Wednesday, February 1, 2017

காவல்துறை அரசின் ஏவல் துறை

என்னதான் காவல்துறை அரசின் ஏவல் துறையாய் இருந்தாலும்

சாதாரண மனிதர்களின் பல வாழ்க்கையே சிதைத்திருக்கிறார்கள் பொய்வழக்கு புணைந்து

அடித்த அடியில் அவமானம் தாளாமல் தற்கொலையும் செய்திருக்கிறார்கள் பலபேர்

எந்த ஒரு ஆர்ப்பாட்டம் போராட்டம் என்றாலும் இவர்களிடம்தான் அனுமதியே வாங்க வேண்டும்

இவ்வளவு ஒருதலை பட்ச அதிகாரக்குவியலாக உள்ள காவத்துறையின் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் சில்லறை சீர்த்திருத்தம் பேசி பயனில்லை

நீதிமன்றத்துள்ளே வழக்கறிஞரை பூந்து தாக்கியதில் எத்தனை காவலர் தண்டிக்கப்பட்டனர்????

எனவே அரசுகள் மாறலாம்,இவர்கள் அதிகாரத்திமிரை யார் மாற்றுவது???

காவல்துறை செயல்பாடுகளின் அடிப்படை மாற்றமே - சமூக மாற்றத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க உதவும்

தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி பதவிச் சின்னம்

காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் தலைவர் (IGP) ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து

காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

ஆய்வாளர் (Inspector) மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

உதவி ஆய்வாளர் (Sub-Inspector) இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

தலைமைக் காவலர் (Head Constable) சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

முதல்நிலைக் காவலர் (PC-I) சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) பட்டை எதுவுமில்லை

ஆனால் எல்லாத்துக்கும் மக்களை ஒடுக்கும் லத்தி,துப்பாக்கி இருக்கிறது...

காவல் துறையின் மக்கள் விரோதத்தை மாற்ற குரல் கொடுப்போம்

No comments:

Post a Comment