Wednesday, August 26, 2015

புத்த மார்க்கம் தழுவியபோது அம்பேத்கர் ஏற்ற உறுதிமொழிகள்

உறுதிமொழிகள் பின்வருமாறு:

1) நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவைகளை கடவுளாக மதிக்க மாட்டேன் - அவர்களை வணங்க மாட்டேன்.

2) இராமனையோ, கிருஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அது மட்டுமல்ல அவர்களை நான் வணங்க மாட்டேன்.

3) இந்து மதத்தில் உள்ள கடவுள்களான கவுரி அல்லது கணபதி அல்லது இந்து மதத்தில் சொல்லபடுகின்ற எந்த கடவுளையும் வணங்க மாட்டேன். ஏற்க மாட்டேன்.

4) கடவுள் என்பவர் அவதாரம் எடுத்தார் என்ற அந்தக் கருத்தை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

5) புத்தர் என்பவர் மகாவிஷ்ணுவினுடைய அவதாரம் என்ற பிரசாரத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

6) சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் போடுவது மாதிரி சடங்குகளை ஒரு போதும் இனி நான் செய்ய மாட்டேன்.

7) பார்ப்பனீய மதம் தான் இந்து மதம். இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. புத்த நெறியில் தம்மத்திற்கு எதிரான எந்த செயலிலும் நான் ஈடுபட மாட்டேன்.

8) பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகள் எதிலும் நான் என்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டேன். 9) எல்லா மனிதர்களையும் சமத்துவமாகக் கருதுவேன்.

10) நான் சமத்துவத்திற்காகத்தான் பாடுபடுகிறேன்.

11) புத்தர் சொன்ன எட்டு வழிகளான நேர்மை, நியாயம், ஒழுக்கம் போன்ற அந்த எட்டு வழிகளையும் நான் கடைப்பிடிப்பேன்.

12) புத்தர் சொன்ன 10 உறுதிமொழிகளை நான் ஏற்பேன்.

13) நான் எல்லா மனிதர்களுக்கும் கருணை காட்டு வதும், அவர்களை அலட்சியப்படுத்தாமல் அவர்களைப் பற்றிய சிந்தனைக்கும் ஆளாவேன்.

14) நான் திருட மாட்டேன்.

15) நான் பொய் சொல்ல மாட்டேன்.

16) நான் எந்தவிதமான தீய போதைக்கும் அடிமை ஆக மாட்டேன்.

17) நான் மதுவைக் குடிக்க மாட்டேன்.

18) புத்த நெறியின் தம்மம் என்கிற அறவழியில் உள்ள மூன்று கொள்கைகள் ஆன தியானம், சீலம், கருணை என்னும் அடித்தளங்கள் மீதே என் வாழ்க்கையை அமைத்து நடப்பேன்.

19) மனித இனத்தில் என்னுடைய பழைமையான குடியானவர் வகுப்பினரின் முன்னேற்றத்தைத் தடுத்தும், அந்த மனிதப் பிறவிகளை இழிவானவர்களாக சம உரிமை அற்றவர்களாக எண்ணி ஒடுக்கியதும் இந்து மதமே. எனவே அத்தகைய இந்து மதத்தை நான் துறக்கிறேன்.

20) இதுதான் (இப்படி இந்து மதத்தைத் துறந்து வெளியேறுவதுதான்) உண்மையான தம்மம் என்கிற அறவழி என்பதாக புரிந்து கொள்கிறேன்.

21) இப்பொழுதுதான் ஒரு புதிய பிறவியை எடுத்திருப்பதாக நான் எண்ணுகிறேன்.

22) இந்த நேரம் முதல் இனிமேல் புத்தருடைய போதனைகள் வழியே நடந்து கொள்வேன் என்னும் சூளுரையை எடுத்து கொள்கிறேன்.

மேற்கண்ட தனித்துவமான 22 உறுதிமொழிகளையும் ஏற்றுக் கொண்டு

23) புத்தமே எனக்கு அடைக்கலம் (புத்தம் சரணம் கச்சாமி) 

24) தம்மமே எனக்கு அடைக்கலம் (தம்மம் சரணம் கச்சாமி) 

25) சங்கமே எனக்கு அடைக்கலாம் (சங்கம் சரணம் கச்சாமி)

No comments:

Post a Comment