நிசப்தன்
2019-09-20
பொண்டாட்டி _ அராத்து
...
ஒரு வாரத்திற்கு முன்பு
எதார்த்தமாக
வாங்கி இரண்டு மாதமாக வாசிக்காமல் இருக்கும்
'பொண்டாட்டி ' நாவலை பொத்தாம் பொதுவாக திறந்து இடையில் ஒரு அத்தியாயத்தை மட்டும் வாசித்தேன் .
அத்தியாயத்தின் பெயர்
பொண்டாட்டி குறுங்கதைகள் _ 1 .பக்கம் 179.
இந்த அத்தியாயத்தில் பரிமளா என்பவள்
தன் தோழியான சாந்தியிடம்
" சாந்தி எனக்கொரு நல்ல பையன சொல்றியா .. ஒரே ஒரு தடவ மட்டும் அவன் கூட படுக்கனும் .அதுக்குப்பிறகு அவன் என்னை தொந்தரவு செய்யக்கூடாது " என கேட்கிறாள் .
சாந்தியும் ' ஊசி ' என்பவனை ஏற்பாடு செய்கிறாள் .கலவி முடிந்து . மீண்டும் ஒரு முறை என கேட்கும் ஊசியிடம் " வேணாம் " என்கிறாள் .
ஊசி " அது என்னா ஒரு தடவைதான் ... " என்கிறான் .
இதற்கு அவள் சொல்லும் பதில்
காலம் காலமாய்
உலகம் முழுக்க
சமூகமும் ஆண்களும் பெண்கள் மீது செலுத்திய , செலுத்திக்கொண்டிருக்கும் வன்மம் , குரூரம் .
கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்
என் அம்மாவிடம் அப்பா இப்படி கேட்பார்
" கருப்பங்காட்டுக்குள்ள எவன் கூட படுத்துட்டு வரடி .அந்த மாப்ள பேரு என்ன, குச்சிக்காரி " என வசை பெழிந்து அடித்து நொறுக்குவார் .
இன்றும் இந்த குரூரம் என் மனதில் அவ்வப்போது ஓலமிடும். இதை படித்தவுடன்
என் பால்யத்தின் அத்தனை கசப்பும்
தொண்டையை அடைத்தது .
பரிமளாவின் பதில் " என் புருசன லவ் பண்ணித்தான் கட்டிக்கிட்டேன் .பெருசா வேற ஒன்னும் குறையில்ல .ஆனா , எப்ப பார்த்தாலும் தேவடியா தேவடியானு திட்றான் . வேற என்னா வேணா சொல்லித்திட்டு , இது எனக்கு சுத்தமா புடிக்கலனு சாெல்லிட்டேன் .கேக்க மாட்டேங்கிறான் .அதான் இப்படி பண்ணேன் .இனிமே அவன் என்னை தேவடியான்னு கூப்பிட்டாவோ , திட்டினாலோ எனக்கு டென்ஷன் ஆகாது "
இதை மேலோட்டமாக அணுகினால்
இது செக்ஸ் எழுத்து மாதிரிதான் தெரியும் .
அப்படித் தெரிந்தால் எதார்த்தம் பற்றிய எந்த புரிதலும் தரிசனமும் அற்றவர்கள் நீங்கள் என்பதை உறுதியாக சொல்வேன் .
நுட்பமாக வாசித்தால்
"பெண்கள் எவ்ளோ வேணாலும் படிச்சிருக்கலாம் ,
பெரிய பணக்காரியாகவும் இருக்கலாம் ,
ஆனால் ஆணின் போகப்பொருள் தான் பெண் .அவனது நிரந்த உடமைதான் பெண் "
எனும் உலகின் ஆணாதிக்க திமிர் புரியும் .
மேலோட்டமாக வாசித்தால்
பரிமளாக்களின் கசப்பும் ,வலியும் ,துயரமும்,
உளவியில் ரீதியான ஊனப்படுத்தல்களும் தெரியாது.
மேலும்
இந்த அத்தியாயத்தை படித்த போது
அசோகமித்திரனின் ' இன்று 'நாவலில் வரும் சீதாவும் , ந.முத்துச்சாமியின் 'நீர்மை' சிறுகதையும் , தஞ்சை பிரகாஷின் ' வெட்கம் கெட்டவன் ' சிறுகதையும் ஞாபகம் வந்தது .
"நாங்க அப்படி பெண்களை நடத்துவது
இல்லையென " யாரும் கம்பு சுற்ற வேண்டாம் .
பெரும்பான்மையாக இப்படித்தான் நடக்கிறது என்பதே நிதர்சனம் .
சீக்கிரம் முழுதாக வாசிக்க வேண்டும் .
லவ்யூ அராத்து ♥
https://www.facebook.com/100029504687516/posts/204679963858825/
No comments:
Post a Comment