Sunday, June 23, 2019

பெண்களுக்கு...சில மட்டும் ஆண்களுக்கும் பொருந்தும்...

Paul Rabinson
2019-06-22

பெண்களுக்கு...சில மட்டும் ஆண்களுக்கும் பொருந்தும்...

1. நிறைய படிங்க (நோ எஞ்சினியரிங் ப்ளீஸ்). வேலைக்கு போகாம கல்யாணம் பண்ணாதீங்க.

2. Academics இல்லாம மத்த புத்தகங்களும் படிங்க.. குறிப்பா அரசியல் புத்தகங்கள். பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்துல இருந்து ஆரம்பிக்கலாம்.

3. எத்தன தடவ வேணாலும் காதலிங்க. பட், கல்யாணம் பண்றதா இருந்தா காதல் கல்யாணம் பண்ணுங்க. முக்கியமா உங்க சாதி, மதம் அல்லாத நபர காதலிங்க. அதே போல உறவுகள தெளிவா வரையறுத்துக்கங்க. Undefined relationships-ல் சுப முடிவுகள் வருவதே இல்லை.

4. மெசேஜ், போட்டோஸ் இந்த மாதிரி எடுத்து யாராவது (காதலனே கூட) ப்ளாக்மெயில் பண்ணா பயப்படாதீங்க. அதெல்லாம் தாண்டிய விஷயங்களை கோயில்களிலும் புராணங்களிலும் கொண்ட நாடுதான் நம்ம நாடு. இல்லாத ஒண்ண புதுசா காட்டலன்னு தைரியமா face பண்ணுங்க.

5. காதலிலோ உறவிலோ உடன்பாடு இல்லாம பிரியணும்னு உங்களுக்கு தோணுனாலும் உங்கள காதலிக்கிறவருக்கு தோணுனாலும் accept பண்ணுங்க. Make it hassle free. Social conditioning, family compulsion ங்கற பேருல பழி வாங்கற மைண்ட்செட்டுக்கு வந்துடாதீங்க. காதலை விட பிரிவு புனிதமானது.

6. Sex is a part of life. அதை சுத்தி நிறைய கட்டுப்பாடுகளை சமூகம் கட்டி வச்சிருக்கு. குறிப்பா பெண்ணோட கலவியை சுற்றி. காதலன்கிட்டயோ புருஷன்கிட்டயோ வச்சுக்கிட்ட செக்ஸ், ரிலேஷன்ஷிப்ல இருந்து பிரிய விரும்புற உங்களுக்கு, தடையா இருக்க விட்டுடாதீங்க.

7. ஆண்கள் எப்பவுமே கற்பிதங்கள எல்லாம் பெண்கள் மேலதான் திணிப்பாங்க. அதெல்லாம் பகுத்தறிஞ்சு தூக்கி எறிங்க. விவாகரத்து தப்புங்கறதோ, கல்லானாலும் கணவன் என்பதையோ எல்லாம் ஏத்துக்காதீங்க. தனியா பயணம் ஒருமுறையாவது போங்க. மக்களையும் வாழ்க்கைகளையும் பிரிவினைகளையும் தெரிஞ்சுக்கங்க.

8. கார்ப்பரெட் சொல்ற பெண்ணியத்த எல்லாம் நம்பாதீங்க. குறிப்பா, ஆணை புறக்கணிப்பதும் அவமதிப்பதும் மட்டுமே பெண்ணியம்னு சொல்றவங்கக்கிட்ட இருந்து எட்ட நில்லுங்க. 'ஒரு கோப்பை தண்ணீர் தத்துவம்'னு லெனினும் க்ளாரா ஜெட்கினும் பேசியதை படிங்க. இன்னைக்கு இருக்கற நிலைமைல ஆணும் சுரண்டப்படறான். பெண்ணும் சுரண்டப்படறாங்க. ஆண் என்ற privilege இருப்பதால் கொஞ்சம் குறைவா சுரண்டப்படலாம். ஆனால் சுரண்டப்படுவது உண்மை.

9. காதலை பொறுத்தவரைக்கும் முக்கியமான விஷயம் இருக்கு. ஆணின் சிக்கல்களை ஆணும், பெண்ணின் ஆண் -சார்பு - சிக்கல்களை பெண்ணும் உணர்ந்தும் உணர்த்தியும் கொள்ளும் ஓர் அரசியல் பயணம் அது. அவ்ளோ பெரிய வாய்ப்பை சின்ன சின்ன சினிமாத்தன ஆச்சரியங்கள மட்டும் நிரப்பி வீணடிச்சுடாதீங்க. குறைந்தபட்சம் ஒரு அரசியல் போராட்டத்துலயாவது பங்கெடுங்க. ஒரு அரசியல் மேடைலயாவது பேசுங்க.

10. வீட்டுல அண்ணன், தம்பின்னு worth இல்லாம முக்கியத்துவம் கொடுக்க சொன்னா ஏத்துக்காதீங்க. குழந்தை பெத்துக்கிட்டா, மகன்னு முன்னுரிமை கொடுக்காதீங்க. முக்கியமா அவனுக்கு, பெண் யாருன்னு சொல்லிக் கொடுத்து இயல்பா இருக்க கத்துக் கொடுத்து வளருங்க.

பிகு: இந்த பதிவ பார்த்து நிறைய பேரு துப்புவாங்க. கண்டுக்காதீங்க.

Rajasangeethan பதிவு
#otd

https://www.facebook.com/1352170002/posts/10213279582968073/

No comments:

Post a Comment