Wednesday, September 2, 2015

கல்பர்கியும் சாரு நிவேதாக்களும்

"கல்பர்கி படுகொலையை நான் நியாயப்படுத்தவில்லை. யாருமே நியாயப்படுத்த முடியாது. ஒரு எறும்பைக் கொல்வதற்குக் கூட நமக்கு உரிமை இல்லை. ஆனால் பொதுவெளியில் கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு மக்களையும், மக்களின் நம்பிக்கைகளையும் அவமானப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது. அவமானப்படுத்தினால் அதன் விளைவுகளையும் அந்த முட்டாள் சந்திக்கத்தான் வேண்டும்." 
மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளன் சாரு நிவேதிதா.


மக்களையும் மக்களின் நம்பிக்கைகளையும் அவமானப்படுத்துவது யார்? கடவுளின் பேரால் ஒரு பிரிவினர்தான் உயர்ந்தவர்கள், மற்றவர்களெல்லாம் சூத்திரர்கள், வேசி மக்கள் என்பது எந்த மக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் அவமானப்படுத்தவில்லையா? அல்லது அவர்களெல்லாம் மக்களே இல்லையா?

கடவுள் நம்பிக்கையை காரணம் காட்டி நீங்களெல்லாம் தாழ்ந்த ஜாதி என வக்கிரம் கொட்டுபவர்கள் தான் எங்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தாதீர்கள், அப்படி கொச்சைப்படுத்தினால் அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்கத்தான் வேண்டும் , அதாவது நாங்கள் கொலை செய்வோம் தான் என தங்கள் சாதி, மத வெறிக்கு நியாயம் கற்பிப்பது அபத்தமானது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கதும் கூட.

எறும்பைக் கூட கொல்வது பாவம் தான் என உத்தமவேடம் தரிப்பவர்களால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளின் பட்டியல் வெகு நீளம். இந்து மதத்துக்குள்ளேயே வைணவர்களையும் சைவர்களையும் அரச உதவியோடு ஒருவரையொருவர் கொன்று குவித்த கதைகளும், பார்ப்பனீய வெறி கொன்று தீர்த்த பவுத்தர்கள் மற்றும் சமணர்களின் ரத்தக்கறைகளும் இன்னமும் காற்றில் வீசி நெடியேற்றிக்கொண்டே இருக்கின்றன.

உலகில் மக்கள் போர்களால் இறந்ததை விட மதவெறியால் மாண்டதுதான் அதிகம். இன்னும் சொல்லப்போனால் மதவெறிதான் பல போர்களுக்கு காரணியாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன. அந்த மதவெறிக்கு இப்போது பலியாகி இருப்பவர்தான் கல்பர்கி.

தங்களுடைய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று சொல்பவர்களுடைய நம்பிக்கை தான் என்ன? நாங்கள் தான் பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள், அக்கினிக்குண்டத்திலிருந்து பிறந்தவர்கள், இந்திரனின் வாரிசுகள், ஆக நீங்களெல்லாம் எங்கள் அடிமைகள், நீங்கள் எங்களுக்கு சேவகம் செய்ய வேண்டியவர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் கிடக்க வேண்டியவர்கள் - இதுதானே உங்கள் நம்பிக்கை.

நாங்கள் பிரம்மனின் தலையிலோ, தோளிலோ, தொடையிலோ, காலிலோ பிறந்தவர்கள் அல்ல. இயற்கையின் முறைப்படி எங்கள் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்கள், நீ யாரடா நாயே எங்களை அடக்கி ஆள என நாங்கள் குரல் கொடுப்பது உங்கள் நம்பிக்கையை சிதைக்குமெனில், அந்த நம்பிக்கைக்கு காரணமான கடவுளர்களையும் சேர்த்தே தான் நாங்கள் சிதைக்க வேண்டியிருக்கிறது.

ஒரே தாய் தந்தைக்கு பிறந்த பிள்ளைகளில் திறன் வேறுபாடு இருக்கலாம், அது சூழல் சார்ந்தது. ஆனால் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு இருக்க முடியுமா? எல்லாவற்றையும் கடவுள் தான் படைத்தார் எனில் ஒருவனை உயர்வாகவும் மற்றவனை தாழ்வாகவும் படைப்பதுதான் எல்லாம் நல்லவரான கடவுள் தன்மையா?

இப்படி இல்லாத கடவுளை வைத்து கதைகளை உண்டாக்கி எங்களை உங்கள் மதவெறி தாழ்த்துமெனில் அந்த இல்லாத கடவுள் மாயை உடைத்தெறியப்பட வேண்டுமென்பதில் என்ன மாற்று இருக்கப்போகிறது? உன்னை தாழ்ந்தவனாக பிறப்பித்ததாக சொல்லப்படும் கடவுளிடம் இறைஞ்சுவதால் உனக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது?

சரி, கடவுளை விமர்சிப்பதை இங்கு யாருமே விரும்பவில்லையா? நாம் எல்லோருமே நாத்திகர்கள் தான், ஏதேனும் ஒரு கடவுளை மறுக்கிறோம் என்ற வகையில். இங்கு இந்து மதத்தை, இந்து கடவுள்களை விமர்சித்தால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ரசிப்பார்கள். இஸ்லாமியத்தை விமர்சித்தால் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ரசிப்பார்கள். கிறிஸ்தவத்தை விமர்சித்தால் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ரசிப்பார்கள். கடவுள் மீதான விமர்சனத்தை நாம் ரசிக்கவே செய்கிறோம், ஆனால் ஒரு நிபந்தனையுடன். அந்த நிபந்தனை தனது மதத்தை, தனது கடவுளை மட்டும் விமர்சிக்கக்கூடாது என்பது தான்.

நமக்குள் எப்போதும் விழிப்பாயிருக்கிற மதவெறி தான் நாம் சார்ந்த மதம், கடவுள் மீது விருப்பையும் மற்ற மத, கடவுள் மீது வெறுப்பையும் உண்டு பண்ணுகிறது. கல்பர்கியை முட்டாள் என்று விமர்சிக்கிற சாரு போன்ற அறிவு மேதாவிகள் இருக்கவேண்டிய இடம் நிச்சயம் இதுவல்ல, மல தொட்டி தான்.

உண்மையில் தன்னை தாழ்ந்தவனாக கற்பித்த கடவுளிடமே கையேந்தி கைகூப்பி நிற்கிற மக்களாய் இருக்கும் வரை நாங்கள் முட்டாள்கள் தான். ஆனால் உண்மையில் எது கடவுள், எது மதம்? யாருக்காக மதங்களும் கடவுள்களும்? அவைகளின் நோக்கமென்ன? அவைகளால் நமக்கு கிடைத்த அனுகூலமென்ன? நமது இழிவு நீங்க நாம் செய்ய வேண்டியதென்ன என்றொரு தெளிவு எங்கள் மக்களுக்கு வந்தே தீரும். அன்று உங்கள் நம்பிக்கைகளும் மதங்களும் கடவுள்களும் மீண்டும் எழ முடியாத படுகுழியில் தள்ளி வீழ்த்தப்படும். அப்போது எங்கள் அனைவருக்குமான மதம் மனிதமாய் இருக்கும். நாங்களே கடவுளாயிருப்போம்!

https://www.facebook.com/dleokommedu/posts/945387832185227



சாரு நிவேதிதா.... ஒரு மனநோயாளியா?..

மனிதநேயம் கொண்ட கன்னட எழுத்தாளர் கல்புர்கி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். சாரு நிவேதிதா. அக்கருத்துக்கள், இவர் ஓர் எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு, கருத்து கூறல் என்பதாய் மனநோயாளியினும் கீழாய் உளறிக்கொட்டியிருக்கிறார்!

கருத்துச் சுதந்திரம் என்பதற்கு இவர் கூறும் விளக்கம் முட்டாள் தனத்தின் முதல் தகுதி பெற்றதாகும். மதமும் கடவுளும் இந்தியாவில் புனிதம் என்கிறார். யாருக்கு? அதை ஏற்பவர்க்கு. ஏற்காதவர்க்கு அது எப்படி புனிதமாகும்? மனைவிக்கு கொலைகாரக் கணவன் கூட புனிதம் தான். அதற்காக அவனைக் காவல்துறை கைது செய்யக்கூடாதா? நீதிமன்றம் தண்டிக்க கூடாதா?

கடவுளும் மதமும் புனிதம் என்று நினைக்க ஒருவர்க்கு உரிமை உள்ளது போலவே, அவை புனிதமல்ல, அவை மூடதனத்தின் முடை நாற்றம் எனறு சொல்லுகின்ற உரிமையும் மற்றவருக்கு உண்டு. கடவுளை பற்றி பெருமையாய் பேசுகிறவனுக்கு மறுப்பாய் கருத்துக் கூறுவது கருத்துச் சுதந்திரம். ஆனால், கடவுளைப் பெருமையாய் பேசாதே என்று தடுத்தால் மட்டுமே அது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த அடிப்படை கூடபுரியாத இவரெல்லாம் ஓர் எழுத்தாளர் என்று ‘பந்தா’ பண்ணிக் கொள்ளுவது கேவலத்திலும் கேவலம்!

தந்தை பெரியார் விமர்சிக்காத மதமா? கடவுளா? அதற்காக பெரியாரை கொலை செய்தார்களா? பெரியார் இன்றளவும் பக்தர்கள் உள்ளத்திலும் உயர்வாகக் குடியிருக்கிறாரே!

அம்மை மாரியாத்தாள் சீற்றம்; காலரா காளியாத்தாள் சீற்றம் என்று பக்தன் சொன்னால், மருத்துவரும், விஞ்ஞானியும், பகுத்தறிவாளரும் அதை எதிர்க்காமல் இருக்க முடியுமா? அவை நோய்கள் என்று சொல்லி சிகிச்சை செய்யாமல் இருக்க முடியுமா? பிறமதங்களை விமர்சித்திருந்தால் அவர் 20 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டிருப்பாராம்! இந்த அரைவேக்காடு சொல்கிறது.

இஸ்லாம் மதத்தை எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அதேபோல, கிருத்துவ மதத்தையும் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் கொல்லப்படவில்லையே! தந்தை பெரியார் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.... என்ற வாசகங்களை நீதிமன்றமே ஏற்றுள்ளதே!

சுயநல மதவெறி கூட்டத்தைத் தவிர மற்ற மக்கள் அதை குரோதமாக எண்ணுவதில்லை. சிந்திக்கவே செய்கின்றனர். அப்படிச் சிந்தித்தால் எவ்வளவோ மூடச்செயல்கள் ஒழிந்துள்ளன.

எக்கருத்தையும், எதையும் ஒருவன் நம்பவும், ஏற்கவும் உரிமை உள்ளது போலவே, அவற்றை மறுத்துப் பேசவும், உண்மை சொல்லவும் மற்றவர்க்கு உரிமையுண்டு. இது புரியாம உளரும் நீரெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதே அவமானம்.

97% மக்களை சூத்திரன் என்று இந்துமதம் சொல்கிறது. மதம் சொல்வதை அப்படியே ஏற்கமுடியுமா? பிராமணன் முகத்தில் பிறந்தான், சூத்திரன் காலில் பிறந்தான் என்று மதம் சொல்கிறது ஏற்கமுடியுமா? சூத்திரன் படிக்கக் கூடாது சாஸ்த்திரம் சொல்கிறது ஏற்கமுடியுமா?

ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளனை மதவெறியர்கள் கொலை செய்வதை நியாயப்படுத்தவில்லை என்று சொல்லி நியாயப் படித்துவது அயோக்கியத்தனம் அல்லவா?

பேசாமல் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து ஆயுதம் ஏந்தும் அடியாளாய் மாறும்!

பேனா பிடிக்க உமக்கு இனி யோக்கியதை இல்லை!

- மஞ்சை வசந்தன் https://www.facebook.com/manjaivasanthanfas



சாரு நிவேதிதாவுக்கு டிரான்ஸ்கிரசிவ் என்பதற்கான அரிச்சுவடியே தெரியாது. டிரான்ஸ்கிரசிவ் என்பவன் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டம், நிலவும் சமூக நடைமுறைகள், வழக்கங்கள் என்பவற்றை மீறுகிறவன். உலக அளவில் கை டெபோர்ட், ஜின்ஸ்பர்க், கேத்தி ஆக்கர், தமிழகத்தில் பெரியார், பிரமிள் போன்றவர்களை அப்படிக் கூறலாம். கறாரான அர்த்தத்தில் டிரான்ஸ்கிரசிவ் என்பவன் நிலவும் அமைப்பை நிராகரித்து, மீறச்செல்பவன்.
ஸார்த்தரையும் பெரியாரையும் சே குவேராவையும் படித்த ஒருவன் இப்படித்தான் இருப்பான். சாரு நிவேதிதா அழுகி நாறிப்போன கேடுகெட்ட ஒரு பிலிஸ்டைன். அவரது பாலுறவு எழுத்துக்கள் பெண்களையும் பெண் குழந்தைளையும் விகாரப்படுத்தும் எழுத்துக்கள். குழந்தைளைக் காமுறுவது கலகமும் அல்ல டிரான்கிரசிவ் மனமும் அல்ல. அவன் அழுகி நாறுபவன். இந்தியச் சூழலில் மோடி ஆதரவாளன், இந்துத்துவ அமைப்பில் சென்று பேசுகிறவன், நித்தியானந்தாவுக்காக வக்காலத்து வாங்கியவன், இந்துத்துவாதிகளின் கொலைகளை ஆதரிப்பவன் டிரான்ஸ்கிரசிவ் ஆக இருக்க முடியாது.
ஓன்றைக் குறித்த ஆதரவோ மறுப்போ ஒருவனது சிந்தனை வளர்ச்சியின்-தர்க்கத்தின் பாற்பட்டதாக இருக்க வேண்டும். சாரு நிவேதிதா அவ்வப்போதைய சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரி கவன ஈர்ப்புக்கு எழுதுகிற, அதிர்ச்சி மதிப்புக்காகப் பேசுகிற ஒரு ஒளறுவாயன். சாரு நிவேதிதாவுக்கு அறிவுஜீவி எழுத்தாளன் எனும் பிம்பத்தை உருவாக்கிய பெரும்பாவம் அ.மார்க்சுக்கும் மனுஷ்யுபத்திரனுக்கும் உரியது.
https://www.facebook.com/kasthurisamy.rajendran/posts/1633460803563699

No comments:

Post a Comment