Tuesday, September 29, 2015

மினாவில் ஏற்பட்ட பாரிய சன நெரிசல் 2015

மக்கா உயிரிழப்புக்கள் குறித்து ஈரான் துள்ளிக் குதிப்பது ஏன்?
முஹம்மத் பகீஹுத்தீன்

24.9.2015 வியாழன், தியாகத் திருநாள் அன்று மினாவில் ஏற்பட்ட பாரிய சன நெரிசல் காரணமாக 769 ஹஜ்ஜாஜிகள் மரணமடைந்துள்ளதுடன் 934 பேர் காயமடைந்துள்ளனர் என சவுதி சிவில் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.


துல்ஹஜ் பத்தாவது நாள் (24.9.2015) பல இலட்சக் கணக்கான ஹாஜிகள் ஷைத்தானுக்கு கல் எறியும் கடமையை நிறைவேற்றும் பொருட்டு ஜமாரத்தை நோக்கி கூட்டம் கூட்டமாகச் சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்த நெரிசலில் சிக்கி பலியானவர்களில் அதிக தொகையினர் ஈரானியர்களாகும். இந்த அனர்த்தத்தில் 131 ஈரானியர்களும் 87 மோரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்னும் பல நாட்டவர்களும் அடங்குவர். இந் நிகழ்வு 1990க்கு பின்னர் இடம் பெற்ற பாரிய அனர்த்தம் என்பதில் சந்தேகமில்லை.

ஈரான் அரசு இந்த சம்பவம் குறித்து சவுதியை குற்றம் சாட்டியுள்ளது. துருக்கியின் ஜனாதிபதி அர்துகான் இம்முறை இடம் பெற்ற அனர்தத்திற்கு சவுதியை பலி சுமத்துவது மறுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் காலங்களில் ஈரான் அரசு அரசியல் லாபம் கருதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதுடன் பதாகைகளை சுமந்து கோசங்களையும் எழுப்புவதுண்டு.

1987ல் ஹரம் ஷரீபில் ஈரான் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போது கொமைனியின் புகைப்படங்களை உயர்த்தி பிடித்துக் கொண்டு அமரிக்காவிற்கு எதிராகவும், அன்று ஆட்சியில் இருந்த சத்தாம் ஹுஸைனுக்கு எதிராகவும் கோசம் போட்டுக் கொண்டும் ஹரத்துக்குள் நுளைந்தனர். விளைவாக 402 பலியாகினர்.

2015ம் ஆண்டும் ஹஜ் காலத்தில் இதை ஒத்த அரசியல் நகர்வுகளை ஈரான் மேற்கொள்ளக் கூடும் என அவதானிகள் எதிர்பார்த்திருந்தனர். காரணம் சிரியா விவகாரத்தில் சவுதியின் நகர்வு ஈரானுடன் முரண்படுகிறது. யமனுடான மோதல் ஈரானின் நகர்வுக்கு எதிரான சவுதியின் முன்னெடுப்பாகும்.

எனவே 131 ஈரானியர்களை பலி கெண்ட 2015 மினா அனர்த்தத்தை ஈரான் அரசியலாக்கி சவுதி அரசை தாக்குவதற்குரிய சந்தர்ப்பாகமா மாற்றியுள்ளது.

இதனால் தான் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதி உயர் தலைவர் ஆயுதல்லா அலி கொமைனி அவர்கள் வியாழன் அன்று சன நெரிசல் காரணமாக பலியாகிய மினா அனர்த்தம் குறித்து சவுதி அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி அவர்கள் ஐக்கிய நாடுகள் கூடிய பொதுச் சபையில் உரையாற்றும் போது உயிரழப்புக்களுக்கு சவுதி அரசை குற்றம் சாட்டியதுடன் யாத்திரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவ்வாறே அதிக மக்கள் தொகையுள்ள கூட்டங்களை நிர்வகிக்கும் திறன் சவுதிக்கு இல்லையென்றும் ஹஜ் யாத்திரைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இஸ்லாமிய நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஈரானின் பிரதான மதத்தலைவர் காஷானி சாடியுள்ளார்.

இதைவிட பாரிய உயிரழப்பு ஏற்பட்ட மினா சுரங்கப் பாதை அனர்தத்தில் 1990ம் ஆண்டு 1426 பேர் பலியாகியும் கூட ஈரான் எதுவும் கூறவில்லை. இப்போது மட்டும் சர்வதே விசாரணை எதற்கு?

இன்று ஈரான் அரசு சவுதியுடன் மோதுகிறது. அதன் ஆடுகளமாக யமன் உள்ளது. எனவே சவுதியும் அதன் கூட்டணிகளும் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளது என்பதற்கு அப்பால் இந்த மோதலை ஷீயா-சுன்னி என்ற போராட்டமாக ஈரான் கருதுகிறது. அல்லது பாரசீக அரபு மோதலாக பார்க்கிறது.

நுற்றுக்கணக்கான உயிரிழப்பு சம்பவம் குறித்து கட்டாயம் விசாரிக்க வேண்டும். அதற்கான காரணங்களை கண்டு பிடிக்கத்தான் வேண்டும். இதற்கு பிறகு இதுபோன் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கவனித்துக் கொள்வவது சவுதி அரசின் கடப்பாடு என்பது உண்மைதான். அது குறித்து மௌனமாக இருக்க முடியாது என்பதும் உண்மையே. ஆனால் இதனோடு சேர்த்து உள்நோக்கம் கொண்ட ஈரானிய நரித்தனமான அரசியல் நகர்வு தான் வேதனை தரக்கூடியது.

ஹஜ் காலங்களில் இது போன்ற அனர்த்தங்கள் இதற்கு முன்பும் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன.

1975ம் ஆண்டு ஹஜ் யாத்திரிகளின் கூடாரமொன்றில் கேஸ் சிலின்டர் வெடித்ததனால் ஏற்பட்ட தீ விபத்தால் 200 பேர் உயிரிழந்தனர்.

1979ம் ஆண்டு நவம்பர் 20ல் ஜுஹைமான் அல்-உதைபி என்ற தீவிரவாதியின் தலைமையில் 200ற்கு மேற்பட்ட ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் ஹரத்தில் இருந்த ஹஜ்ஜாஜிகளை பணயக்கைதிகாள வைத்துக் கொண்டு ஹரம் ஷரீப் ஆக்கிரமித்தனர். சுமார் இரண்டு வாரங்கள் கழித்து ஹரம் மீட்கப்பட்டது. இந் நிகழ்வில் சுமார் 153 பேர் உயிரிழந்தனர்.

1987ல் ஈரானிய யாத்திரிகள் ஹரத்தில் மேற்கொண்ட அரசியல் ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களை திகிலடையச் செய்தது. இதில் 402 பேர் பலியானார்கள். அவர்களில் 275 பேர் வம்புக்கு சென்ற ஈரானியர்களாகும். ஏனையோர் சவுதி காவல் படையினர். இந் நிகழ்வைத் தொடர்ந்து ஈராணியர்கள் 1991 ஆண்டு வரை ஹஜ் கடமைக்கு சமூகம் தரவில்லை.

1989ம் ஆண்டு குவைத் நாட்டின் பிரஜாவுரிமையுடைய ஷீயாக்கள் 16 பேர் ஹஜ்ஜாஜிகள் மீது தாக்குதல் நடத்தியன் விளைவாக ஒருவர் மரணமடைந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர். வீண் வம்பு செய்த 16 குவைத் ஷீயாக்களும் விசாரனையின் பின்னர் தூக்கிலடப்பட்டனர்.

1990ம் ஆண்டு மினா சுரங்கப் பாதையில் செயற்கை வாயு ஸிஸ்டம் செயலிழந்ததால் யாத்திரிகள் நெரிசலுக்கு சிக்கி 1426 பேர் பலியாகினர். இந் நிகழ்வுக்குப் பின் ஏற்பட்ட பாரிய சோக நிகழ்வு இம்முறை (2015ல்) மினாவில் நடைபெற்ற அனர்த்தமாகும்.

1994ம் ஆண்டு ஷைத்தானுக்கு கல் எறியும் கடமையை நிறைவேற்றும் பொருட்டு ஜமாரத்தை நோக்கி கூட்டம் கூட்டமாகச் சென்ற வேளையில் ஏற்பட சன நெரிசல் காரணமாக 270 பேர் உயிரிழந்தனர்.

1997ம் ஆண்டு மினாவில் ஹீட்டரொன்று தீப்பற்றி யாத்திரிகளின் கூடாரங்களுக்கு தாவியதால் 343 பலியானதுடன் 1500 எரிகாயங்களுக்கு உட்பட்டனர்.

1998ம் ஆண்டு மினாவில் ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக 118 பேர் உயிரிழந்தனர்.

அவ்வாறே மினாவில் இடம்பெற்ற சன நெரிசல் காரணமாக 
2001ம் ஆண்டு 35 ஹாஜிகளும் 
2003ம் ஆண்டு ஆறு பெண்கள் உட்பட 14 யாத்திரகளும் 
2004ம் ஆண்டு 251 ஹஜ்ஜாஜிகளும் 
2005ம் ஆண்டு மூன்று ஹாஜிகளும் 
2006ம் ஆண்டு 364 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

https://www.facebook.com/Fakeehudeenm/posts/902631306438658?hc_location=ufi

No comments:

Post a Comment