Saturday, February 18, 2017

செங்கோட்டையன் எஸ்.எஸ்.எல்.சி தான் படித்துள்ளார

Don Ashok
Via Facebook
2017-Feb-18

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எஸ்.எஸ்.எல்.சி தான் படித்துள்ளார் என்று ஆர்.எஸ்.எஸ் புரவலர்களால் நடத்தப்படும் மைலாப்பூர் மாபியா சென்னை மீம்ஸ், புட் சட்னி போன்ற தளங்களும் ஒரு சில அறிவாளி வேதவிற்பன்னர்களும் கேலி பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

செங்கோட்டையனுக்கு 69 வயது.  அவர் காலத்தில் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பாக எஸ்.எஸ்.எல்.சி படிப்பது என்பது சூத்திரர்களுக்கு மிகப்பெரிய சாதனை.  மைலாப்பூர் மாஃபியாக்கள் ஆராத்தி எடுத்து கொண்டாடும் ஊழல்வாதி ஜெயலலிதாவே எஸ்.எஸ்.எல்சி வரை மட்டும் படித்தவர்தான்.  அதுவும் செங்கோட்டையனைப் போல சூழலால் படிப்பை விடாமல் ஆடிப்பாடி நடித்து பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக படிப்பை விட்டவர்.

சென்னை மீம்ஸ், புட்சட்னிக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ்சினால் கொலை முயற்சிக்கு உள்ளான திராவிட ஸ்லீப்பர் செல் காமராசர் பெரியாரின் ஆதரவோடு கொடுத்த வலுவான அடித்தளத்தில் ஆரம்பக்கல்வி பயிலத்தொடங்கிய நம்மவர்கள், அறிஞர் அண்ணா , கலைஞர் ஆட்சியின்போது, அதாவது 70களில் பள்ளி இறுதிக்கல்வியையே எட்டினர்.  அது 80களில் +2 படித்து முடிப்பது என்பது சர்வ சாதரணமாக ஆகியது.  90களில் கல்லூரிப்படிப்பு முடிப்பது என்பது நம் திராவிட சமூகநீதியால் இயல்பாகிப்போனது.  2000களில் பொறியியல் பட்டம் என்பது அடிப்படையாகிவிட்டது.  திராவிட சமூகநீதி உச்சம் அடையும் நேரத்தில் யார் கண்டது ஆராய்ச்சி படிப்பு படிக்கவில்லை என்றால் சமூகம் ஒருபடி கீழாக பார்க்கும் நிலைகூட வரலாம்.

இன்றிருக்கும் கல்விச்சூழலை வைத்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.எஸ்.எல்.சி படித்த ஒருவரை கேலி செய்வது என்பது, மாடர்ன் உடை உடுத்தும் நாடார்கள், இந்துமத சட்டத்தின்பேரில் மார்ச்சீலை போடாமல் இருந்த தங்கள் பாட்டிகளை  நாகரீமற்றவர்கள் என கேலி செய்யும் செயலுக்கு ஒப்பானதாகும். 

அன்பு சூத்திரர்களே, ஒடுக்கப்பட்டவர்களே செங்கோட்டையனை விமர்சிக்க நமக்கு 1000 காரணங்கள் உண்டு, ஆனால் அன்றே கடும் சிரத்தை எடுத்து பெரும்பாலானோர்க்கு மறுக்கப்பட்ட கல்வியை பெற்ற அவரை காவி சில்வண்டுகளின் ரீங்காரத்தில் மயங்கி கேலி பேசாதீர்கள்.  நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டினால் உங்களுக்கு கருடபுராணத்தின்படி தண்டனை தர பத்ரி சேஷாத்ரிகளும், சுமந்த்.சி.ராமன்களும் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment