Monday, January 8, 2018

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?

*ஓட்டுநர் ஜெயராமன்*

“கிழக்கு தாம்பரத்துல பஸ்ஸை எடுக்குறேன்னு வெச்சிக்க, பிராட்வே போய் சேர 28 கிலோ மீட்டர்.

எடையில 36 ஸ்டாப் கீது. எழுவது நிமிஷம் கணக்குல போய் சேரணும். ரோட்டுல டிராபிக் தொல்லை இல்லாத, ஸ்டாப்புல ஆளே இல்லாத விடிகாலை அஞ்சு மணியா இருந்தாலும் அதே கணக்குதான்; டிராபிக் ஜாம் நச்சுற, ஸ்டாப்புக்கு ஸ்டாப் கும்பல் ஏற்ர சாயங்காலம் அஞ்சு மணியா இருந்தாலும் அதே கணக்குதான்.

முன்ன போனாலும் பிரச்னை; பின்ன போனாலும் பிரச்னை. இதுல இன்னொரு சவாலு லிட்டருக்கு 5.5 கி.மீ. வர மாரி ஓட்டணும். இதல்லாம்கூட சமாளிச்சுடலாம். மக்களை சமாளிக்குறது பெரிய பேஜாரு. ஒரு வண்டில 48 பேர் உட்காரலாம். 25 பேர் நிக்கலாம். ஆக, 73 பேர். கணக்குபடிதான் வண்டில ஆள் ஏத்துனோம்னு வெச்சிக்க, நம்மூர்ல பாதி பேர் ரோட்டுல நடந்துதான் போவணும்.

ஒரு கணக்கு சொல்லவா? ஒரு நாளைக்கு நாடு முழுக்க ஓடுற ரயிலுங்க 2.05 கோடிப் பேரை ஏத்திக்கினு போவுது; ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் அரசாங்க பஸ்ஸுங்க எவ்ளோ பேரை ஏத்துறோம் தெரியுமா, 2.10 கோடிப் பேர்! இந்தியாவுலேயே பஸ்ஸுல அதிகமா ஆளுங்களை ஏத்திக்கினு போவறது சென்னைலதான்.

அப்போ நெரிசல் இல்லாம எப்படி இருக்கும்? ஒரு மணி நேரம் உள்ள பிராயணம் செஞ்சிட்டு எறங்குறவங்ளைவிட நாளெல்லாம் புகைலயும் தூசிலயும் வெயில், மழையிலயும் ஆணி அடிச்சா மாரி உக்காந்திக்கினு போற எங்களுக்கு கஸ்டம் ஜாஸ்தி.

ஆனா, பஸ்ஸுக்கு வெளில ரோட்டுல போறவங்களுக்கும் எங்க கஸ்டம் தெர்யாது, பஸ்ஸுக்குள்ள உட்கார்ந்துக்கினு வர்றவங்களுக்கும் எங்க கஸ்டம் புர்யாது.

ரெண்டு உதாரணம் சொல்றேன். படிக்கிற பசங்க இருக்காங்களே, ஓடுற வண்டிலதான் ஏறுவேன், எறங்குவேன்னு சத்தியம் பண்ணாத கொறையாதான் வருவானுங்க இது உள்ள.

டூவீலர்காரங்க எப்ப எங்கெ பூருவாங்கன்னு தெரியாது. இது வெளிய. விதுக்கு விதுக்குன்னு இருக்கும்பா, ஒவ்வொரு நிமிஷமும். ஒரு பக்கம் டப்புன்னு உசுரு பூடும் அவங்களுக்கு. இன்னொரு பக்கம் வாழ்க்கையே பூடும் எங்களுக்கு.

ஒரு சின்ன விபத்து போதும் ஒரு டிரைவரு குடும்பம் சீரழிய. எவ்ளோ பிரச்ன தெரியுமா? மொதல்ல போலீஸ் கேஸு. அதோடு ஆபிஸ்ல சஸ்பெண்டு ஆர்டரு கொடுத்துருவாங்க. அடுத்து, லைசென்ஸு சீசாயிரும். அப்புறம் சம்பளமும் இல்லாம, கேஸையும் நடத்தணும். மீண்டு வர்றதுக்குள்ள போதும்டா சாமீன்னு ஆயிரும். குத்தம் எங்க பக்கம்னு ஆச்சு, அதோட வேலை போச்சு. இந்தப் பதட்டத்துலேயேதான் ஒவ்வொரு நிமிஷமும் வண்டில ஓடணும்.

நாளெல்லாம் உட்கார்ந்திருக்குற ஒடம்பு சூடு. நேரத்துக்குச் சாப்பிட முடியாத கோளாறு. மூணு வேளையும் வெளி சாப்பாடு. பசியை மறக்க கொறைஞ்சது 10 டீ. கூடவே பதட்டம். இவ்வளவு போதாதா? வயித்துப் புண்ணு, முதுகு வலி, இடுப்பு வலி, முட்டி வலி, ரத்த அழுத்தம், சக்கரை வியாதின்னு எல்லாம் வந்திரும்.

ஆனா, எல்லாத்தையும் மீறியும் இந்த வேலை புட்சுருக்குபா.” ஏன் தெரியுமா? "வெறும் காசுக் கணக்குப் பார்த்தா எல்லாம் நஷ்டம். ஆனா, அந்தப் பக்கம் பலனடையுறது யாரு? நம்ம மக்கள்."

---

2015 ன் கொடூர வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து வண்டி ஓட்டியவர்கள் நாங்கள், எங்களிடம் வந்கு யாரும் தொழில் தர்மம் பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.

---

தோழர்களே புரிந்துகொள்ளுவோம், அரசு  போக்குவரத்துத் துறையினர் நடத்திவரும்  வேலை நிறுத்தப் போராட்டம் என்பது  அவர்களாக விரும்பி எடுத்த முடிவு அல்ல.

இந்தப் போராட்டம் தொழிலாளர்கள் மீது  அரசால் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

---

கடந்த #ஜனவரி_4 வியாழக்கிழமை அன்று தொடங்கிய #பஸ்_தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று வரை ஓயவில்லை.

ஆளும் அதிமுகவின் ஆதரவாளர்களை தவிர மீதம் உள்ள அனைத்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன, இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது ஏறக்குறைய 14000 அரசு பேருந்துகள் இயங்கவில்லை.

இதற்கான காரணம் என்ன..??

தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓட்டுநர்களாக (டி பிரிவு) அரசு பணியில் சுமார் 2.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இணையான சம்பளம் தங்களுக்கு வழங்கப்படாதது ஏன்? என்பதுதான் போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கேள்வி.

ஊதிய உயர்வு போன்ற பல்வேறு காரணங்களை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. #போக்குவரத்து_கழக_தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் #23_முறை நடந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு #அடிப்படை_ஊதியம் ரூ.5,200, #தர_ஊதியம் ரூ.1,600 என கணக்கிட்டு ரூ.20,000 வரை மாத ஊதியம் கிடைக்கிறது. ஆனால், கல்வி, சுகாதாரம், மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு தர ஊதியத்தை ரூ.2,400 என்று கணக்கிட்டு ரூ.24,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது அவர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விட அதிக நேரம் பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அரசாங்கம் கூறியுள்ளதை மறுத்துள்ளார்கள்.

2001 முதல் தொழிலாளர்களிடமிருந்து #பிடித்தம் செய்த #7000_கோடி_ரூபாய் பணத்தை அந்தந்த துறையில் அதாவது #அரசு_வருங்கால_வைப்புநிதி ஆணையத்தில், #எல்_ஐ_சி_காப்பீடு பணத்தையும், #சமூக_காப்பீடு_திட்டத்தீன் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட பணமும் மேலும் நன்றி தொகையையும் இது வரை செலுத்தவில்லை மற்றும் அவர்களின் வங்கி கணக்கிலும் இது வரை டெபாசிட் செய்யப்படவில்லை.  இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது.

போக்குவரத்து துறையில் 70 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கடைசியாக வாங்கிய ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறார்கள். தொழிலாளர்கள் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மின்சாரம், பொதுப்பணி, ஆவின் போன்ற துறைகளில் ஓய்வுபெற்ற அடுத்த 30 நாட்களில் ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் #ஜூன்_டிசம்பர் வரையில் ஏறத்தாள 10000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளன. அவர்களுக்கான் நிலுவையில் உள்ள தொகை #800_கோடி_ரூபாய் ஆகும். தனது இறுதி நாட்களில் மருத்துவ செலவிற்கு கூட போதுமான பணம் மற்றும் பெற வேண்டிய சலுகைகள் இல்லாமல் அவர்களின் குடும்பம் அவல நிலையில் உள்ளன.

வயதான காலத்தில் ஓய்வுகாலப் பலன்களை அனுபவிக்காமலேயே கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து #மே_2017 அன்று நடந்த வேலைநிறுத்த போராடத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் #எஸ்மா_சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட #மாயாண்டி_சேர்வை என்கிற 83 வயது முதியவர் #உயர்நீதிமன்ற_நீதிபதிகளுக்கு எழுதிய கடிதத்தை வைத்து நீதிபதிகள் தாமாகவே முன்வந்து #பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்து மீதமுள்ள #1138_கோடி_ரூபாய் ஓய்வூதிய தொகையை தவணை முறையில் படிப்படியாக வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதிலும் அரசு தாமதம் காட்டி வருகிறது தான் வேதனைக்குறிய விஷயம்.  

இதையடுத்து இவை அனைத்தையும் முன்வைத்து #17_தொழிற்சங்க_நிறுவனங்கள் கடந்த ஐந்து நாட்களாக போராடி வருகின்றனர்.

நிறுவாக செலவுக்காக பணத்தை விரயம் செய்த அரசு பெற வேண்டிய அவ்வூழியர்களின் அடிப்படை உரிமை தொகை மற்றும் தர தொகையை தர மறுப்பது மற்றும் குறிப்பிட்ட அரசு துறைக்கு அநீதியை இழைக்கும் தமிழக அரசுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தனது கடுமையான #கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது..

----

No comments:

Post a Comment