Friday, August 21, 2015

மெக்கால்லே கல்வித் திட்டம்

குலக் கல்வித் திட்டம்.

இன்றைய ஆயுத எழுத்து விவாதத்தில் இது குறித்து விவாதிக்கப் பட்டது. கே. டி. ராகவன் தனது அதி புத்திசாலிதனமான வாதத்தில் பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும் எல்லா தொழில்களும் தெய்வமே என்றும் குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டில் செய்யும் தொழிலுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சரி அவர் அப்படித் தான் சொல்லுவார். இந்தப் பதிவு அதற்க்கல்ல.

அவர் கடைசியாக மெக்கால்லே கல்வித் திட்டம் ஒரு அடிமைகளை உருவாக்கும் ஆங்கில அரசின் திட்டம் என்றும் குருவிடம் சென்று எல்லா வித்தைகளையும் பயின்ற குரு குல கல்வி மேலானது என்றும் அடித்து விட்டார்.

இந்தப் பதிவு மெக்கால்லே கல்வித் திட்டம் குறித்தும் குரு குல கல்வி குறித்தும் சில புதிய தகவல்களை சொல்லும் முயற்சி.

மெக்கால்லே கல்வித் திட்டம்:

கீழே ஒரு சிறிய படம் இணைத்துள்ளேன். அது மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி. அதில் சொல்லியிருப்பது அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம். பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது. 
அடித்துச் சொல்கிறேன் மெக்கால்லே அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம் பக்கத்தில் ஒரு இடத்திலும் இல்லை. அவருடைய நாட்குறிப்பு தளத்தையும் இணைத்துள்ளேன்.
சரி உண்மையில் நடந்ததென்ன?

இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கிலப் பிரபு மெக்கால்லே. இந்து சனாதன வாதிகளுடன் அவர் மூன்று கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனையும் ஆவணமாக உள்ளன.

  • முதல் கட்டத்தில் மெக்கால்லே இந்தியர்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார். சனாதன வாதிகள் அதை முழுதுமாய் மறுக்கிறார்கள். கல்வி பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியின மக்களுக்கு மட்டுமே என்று வாதிடுகின்றனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு கல்விக்கு சனாதன வாதிகள் ஒத்துக் கொள்கின்றனர்.
  • இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சனை. மெக்கால்லே கணக்கும் அறிவியலும் என்றார். சனாதன வாதிகள் வேத புராண இதிகாசங்கள் என்றனர். இந்த சண்டை மிக வலுவாக நடந்தது. பல ஆண்டுப் போராட்டம். பல கட்ட பேச்சு வார்த்தைகள். வரலாற்றுச் சக்கரத்தை பின் நோக்கி ஓட்ட முடியாது என்று ஒரே பிடிவாதமாக மெக்கால்லே. அதை முழுதும் எதிர்த்த ஹிந்து பார்ப்பனர்கள். கடைசியில் மெக்கால்லே ஒரே அடியாக ஒரு தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியை வலுக் கட்டாயமாக புகுத்தினார். அதையும் எதிர்த்து பார்ப்பனர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு மனு அனுப்பினர். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. வெற்றி பெற்றார் மெக்கால்லே.
  • மூன்றாவது கட்டமாக பயிற்சி மொழி ஆங்கிலமா சமஸ்கிருதமா என்ற கட்டத்தை அடைந்தார். ஆனால் அதில் சுலபமாக வெற்றி பெற்று ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக்கினார். 
இந்தியக் கல்வியின் தந்தை மெக்கால்லே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியர்களின் கல்விக்காக மெக்கால்லே எவ்வளவு போராடியுள்ளார் என்பதும் அதைத் தடுக்க பார்ப்பனர்கள் எவ்வளவு போராடியுள்ளனர் என்பதும் தெளிவாக தெரிகிறது. 

பதிவு நீண்டு விட்டதால் குருகுல கல்வி குறித்து அடுத்து எழுதுகிறேன். 

ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் பகிருங்கள். பிரபலங்களிடமும் பகிரச் சொல்லி வேண்டுங்கள். உண்மை எல்லோரும் அறியட்டும். 


அவருடைய நாட்குறிப்பையும் சான்றாக இத்துடன் இணைத்துள்ளேன். இதில் நான் பகிர்ந்துள்ள அனைத்துக்கும் சான்று உள்ளது. 


http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html


https://www.facebook.com/photo.php?fbid=1389548368041152&set=a.1379175415745114.1073741827.100009580054564&type=1&__mref=message_bubble

No comments:

Post a Comment