Wednesday, February 22, 2017

Menstrual cramps

Dr Dinesh Kumar
Via Facebook
2017-Feb-22

Menstrual cramps

நம்மூரில் பெண்கள் menstrual cramps ஐ அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.. ஒன்று அதனை வெளியில் தெரிவிக்க கொள்ளும் தயக்கம், அப்படியே சொன்னாலும், "இது எல்லாருக்கும் வர்றதுதான??? நீ மட்டும் ஏன் ஒவரா React பண்ற??" என்று பெண்களே உதாசீனப்படுத்துவார்கள் என்ற நிலை தான்..

இதற்கு சுடுதண்ணீர் ஒத்தடம், வெந்தயம் போன்ற கை வைத்தியம் மட்டுமே பெரும்பாலான பெண்களுக்கான ஒரே available உபாயங்கள்.. சிலர் கடைக்குச் சென்று, எதோ வலி அல்லது வயிற்று வலி எனச் சொல்லி அவர்கள் கொடுக்கும் தேவையற்ற வலி நிவாரணிகள், antacids போன்றவற்றை உட்கொண்டு சமாளிக்கின்றனர்... ஆனால் சரியான அல்லது specific ஆன வலி நிவாரணியை ( naproxen, acetaminophen, mephenamic acid) உள்ளிட்டவை கிடைக்கப் பெற்றவர்கள் மிகக் குறைந்த சதவிகிதத்தனரே..

கருப்பையில் உள்ள உட்சுவர் ( endometrium), அதன் இரத்த ஒட்டத்தை இழப்பதால், அதிலிருந்து பிய்ந்து வெளியேறுவது தான் மாதவிலக்கு திரவம்.. இரத்த ஒட்டம் இழப்பதால் prostaglandins சுரக்கும், கூடவே கருப்பை சுருங்கி வெளியேற்றுவதால் வலி இருக்கும்.. இது தான்  menstrual cramps ..

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வோருக்கு வலி அந்த அளவிற்கு இருக்காது..மாத்திரைகளைத் தவிர்த்து இதற்கான உபாயங்கள்:

1. சைவ உணவு, காய்கறிகள்
2. Low fat and high fibre diet
3. காஃபி
4. கவனத்தை திசை திருப்பும் பொழுதுபோக்கு அம்சங்கள்

ஆனால், சிலருக்கு வலி மிக அதிகமாக இருந்தால், மகளிர் மருத்துவரிடம் சென்று, endometriosis, fibroids, cervical stenosis போன்றவற்றை rule out செய்து கொள்வது அவசியம்.. வலியின் அளவு மற்றவருக்கு புரியவைக்க முடியாதமையால், தானாகவே இதனை கவனித்தல் முக்கியம்..

மீள்பதிவு

No comments:

Post a Comment