- Antony Parimalam
ராஜீவ் கொலைக்கு பின் நடந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை கண்ட திமுகவுக்கு அடுத்த பேரிடியாக இறங்கியது திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த சம்பவம். இது நடந்தது 1993 ல்.
அதற்கு காரணமாக கூறப்பட்டது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின் உளவுத்துறை ஜெயலலிதா தலைமையிலான தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதமும் அதைதொடர்ந்து நடந்த சம்பவங்களும்.
இந்த சம்பவம் நடந்த போது வைகோ திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர். அதாவது 1978 முதல் 1996 வரை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் திமுக வின் உறுப்பினராக இருந்தார்.
அப்படி தொடர்ச்சியாக மூன்றாவது முறை உறுப்பினராக இருந்த போது மாநிலத்திலும் திமுக ஆட்சி, மத்தியிலும் 1989 - 1991 வரை திமுக கூட்டணியின் வி.பி. சிங் தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்தது. திமுக வுக்கும் விடுதலைபுலிகளுக்கும் புரிதல் ஏதும் இல்லா காலம் அது.
திமுக டெலோ வை ஆதரித்தது எம்ஜியார் இறந்த பிறகு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அதிமுக இல்லாத சூழல்அது. இந்த காலகட்டத்தில் தான் கள்ளத்தோணி ஏறி வைகோ, இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தார்.
அந்த சந்திப்பு கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரும் சவாலை ஏற்படுத்தியது அதற்கு காரணம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அடுத்த நாட்டின் எல்லைக்குள் கள்ளத்தோணி ஏறி செல்வது அரசியல் ரீதியாக எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வைகோ வுக்கு தெரியாதது வியப்பே.
அவரின் பயணம் இறுதி வரை கமுக்கமாக வைக்கப்பட்டு அவர் வன்னி சென்றதும் தான் கருணாநிதிக்கே(தன் நெஞ்சுகுழியில் உயிரிருக்கும் வரை கருணாநிதி தான் எல்லாம் என்று சொன்ன வைகோ) தெரியவந்தது. இது அரசியல் எதிரிகளால் மிகப்பெரும் புயலை கிளப்பி விட்டது.
இதே காலகட்டத்தில் தான் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பத்மநாபா படுகொலை, இந்திய ராணுவத்தை கலைஞர் வரவேற்காமை, வைகோவின் கள்ளத்தோணி பயணம் இவை அனைத்தும் சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா, ராஜீவ் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து ராஜீவ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த சந்திரசேகரால் 1991 ஆட்சி கலைக்கப்பட்டது.
இதில் கலைஞரின் செயல்பாடான இந்திய ராணுவத்தை வரவேற்காமை, எம் மக்களை கொன்று குவித்த படை என் நாட்டு படையாகினும் அதை வரவேற்க போகமாட்டேன் என்று சூளுரைத்தது ஒரு நேர்வழி போராட்டம். மற்ற இரண்டும்?
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பின்னணி:
வைகோ திமுகவை விட்டு வெளியேறிய/விலக்கப்பட்ட போது, நான் உயிரினும் மேலாக நினைத்த கருணாநிதியே என்னை சந்தேகப்பட்டு விட்டார் என்பதே வைகோ வின் குற்றசாட்டு .
கருணாநிதி சந்தேகப்பட்டாரா? இல்லையா என்பதற்கு போகுமுன், வைகோ சந்தேகப்படும்படி நடந்தாரா இல்லையா என்பதுதான் கேள்வி
1. மூன்றாவது முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து ஓராண்டு கூட நிறைவடையாத சூழ்நிலையில், தலைவருக்கு தெரியாமல் கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?(டெசோ மூலம் வசூலித்த பணத்தை வாங்க மறுத்து திமுகவை அவமான படுத்திய விடுதலைபுலிகளின் தலைவரை, அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் கட்சியின் தலைவருக்கு தெரியாமல் சந்திக்க சென்றது ஏன்)
2. இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வைகோவுக்கு பாதுகாப்பு அளித்த விடுதலைப்புலிகள் சிலர் மரணமடைந்தனர். இவ்வளவு அபாயகரமான பயணம் மேற்கொள்ளும் நிர்பந்தம் வைகோ வுக்கும், விடுதலை புலிகளுக்கும் ஏற்பட்டது ஏன்?
3.இந்த பயணம் முடிந்து ஓராண்டிற்குள் ராஜீவ் காந்தி கொலை தமிழகத்தில் நிகழ்ந்தது. அதற்கு ஒரு வருடம் முன் பத்மநாபா கொலை நடந்தது. இந்த இரண்டும் விடுதலை புலிகளால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
4. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அதிமுக வுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உறவு அறுபட்ட நிலையில் திமுக வுடனும் பழைய கசப்புகளால் உறவை புதுபிக்க முடிய வில்லை. எனவே திமுக வின் தலைவராக நமக்கு வேண்டப்பட்டவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று விடுதலை புலிகள் நினைத்திருக்கலாம்அதற்கு சரியான சந்தர்ப்பமாக1991 தோல்வியால் துவண்டு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதி இருக்கலாம்.
5. 1990 கள்ளத்தோணி பயணத்திற்கு பின் வைகோ கருணாநிதியை சந்தித்து சமாதானம் செய்திருந்தாலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், சந்தேகம் கொள்ள வைத்திருக்கும். அதுவும் கருணாநிதி போன்ற அரசியல் தலைவருக்கு (எதிர்ப்பையே வாழ்நாள் முழுதும் சந்தித்து கொண்டிருக்கும் ஒருவருக்கு) சந்தேகம் வந்திருந்தாலும் அது நியாயமே.
6. எச்சரிக்கையை வெளியிட்டது நரசிம்ம ராவ் தலைமைலான அரசு. அந்த அறிக்கையை கையளித்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு. அவர்கள் கருணாநிதி பாதுகாப்பு குறித்து பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
7. இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்கு பொதுக்குழுவில் விளக்கம் அளிக்கும் படி வைகோ விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அதை மறுத்து அவர் போட்டி பொதுக்குழுவை கூட்டினார், அறிவாலயத்தை கைப்பற்ற முயன்றார் இறுதியில் கட்சியை கைப்பற்ற முயன்று தோல்விஅடைந்தார். இறுதியாக மதிமுக வை உருவாக்கினார்.

No comments:
Post a Comment