Tuesday, September 29, 2015

மினாவில் ஏற்பட்ட பாரிய சன நெரிசல் 2015

மக்கா உயிரிழப்புக்கள் குறித்து ஈரான் துள்ளிக் குதிப்பது ஏன்?
முஹம்மத் பகீஹுத்தீன்

24.9.2015 வியாழன், தியாகத் திருநாள் அன்று மினாவில் ஏற்பட்ட பாரிய சன நெரிசல் காரணமாக 769 ஹஜ்ஜாஜிகள் மரணமடைந்துள்ளதுடன் 934 பேர் காயமடைந்துள்ளனர் என சவுதி சிவில் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

Tuesday, September 15, 2015

இந்தியாவின் சராசரி தனிமனித ஆண்டு வருமானம் ரூபாய்.60000. இதன்படி இந்தியாவில் மிக குறைவான தனிமனித வருமானம் பெரும் மாநிலம் பீகார்..! அதன் தனிமனித ஆண்டு வருமானம் வெறும் 22000 ரூபாய் மட்டுமே.
இந்த அடிப்படையில் இந்தியாவின் வறுமையான மாநிலங்கள்:
  1. பீகார்‬
  2. சட்டீஸ்கர்‬ 
  3. ஜார்க்கண்ட்‬ 
  4. உத்திரப்பிரதேசம்‬ 
  5. மத்தியப்பிரதேசம்‬ 
  6. ஹிமாச்சல்‬

இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் மிக மிக கடைசி இடங்களில் இருக்கும் மாநிலங்கள்:
  1. பீகார்
  2. சட்டீஸ்கர் 
  3. ஜார்க்கண்ட் 
  4. உத்திரப்பிரதேசம்
  5. மத்தியபிரதேசம்‬
  6. ஹிமாச்சல்
இந்தியாவில் இந்தி மொழி மிக மிக அதிகமாக பேசும் மாநிலங்களில் முதன்மையான மாநிலங்கள்:
  1. பீகார்
  2. சட்டீஸ்கர் 
  3. ஜார்க்கண்ட் 
  4. உத்திரப்பிரதேசம்
  5. மத்தியபிரதேசம்‬
  6. ஹிமாச்சல்

மேற்கண்ட இந்த புள்ளி விவரங்கள் மூலம் அறியப்படுபவைகள்..
1) இந்தி மொழி தான் மூளையை வளர்த்து அறிவை பெருக்குகிறது என்பது பொய்..
2) இந்தி மொழி கற்றால்தான் பெருசா சம்பாதிக்க முடியும் என்பது பொய்... 
3) இந்தி பேசினால் தான் நம் வாழ்வாதாரம் சிறப்படையும் என்பது பொய்.. 
4) இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு இணைப்பு மொழியான ஆங்கிலமே காரணம்... 
5) இந்தியாவில் இலக்கியம், பண்பாடு,கல்வி,வேலைவாய்ப்பு,தனிமனித வருமானம்,தொழில் வளர்ச்சி அனைத்திலும் முதன்மையாக விளங்குபவை மகாராட்டிரம்,தமிழ்நாடு, கர்நாடகம்,ஆந்திரம்,கேரளம் என வட்டார மொழிவாரி மாநிலங்களே...
https://www.facebook.com/nanbangopi/posts/985894354806173

Friday, September 4, 2015

பெரியார் சமஸ்கிருதம் பயிலாதவர் தான்

6) ஈவேரா சமஸ்கிருதம் பயின்றவரா? பின்பு எதை வைத்து இந்து வேதங்களுக்கு அர்த்தம் கூறினார்?

பெரியார் சமஸ்கிருதம் பயிலாதவர் தான். ஆனால் அவர் சொல்லியதில் எது தவறென உங்களால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா? அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதம் பயின்றவர் என்பது மட்டுமல்ல, இந்து மதம் சார்ந்த சமஸ்கிருத அறிவுஜீவிகளின் விளக்கங்களையே மேற்கோள் காட்டி இந்து மதத்தை நார்நாராக கிழித்து தொங்க விட்டார். எதை மறுக்க முடிந்தது உங்களால்? வேதம் என்ன சொல்லுகிறது? யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்றா? எல்லோருக்கும் சாமியை தொட பாத்யதை உண்டு என்றா? பார்ப்பனன் தலையிலும் பிறக்கவில்லை, சூத்திரன் காலிலும் பிறக்க வில்லை, எல்லோரும் சமமென்றா? எதை பெரியார் திரித்துவிட்டார்? இந்து மத வேதங்களும் புராணங்களும் ஆபாச கதைகளின் தொகுப்பன்றி வேறென்ன?

Thursday, September 3, 2015

காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்

சகோ. Raja Melaiyur ன் கேள்வி...
காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?
இதுபற்றிய_வரலாறு_என்ன‬..?
அதிர்ச்சிகளின் அணிவகுப்புக்கு தயராகுங்கள் சகோஸ்..!
அதிர்ச்சி 1
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

Wednesday, September 2, 2015

அவரென்ன கடவுளா இல்லை கொள்ளைக் கூட்டத் தலைவனா?

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா, ஏன் கடவுளையும், மதத்தையும் தொடர்ந்து விமர்சிக்க வேண்டும் , அவமானப்படுத்த வேண்டும் ? எங்கள் நம்பிக்கைகளில் ஏன் குறுக்கிட வேண்டும் ?

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் பலரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் பெரும்பாலான மக்களுக்கு இது பற்றியெல்லாம் கவலையில்லை. பக்தியை லாபமாக , வாக்காக , அதிகாரமாக மாற்ற நினைக்கிறவர்களுக்குத்தான் இது எப்போதும் தலையாயப் பிரச்சனை.

கல்பர்கியும் சாரு நிவேதாக்களும்

"கல்பர்கி படுகொலையை நான் நியாயப்படுத்தவில்லை. யாருமே நியாயப்படுத்த முடியாது. ஒரு எறும்பைக் கொல்வதற்குக் கூட நமக்கு உரிமை இல்லை. ஆனால் பொதுவெளியில் கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு மக்களையும், மக்களின் நம்பிக்கைகளையும் அவமானப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது. அவமானப்படுத்தினால் அதன் விளைவுகளையும் அந்த முட்டாள் சந்திக்கத்தான் வேண்டும்." 
மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளன் சாரு நிவேதிதா.