Friday, July 3, 2020

BEING ETHICAL IS THE BIGGEST CRIME.!

Dr.John Aaron Prabhu.
Sr. Asst. Surgeon.
2020-07-03

BEING ETHICAL IS THE BIGGEST CRIME.!
It's my personal message to my colleagues. 

*முன்குறிப்பு*

சாத்தான்குளம் சம்பவத்தில் சான்று வழங்கிய அரசு மருத்துவர் மீதும் நிச்சயமாக தவறுள்ளது.!!  அரசியல் / அதிகார அழுத்தத்தால் மீண்டும் ஒரு மருத்துவர் பலியாகாமல் இருக்கட்டும் என்பதற்காக மட்டுமே இந்த பதிவு.!

*Disclaimer*

எல்லா நிகழ்வுகளுமே என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே.

*இனி உங்களுக்காக*

இன்றைக்கு கோவில்பட்டி டாக்டரைத் தண்டிக்கணும், கைது பண்ணனும். கொலைக்கு அவங்களும் உடந்தை.. அவங்களோட மருத்துவ கவுன்சில் உரிமத்தை ரத்து பண்ணியே ஆகணும்னு பேசுறவன்லாம் யார்னா.? இதுல ஏதாவது ஒருத்தனாத்தான் இருப்பான்...

*நிகழ்வு 1*

அவர்:
"என் மருமகள் Air travel பண்ணனும்.
அவளுக்கு Non Pregnant-னு ஒரு Certificate மட்டும் வேணும்.!"

நான்: 
"சரிங்க.! அதெப்படி எனக்கு தெரியும்.?! USG Abdomen பாத்துட்டு சொல்ல முடியும்.! 
இல்லைன்னா இங்க வரச்சொல்லுங்க. 
ஒரு UPTஆவது பாத்துட்டு, அந்த report mention பண்ணித்தான Certificate தர முடியும்.! நான் அவங்கள நேர்லகூட பாக்காம, நீங்க வந்து கேக்குறீங்களே..?!" - னு திரும்பக் கேட்டதுக்கு, முறைச்சிட்டு போறவன். 

*நிகழ்வு 2*

அவர்:
"என் பையன், நம்ம KV-ல படிக்குறான். டெல்லிக்கு Sports meet போறான்.! அதான், SCHOOL-ல DOCTOR-கிட்ட, ச்சும்மா பேருக்கு ஒரு Certificate-தான் கேட்டாங்க.!"

நான்: 
"Sports meetக்கு Physical fitness certificate தான.?! ECG, ECHO , ஒரு Basic blood investigations-கூட எதுவுமே Test பண்ணாம எப்படிங்க அவன் FIT-னு குடுக்க முடியும்.??!!
நாளைக்கு உங்க பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, School management தப்பிச்சுக்கத்தான் இந்த Certificate.!"

டாக்டரை பலிகடா ஆக்குறதுக்குதான் இந்த Certificateனு நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணுமா.?! வேற எதுக்குன்னு தெரிஞ்சவன் சொல்லு பாப்போம்.? ஏன்.? Track event-லயே குழந்தை இறந்த செய்தியெல்லாம் தெரியாதா உங்களுக்கு.?!  HOCMல போன மாசம்கூட ஒரு CRRI Sudden death. அதுக்குள்ளயா மறந்துட்டீங்க.?!!

*நிகழ்வு 3*

Corona காலகட்டத்துல, எந்த School-ம் function ஆகக் கூடாதுன்னு அரசாங்கமே ஆணையிட்டுள்ள நிலையில்

அவர்: 
"புள்ளைக்கு School admission-க்கு 
ஒரு Doctor certificate வேணும் மச்சான், வேறொன்னும் இல்லை.!!!"

நான்: 
"தயவுசெஞ்சு தொந்தரவு பண்ணாத, என்னால தர முடியாது.!"

*நிகழ்வு 4@*

"Govt.School Teacherஆ வேலை பாக்குறேன்.!
Alagappa Universityலதான் MA course பண்ணிட்டு இருக்கேன்.!
Exams வருது.!! படிச்சுருவேன்.!
Exam datesக்கு மட்டும் 3 ,3 நாள் மட்டும் நீங்க போன மாசமும் , இந்த மாசமும்
இந்த குறிப்பிட்ட தேதியில மட்டும், 
Medical Leave தந்தா போதும்..!!"

"அப்போ நீங்க ML கேக்குற Datesல தான Exam appear ஆகியிருப்பீங்க..?
உடம்பு சரியில்லை வேலைக்கு போக வேணாம்னு நான் சொல்ல,
அதே நாள்ல நீங்க பரிட்சை எழுதலாமா.?
அது எப்படிங்க முடியும்.??
CL போடுங்க, இல்லைன்னா,
Study Leaveனு apply பண்ணுங்க .!!
நான் தர மாட்டேன்..!!"

நிகழ்வு 5 :

"அக்கா பொண்ணு மாசமாயிருக்கா,
எனக்கு நெறைய Medical Leave இருக்கு,
ஒரு 2 months மட்டும் ML வேணும்.!!"

"Asst Surgeon cadre தான் டீச்சர் நான். Maximum 15 daysக்கு வேணும்னா தரலாம்.! அதுக்கு மேலதான் வேணும்னா, நீங்க வேற யார்ட்டயாவது வாங்கிக்கோங்க.!"

பாடம் சொல்லிக்குடுத்த டீச்சருக்கே ஒரு certificate தரமாட்டுறான் பாருங்க.
நம்மகிட்ட படிச்சவன்.! 
இன்னைக்கு டாக்டர் ஆகிட்டோம்னு அவ்ளோ தலைக்கணத்துல திரியுறான்.!

இத்தனைக்கும் நான் என்னோட பதவிக்கு இவ்ளோதான் முடியும்னு விளக்கமா சொன்னப்பிறகும்.!

நிகழ்வு 6 :

"சென்னைல இருந்து நாத்தனார் நம்ம ஊருக்கு வரணுமாம், 
அங்க E-Pass வாங்குறதுக்கு,
இங்க மாமியார் Critically ill-னு certificate இருந்தா போதுமாம்.! அதான். . .!!"

"தரமாட்டேன்.!" மறுத்ததற்கு.

வீட்டிற்கே வந்து,
"அவன் என்ன பெரிய சு#$*-யா.?
அவன நான் பாத்துக்கிறேன்.!"னு மிரட்டிட்டு போன மாண்புமிகு ஒருவர். . .

நிகழ்வு 7 :

"Abroad வேலைக்கு Apply பண்ணிருக்கேன்.!
அதுக்கு VISA வாங்க,
Covid19 - Negativeனு தா.!
இதுல என்ன ஆகிடப் போகுது உனக்கு.!!"

"அதெப்படி TEST பாக்காம தர முடியும்.?
ICMR Portal entry numberலாம் அந்த reportல பண்ணித்தான் தர முடியும்.!
அதுவும் அரசாங்க வேலைல இருந்துட்டே.!
Test பண்றதுக்கும் அப்படி guidelines எதுவும் இல்லை.!
அப்படி கண்டிப்பா வேணும்னா Private test பாருங்க. Result கொண்டுவாங்க.!
அதை base பண்ணி Certificate தரலாம்.!!"

நிகழ்வு 8 :

"போன வாரம் அண்ணன் வீட்ல கல்யாணம் நடந்துச்சுல.?! 
புள்ளை Matriculation Schoolல படிக்குதுல., அந்த Schoolல ஒரு நாள் Leaveகெல்லாம் உங்ககிட்ட certificate வாங்கிட்டு வரச்சொல்றாங்க. .!"
இதச் சொல்லும்போதே Parentsக்கு மொகத்துல அவ்ளோ சந்தோசம்.! 
இதுல பெருமை மயிருவேற,
புள்ளை படிக்குற School அவ்ளோ Strict-னு.!!!

நிகழ்வு 9 :

"அத்தை 1 மாசம் Medical Leave எடுத்திருந்தாங்கல்ல.?!
நாளைக்கு Join பண்றாங்க. அதான் fitness மட்டும் Sign வாங்கிட்டு வரச்சொன்னாங்க.!!"

"யாரா இருந்தாலும் நேர்ல பாக்காம 
எந்த certificateம் தாரதில்லைன்னு , 
நான் சொன்னேன்னு போய் சொல்லு போ.!"

நிகழ்வு 10 :

"கால்ல அடிபட்டுச்சு நம்ம டிப்போலதான் டிரைவரா இருக்கேன்.! 
போன மாசம் 10ம் தேதியிலிருந்து Leave வேணும் Sir.!!"

"நீங்க தப்பா நெனைச்சாலும் பரவால்லைங்க நான் pre-date போட்டு certificate தாரதில்லைங்க.!!"

இப்படித்தான் ஒரு டாக்டர், 
இவங்க சொல்றத நம்பி 
தெரிஞ்சவங்கதானேன்னு ML குடுத்துட்டு
அந்த driver, அவர் சொன்ன அடுத்தநாள்ல
Govt bus ஒரு பெரிய RTAல ஒருத்தன் சாகவும், தான் suspend ஆகாம தப்பிக்க, 
முன்தேதியிட்டு Medical certificateம் வாங்கி,
அந்த குறிப்பிட்ட நாளில் தான் duty-க்கே வரலைன்னு,
Enquiry committeeகிட்ட இந்த medical certificate produce பண்ணிட்டான்.
இப்போ, இதுநாள்வரை அந்த Doctorம் 
இந்த Driverஓட சேர்ந்து courtக்கு அலைஞ்சிட்டு இருக்க கதை தெரியுமா.??!

நிகழ்வு 11 :

"Old age pensionக்கு கையெழுத்து போட்டுத்தான ஆகணும்.!"

"Adhaar / voter ID-படி 48தான ஆகுது.?!"

"ஆமா, 48 வயச 58னு போட்டுக் குடுத்தா.
OAP வாங்கலாம். பாவப்பட்ட குடும்பம். பாத்து பண்ணுங்க.!!"

"முடியாது.! காசு வாங்கிட்டு காட்டுற இடத்துல கையெழுத்துப்போடுற எவன்கிட்டயாவது வாங்கிக்க. கிளம்பு.!!"

நிகழ்வு 12 :

சாயங்காலம் 4:30க்கு தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி,
"நாளைக்கு பவர் பத்திரம் பதியணும். 
அதான் Life certificate வாங்க வந்தேன்.!"

"நான் என்ன நீங்க தூக்கிட்டு சுத்துற Rubber stamp-னு நெனச்சீங்களா.?!
இது என்ன தலைபோற Emergencyயா.?!
நாளைக்கு Hospitalலதான் இருப்பேன் Duty timeல அங்க வந்து வாங்குங்க.!
வீடு, என்னோட Personal space ,
இங்க எவன் வரச்சொன்னது.?!"

நிகழ்வு 13 :

"இதே மாதிரி கடைசி நேரத்துல 
இன்னைக்கு 5 மணிக்குள்ள application அனுப்பனும். Attestation வேணும்னு.!"

"Originals எங்க.? எடுத்துட்டு வா.! இங்கதான் இருப்பேன் verify 
பண்ணிட்டு போட்டுத்தாரேன்.!

நிகழ்வு 14 :

காவலர்களிடம் மேலும் கவனமாக இருங்கள்.

என்னிடம் கால்மணி நேரத்திற்குமுன் மருத்துவ விடுப்பிற்கு சான்று வாங்கிச்சென்ற காவலர்,

மறுபடியும் தேடிவந்து
நேராக உள்ளே வந்து 
என் காலில் விழுந்து
என் காலைப்பிடித்து,
"சார், என்னோட எதிர்காலமே உங்க கைலதான் சார் இருக்கு.! 
தெரியாம பண்ணிட்டேன் சார்.!! 
என்னைய மன்னிச்சுடுங்க சார்.!!!"னு அழுகிறார். . .

எனக்கு என்ன நடந்ததென்றே புரியவில்லை.!
ஏனெனில், 
அவர்கள் நிலைய பொறுப்பு காவலரிடம் 
"பரிந்துரை" (Leave Pass) வாங்கி வந்தால் மட்டுமே,
விடுப்பு வழங்குவது வழக்கம்.!

அந்த S.I.-க்கு தெரியும் நான் 15 நாட்களுக்கு மேல்
அவருக்கே தரமாட்டேன் என்பது.!
புதிதாக வந்த இந்த Battalion-க்கு அது தெரியாது.!

நான் "8 நாட்கள்" என எழுதி தந்ததற்குமுன்
ஒரு 1-ஐ மட்டும் சேர்த்து "18 நாட்கள்" நான் வழங்கியதாக கொடுத்திருக்கிறார்.

"நீ, போய் டாக்டரிடம் வாங்கி வா"என என்னிடமே அனுப்ப,
வந்து என் காலில் விழுகிறார்.!!

நான் "இதுலயே இந்த திருட்டுத்தனம் பண்ற உனக்கெல்லாம் எதுக்கு போலிஸ் வேலை.?!"என வச்சு வாங்க,

குடும்பம், குழந்தைகள், எதிர்காலம் என காலை விடாமல் அழ.. ..
"நீயே உன் S.I.க்கு Call பண்ணி என் முன்னாடி நடந்ததைச் சொல்லு.!
நான் அப்புறம் அவர்கிட்ட பேசுறேன்"என

"சார் , நீங்க குடுத்துறுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.! அவன் 'இல்லை, டாக்டர்தான் 18 நாளுக்கு தந்தார்'னு என்கிட்டையே பொய் சொல்றான் , சார்.
அதான் உங்ககிட்டையே அனுப்பி வச்சேன்.! நீங்க என்ன சொன்னாலும்
அப்படியே பண்றேன், சார்..!!"

"இந்த தடவை மன்னிச்சு விடுங்க சார்.
இனி இப்படி தப்பு பண்ண மாட்டார்னு நம்புவோம்.!
நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க.!"னு அனுப்பி வச்சேன்.!!

அன்றிலிருந்து 8 days எனில் (EIGHT DAYS ONLY)என அருகிலேயே எழுதவும் ஆரம்பித்தேன்.!!

நிகழ்வு 15 :

"சார், நம்ம Inspectorக்கு accident ஆச்சுல,
அவர் Admissionலதான் இருக்கார்.
உங்ககிட்ட 15 days extension வாங்கிக்கச் சொன்னார்.!!"

"இல்ல சார்.! அவர் எங்க Admissionல இருக்காங்களோ,
அவங்கள்ட்டயே Certificate வாங்கி குடுக்க சொல்லுங்க.!
நான் Individualஅ பாக்காம எந்த Certificateம் தாரதில்லை.!
எனக்கின்னு சில Principles வச்சு இருக்கேன்.!
நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லை.!!
நான் அதையெல்லாம் மீறுறதில்லை.!!"

"நான் சொன்னேன் சார்.! அவர்தான் உங்ககிட்ட ஒருதடவை கேட்டுப்பாக்கச் சொன்னார்!!"

"சரி சார்.! நான் சொன்னத அவர்கிட்ட சொல்லிடுங்க. சந்தோசம்.!!"னு 
வணக்கம் வைச்சு அனுப்பிடுவேன்.!!!

மற்றும் பல நிகழ்வுகள் உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளை நீங்களும் கடந்திருக்கலாம். . .

அவங்கள பொருத்தவரை
"அவங்களோட தேவை"க்கு இதெல்லாமே 
ஒரு சாதாரண கையெழுத்து.!

ஆனா, 
எனக்கு இந்த ஒற்றைக் கையெழுத்துதானே எல்லாமே.! 

என்னோட அடையாளம் அதுதான்.!!
நான் இதுவரை பட்ட கஷ்டத்துக்கு, படிச்ச படிப்புக்கு நானே கொடுக்கிற மரியாதை.!
பாக்குற வேலைக்கு நான் செய்யுற நீதி.!!

எனக்கு இதுதான் #ETHICS.!!
இதை எவனுக்காகவும் மீற மாட்டேன்.!!

நீங்க நிறைய பேர்
நீங்க யார்னே தெரியாத வெளியூர்ல வேலைபாக்குறவங்கதான.?!!

நான் MBBS முடிச்சதுல இருந்து
சொந்த ஊர்லதான் இருக்கேன்.!!!
10 வருசமா Govt Service-ல இருக்கேன்.!!
எத்தனை பேர் முறைச்சிட்டு திட்டிட்டு மிரட்டிட்டு போயிருப்பான்.!
வெகு சிலரே நீங்க சொல்றது சரிதான்னு புரிஞ்சுப்பான்.!!!

நான் Genuine groundsக்கு குடுத்த 
1000 Certificatesஐ பத்தி எவனும் அடுத்தவன்ட்டகூட சொல்லியிருக்கப் போறதில்லை.!!

ஆனா,
தரமாட்டேன் சொன்னத, 
என்ன காரணத்தால தரமறுத்தேன்னு மறைச்சு ஊரெல்லாம் பேரைக் கெடுத்துருவானுக.!!

எத்தனை பேர் இப்படி திரிஞ்சாலும்,
எனக்கு அதப்பத்தி கவலையே இல்லை.
ஏன்னா.? 
இப்படிப்பட்டவங்களோட 
"conduct certificate" என்னோட கூந்தலுக்குச் சமம்.??

எவனுக்கு இது திமிரா தெரிஞ்சாலும்
அதைப்பத்தி கவலையே எனக்கில்லை.!!!

ஏன்னா.? 
நான் எனக்கான நியாயப்படித்தான் நடந்துட்டு இருக்கேன்.!

அது போதாதா.?!!

நீங்க Gazetted Officer,
ஒருதடவை நீங்க Sign பண்ணிட்டா ,
அது Legal Document.!
You have every right to deny / refuse to give any Certificate.
If u really think it's unethical.!

Legal Consequence face பண்ண
Legal / Political / Financial backup-ம்
கொழுப்பும் இருந்தா 
50-100 வாங்கிட்டு certificate குடு.!
எவனும் தடுக்கப் போறதில்ல.!

எனக்கு அப்படி 50க்கும் 100க்கும்
என் கையெழுத்தை விக்குறதுல உடன்பாடே கிடையாது.!!

இப்படி Unethicalஆ நடந்து 
100 case பாத்து சம்பாதிக்கிறதவிட,
Ethicalஆ இருந்து 5 case பாத்தாலே
சந்தோசம்தான்.!!!

தொடர்ந்து நட்புப் பட்டியலில் இருப்போருக்கு தெரியும்,
"BEING ETHICAL IS A  BIGGEST CRIME.!"னு அப்பப்போ
Facebook Post பண்ணிருப்பேன்.!

அன்றைக்கெல்லாம் இதே மாதிரியான ஒரு சம்பவத்தைக் கடந்திருப்பேன்.!!

மருத்துவர்களாகிய நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்
அரசு மருத்துவர்கள் அரசாங்க அதிகாரி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.!!

மருத்துவம் பார்ப்பதில் மட்டுமல்ல,
சான்றிதழ் வழங்குவதிலும் 
கூடுதல் கவனமாக இருங்கள்.!!!

வளைந்து குடுக்காமல் இருப்பது
அவ்வளவு சுலபமல்ல.!!
ஆனால்,
கண்டிப்பாக இருக்க முடியும்..!!! 

It's not that Easy to be Ethical.!
But BE ETHICAL.!!! 

நன்றி.!!! 

என்றும் அன்புடன்,
Dr.John Aaron Prabhu.
Sr. Asst. Surgeon.

No comments:

Post a Comment