Thursday, March 31, 2016

உதய் எனும் மின்சாரத் திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்தது

Elango Kallanai
via Facebook
2016-Mar-31

தேசியக் கட்சிகள் மாநிலங்களை, மாநிலக் கட்சிகளை மதிக்காமல் செயல்படுவது எப்போதும் நடப்பது. தமிழ்நாட்டில் மட்டுமே தேசியக்கட்சிகளை இவ்வளவு பரிதாபமான நிலையில் தான் வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நடுவண் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை, ஆனவமானவர் என்கிற அர்த்தத்தை கொடுத்திருந்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் பிரச்சனை அதுவல்ல, உதய் எனும் மின்சாரத் திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்ததே காரணம் என்று அறிக்கை விட்டார்கள். தமிழகம் கையெழுத்திட மறுத்ததால் பல மாநிலங்கள் இதன் பாதகத்தின் அடிப்படையில் கையெழுத்திடவில்லை என்பது முன்னேரை பார்த்து சுதாரித்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது.

மக்கள் நலனை ஒட்டி மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வரவில்லை. விவசாயிகளுக்கும் தொழிற்சாலைக்கும் கிடைக்கும் மின்சாரத்தில் இலவசமோ தள்ளுபடியோ கூடாது என்பது உட்பட பல உள்குத்துக்கள் இருக்கிறது. ஆமா No free lunch  எனும் அமெரிக்க வசனத்தை ஏற்றுப் பிறந்தவர்கள் பாஜகவினர். மக்குப் பயலுக. மத்திய அரசின் கட்சி என்ன சொல்கிறது என்றால், தமிழகம் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறது, அதை நாங்கள் குறைத்துக் கொடுப்போம் என்கிறது.

உண்மை என்னவெனில் நிலக்கரிக்கு அதிகமான வரியை மத்திய அரசு விதிப்பதே காரணம் என்று மாநில அரசின் வாதம். முன்பு தேசிய கிரிட்டிர்காக காத்திருந்த போது நமக்கு மின்சாரமே கிடைக்கவில்லை. அதை வைத்து காங்கிரசே திமுக வை பழி வாங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மின்சாரம் அதிக விலைக்கு வாங்கினாலும் தொடர்ச்சியாக கிடைக்கிறது.

மத்திய அரசின் அடியாட்கள் பலர் மின் உற்பத்தியில் பெரும்புள்ளிகள். காற்பறேட்டுகள் மின் உற்பத்தியில் குதித்திருக்கிறார்கள். ரிலையன்ஸ்  அலகு ஒன்றிற்கு மும்பையில் பதினோரு ரூபாய்க்கு விற்கிறது. நான் இது பற்றி கடந்தவருடம்  எழுதியிருந்தேன். ஆம் மின்சக்தியை தனியார்களிடம் இருந்து வாங்கி விற்கும் மத்திய அரசு என்ன சொல்லும், இப்போது பெட்ரோல் விலை உலகளவில் விழுந்திருந்தாலும் ரிலையன்ஸ் சொல்லும் நஷ்டக் கணக்கையே சொல்லும்.

இதை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட மாநில அரசால் முடியாது. உதயில் கை எழுத்திடாதது பற்றி இன்று ஜாவ்தேக்கர் கத்துகிறார். மத்திய அரசே நேரடியாக எல்லா விநியோகங்களையும் கையில் எடுப்பது ஆபத்தானது. மாநில அரசு மின் உற்பத்திக்கு செய்வதற்கு எதிராக சூழலியல் அமைச்சகத்தை வைத்து நிறைய முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதனாலேயே அணுமின் நிலையத்தை நமது தலையில் கட்டப் பார்க்கிறார்கள். சொல்லப் போனால் உள்ளாட்சி அமைப்புகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் பணியை அரசு துவங்குவது விரைவிலேயே நடக்க வேண்டும்.

இந்த உதய் விவகாரத்தில் ஜெயலலிதாவின் வெளிநடப்பை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

No comments:

Post a Comment