Vini Sharpana
Via Facebook
2017-11-09
ஜாமண்டரி பாக்ஸ் பிரச்சனைக்கெல்லாம் ஜட்ஜை கூப்பிடுவதுபோல்தான் உள்ளது பாஜகவின் ரெய்டுகள்!
• காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ரசிங் வீடுகள்…. நிறுவனங்களில் ரெய்டு….
• பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் லாலு பிரசாத் வீட்டில் ரெய்டு…
• பதான்கோட் தாக்குதலை ஒளிபரப்பியதையடுத்து என்.டி.டி.வி நிறுவனர் பினராய் வீட்டில் ரெய்டு…..
• சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும், இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்குள்ளும் ரெய்டு….
• தமிழகத்தில் தலைதூக்க அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு….
• மோடியின் செல்லக்காசு நடவடிக்கை… ஜி.எஸ்.டி போன்றவற்றை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் பா. சிதம்பரம்…கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் ரெய்டு….
• பதஞ்சலியை பிரபலமாக்க காளீஸ்வரி ( கோல்டு வின்னர்) நிறுவனத்தில் ரெய்டு….
• குஜராத் மாநிலங்களவை எம்.பி அகமது பட்டேலுக்கு ஆதரவான 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டதற்காக, அவர் வீட்டில் ரெய்டு….
• ஜி.எஸ்.டியை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டு வருவதாலும் மெர்சல் படத்திற்கு ஆதரவு கொடுத்ததாலும் நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு…
• சசிகலா குடும்பத்தை மிரட்டி பணிய வைக்க தற்போது அனைத்து இடங்களிலும் ரெய்டு…… இப்படியே பாஜகவின் சி.பி.ஐ மற்றும் ஐ.டி ரெய்டுகள் நீள்ள்ள்ள்ள்ள்ள்கின்றன.
தங்கள் ஆட்சியின் அய்யோக்கியத் திட்டங்களை விமர்சிப்பவர்கள் மீதும்…. ஆட்சி அமையாத மாநிலங்களிலும் தொடர் ரெய்டு விட்டு ரிவெஞ்ச் எடுத்துவரும் பாஜகவை ஒரு முதிர்ச்சியற்றக் கட்சி என்றுதான் கூறுவேன். சிறு விமர்சனங்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத கட்சியாகத்தான் காட்சியளிக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆட்காட்டி விரலே எதிர்கட்சிகள்தான். விமர்சனங்களை எதிர்கொண்டால்தான் எது மக்கள்நலத் திட்டம்? எது மக்கள்விரோதத் திட்டம் என்பதை அறிந்து சிறப்பாக செயலாற்றமுடியும்;தவறுகளை திருத்திக்கொள்ளவும் முடியும். அதைவிடுத்து அதிகாரத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சிப்பவர்கள் மீது பயன்படுத்துவது பாசிச செயலே!
( ரெய்டுகளாக நடத்தி எதிர்கட்சிகளை ஊழல் கட்சிகள்போல் சித்தரிப்பார்கள்.ஆனால், அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவினர் ஊடகங்களில் எதுவும் பேசக்கூடாது என்று மட்டும் உத்தரவு போடுவார்கள் :-) )
By Vini Sharpana
https://m.facebook.com/story.php?story_fbid=540816896268000&id=100010190820245
No comments:
Post a Comment