல அங்க வந்து வாங்குங்க.!
வீடு, என்னோட Personal space ,
இங்க எவன் வரச்சொன்னது.?!"

நிகழ்வு 13 :

"இதே மாதிரி கடைசி நேரத்துல 
இன்னைக்கு 5 மணிக்குள்ள application அனுப்பனும். Attestation வேணும்னு.!"

"Originals எங்க.? எடுத்துட்டு வா.! இங்கதான் இருப்பேன் verify 
பண்ணிட்டு போட்டுத்தாரேன்.!

நிகழ்வு 14 :

காவலர்களிடம் மேலும் கவனமாக இருங்கள்.

என்னிடம் கால்மணி நேரத்திற்குமுன் மருத்துவ விடுப்பிற்கு சான்று வாங்கிச்சென்ற காவலர்,

மறுபடியும் தேடிவந்து
நேராக உள்ளே வந்து 
என் காலில் விழுந்து
என் காலைப்பிடித்து,
"சார், என்னோட எதிர்காலமே உங்க கைலதான் சார் இருக்கு.! 
தெரியாம பண்ணிட்டேன் சார்.!! 
என்னைய மன்னிச்சுடுங்க சார்.!!!"னு அழுகிறார். . .

எனக்கு என்ன நடந்ததென்றே புரியவில்லை.!
ஏனெனில், 
அவர்கள் நிலைய பொறுப்பு காவலரிடம் 
"பரிந்துரை" (Leave Pass) வாங்கி வந்தால் மட்டுமே,
விடுப்பு வழங்குவது வழக்கம்.!

அந்த S.I.-க்கு தெரியும் நான் 15 நாட்களுக்கு மேல்
அவருக்கே தரமாட்டேன் என்பது.!
புதிதாக வந்த இந்த Battalion-க்கு அது தெரியாது.!

நான் "8 நாட்கள்" என எழுதி தந்ததற்குமுன்
ஒரு 1-ஐ மட்டும் சேர்த்து "18 நாட்கள்" நான் வழங்கியதாக கொடுத்திருக்கிறார்.

"நீ, போய் டாக்டரிடம் வாங்கி வா"என என்னிடமே அனுப்ப,
வந்து என் காலில் விழுகிறார்.!!

நான் "இதுலயே இந்த திருட்டுத்தனம் பண்ற உனக்கெல்லாம் எதுக்கு போலிஸ் வேலை.?!"என வச்சு வாங்க,

குடும்பம், குழந்தைகள், எதிர்காலம் என காலை விடாமல் அழ.. ..
"நீயே உன் S.I.க்கு Call பண்ணி என் முன்னாடி நடந்ததைச் சொல்லு.!
நான் அப்புறம் அவர்கிட்ட பேசுறேன்"என

"சார் , நீங்க குடுத்துறுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.! அவன் 'இல்லை, டாக்டர்தான் 18 நாளுக்கு தந்தார்'னு என்கிட்டையே பொய் சொல்றான் , சார்.
அதான் உங்ககிட்டையே அனுப்பி வச்சேன்.! நீங்க என்ன சொன்னாலும்
அப்படியே பண்றேன், சார்..!!"

"இந்த தடவை மன்னிச்சு விடுங்க சார்.
இனி இப்படி தப்பு பண்ண மாட்டார்னு நம்புவோம்.!
நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க.!"னு அனுப்பி வச்சேன்.!!

அன்றிலிருந்து 8 days எனில் (EIGHT DAYS ONLY)என அருகிலேயே எழுதவும் ஆரம்பித்தேன்.!!

நிகழ்வு 15 :

"சார், நம்ம Inspectorக்கு accident ஆச்சுல,
அவர் Admissionலதான் இருக்கார்.
உங்ககிட்ட 15 days extension வாங்கிக்கச் சொன்னார்.!!"

"இல்ல சார்.! அவர் எங்க Admissionல இருக்காங்களோ,
அவங்கள்ட்டயே Certificate வாங்கி குடுக்க சொல்லுங்க.!
நான் Individualஅ பாக்காம எந்த Certificateம் தாரதில்லை.!
எனக்கின்னு சில Principles வச்சு இருக்கேன்.!
நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லை.!!
நான் அதையெல்லாம் மீறுறதில்லை.!!"

"நான் சொன்னேன் சார்.! அவர்தான் உங்ககிட்ட ஒருதடவை கேட்டுப்பாக்கச் சொன்னார்!!"

"சரி சார்.! நான் சொன்னத அவர்கிட்ட சொல்லிடுங்க. சந்தோசம்.!!"னு 
வணக்கம் வைச்சு அனுப்பிடுவேன்.!!!

மற்றும் பல நிகழ்வுகள் உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளை நீங்களும் கடந்திருக்கலாம். . .

அவங்கள பொருத்தவரை
"அவங்களோட தேவை"க்கு இதெல்லாமே 
ஒரு சாதாரண கையெழுத்து.!

ஆனா, 
எனக்கு இந்த ஒற்றைக் கையெழுத்துதானே எல்லாமே.! 

என்னோட அடையாளம் அதுதான்.!!
நான் இதுவரை பட்ட கஷ்டத்துக்கு, படிச்ச படிப்புக்கு நானே கொடுக்கிற மரியாதை.!
பாக்குற வேலைக்கு நான் செய்யுற நீதி.!!

எனக்கு இதுதான் #ETHICS.!!
இதை எவனுக்காகவும் மீற மாட்டேன்.!!

நீங்க நிறைய பேர்
நீங்க யார்னே தெரியாத வெளியூர்ல வேலைபாக்குறவங்கதான.?!!

நான் MBBS முடிச்சதுல இருந்து
சொந்த ஊர்லதான் இருக்கேன்.!!!
10 வருசமா Govt Service-ல இருக்கேன்.!!
எத்தனை பேர் முறைச்சிட்டு திட்டிட்டு மிரட்டிட்டு போயிருப்பான்.!
வெகு சிலரே நீங்க சொல்றது சரிதான்னு புரிஞ்சுப்பான்.!!!

நான் Genuine groundsக்கு குடுத்த 
1000 Certificatesஐ பத்தி எவனும் அடுத்தவன்ட்டகூட சொல்லியிருக்கப் போறதில்லை.!!

ஆனா,
தரமாட்டேன் சொன்னத, 
என்ன காரணத்தால தரமறுத்தேன்னு மறைச்சு ஊரெல்லாம் பேரைக் கெடுத்துருவானுக.!!

எத்தனை பேர் இப்படி திரிஞ்சாலும்,
எனக்கு அதப்பத்தி கவலையே இல்லை.
ஏன்னா.? 
இப்படிப்பட்டவங்களோட 
"conduct certificate" என்னோட கூந்தலுக்குச் சமம்.??

எவனுக்கு இது திமிரா தெரிஞ்சாலும்
அதைப்பத்தி கவலையே எனக்கில்லை.!!!

ஏன்னா.? 
நான் எனக்கான நியாயப்படித்தான் நடந்துட்டு இருக்கேன்.!

அது போதாதா.?!!

நீங்க Gazetted Officer,
ஒருதடவை நீங்க Sign பண்ணிட்டா ,
அது Legal Document.!
You have every right to deny / refuse to give any Certificate.
If u really think it's unethical.!

Legal Consequence face பண்ண
Legal / Political / Financial backup-ம்
கொழுப்பும் இருந்தா 
50-100 வாங்கிட்டு certificate குடு.!
எவனும் தடுக்கப் போறதில்ல.!

எனக்கு அப்படி 50க்கும் 100க்கும்
என் கையெழுத்தை விக்குறதுல உடன்பாடே கிடையாது.!!

இப்படி Unethicalஆ நடந்து 
100 case பாத்து சம்பாதிக்கிறதவிட,
Ethicalஆ இருந்து 5 case பாத்தாலே
சந்தோசம்தான்.!!!

தொடர்ந்து நட்புப் பட்டியலில் இருப்போருக்கு தெரியும்,
"BEING ETHICAL IS A  BIGGEST CRIME.!"னு அப்பப்போ
Facebook Post பண்ணிருப்பேன்.!

அன்றைக்கெல்லாம் இதே மாதிரியான ஒரு சம்பவத்தைக் கடந்திருப்பேன்.!!

மருத்துவர்களாகிய நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்
அரசு மருத்துவர்கள் அரசாங்க அதிகாரி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.!!

மருத்துவம் பார்ப்பதில் மட்டுமல்ல,
சான்றிதழ் வழங்குவதிலும் 
கூடுதல் கவனமாக இருங்கள்.!!!

வளைந்து குடுக்காமல் இருப்பது
அவ்வளவு சுலபமல்ல.!!
ஆனால்,
கண்டிப்பாக இருக்க முடியும்..!!! 

It's not that Easy to be Ethical.!
But BE ETHICAL.!!! 

நன்றி.!!! 

என்றும் அன்புடன்,
Dr.John Aaron Prabhu.
Sr. Asst. Surgeon.