Thursday, March 7, 2019

சர்க்காரியா கமிசன், கச்சத்தீவு, எமர்ஜென்சி - கலைஞர்

Jaya Chan Dran
2018-12-23

#சர்க்காரியாகமிசன்_கலைஞரின்_ஆண்மைக்கு_கிடைத்த_பரிசு,,,

கச்சத்தீவு கைவிட்டு போனது MGR இன் கோழைத்தனத்தால் வந்த வினை.

1966 ஜனவரி முதல் மார்ச் 1977 வரை இந்திராதான் இந்தியாவின் பிரதம மந்திரி.

1967 இல் திமுக ஆட்சிக்கு வருகிறது.1969 இல் காங்கிரஸ் உடைகிறது. 1969முதல் 1971 வரை திமுக தயவில் இந்திரா ஆட்சி நடத்துகிறார்.

1971 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது MP தேர்தலும் நடக்கிறது.

இந்த இரு தேர்தல்களிலும் திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுகிறது.

ஆனால் இந்திரா- கலைஞர் மோதல் இங்கேதான் ஆரம்பம்.
காங்கிரஸ் 15 MP சீட்டும் 30 MLA சீட்டும் கேட்க திமுக 5 முதல் 7 MP தொகுதிகளும் 10 முதல் 15 MLA சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என தெரிவித்து விட்டது.

பத்து நாட்கள் பேச்சு வார்த்தை எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் புதுச்சேரி + தமிழ்நாடு க்கு 10 சீட்டை காங்கிரஸ் பெற்று
திமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

ஆனால் அப்போதே திமுகவை ஒழிக்கும் எண்ணம் இந்திராவிற்கு வந்துவிட்டது.

1972 ஆம் ஆண்டு திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தது.

இது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், மாநிலத்துக்கு தனிக்கொடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று கலைஞர் பேசிவந்த நேரம்.

திமுகவின் பலத்தை சீர்குலைக்க எம்ஜியாரை இந்திரா அச்சுறுத்தி வந்த நேரம்.

திமுகவை ஒழிக்க இந்திரா எடுத்த ஆயுதம்தான் MGR. வருமானவரித் துறை மூலம் நடவடிக்கை வரும் என பயந்த MGR கலைஞர் மீது பழி போட்டு 1972 நவம்பரில் அதிமுகவை தொடங்கி ஒரு ஊழல் பட்டியல் என பெரிய பட்டியலை தயாரித்து அதை ஜனாதிபதியிடம் கொடுக்கிறார்.

அதாவது பட்டியலை தந்த MGR அதில் எந்த வித ஆதாரத்தையும் இணைக்கவில்லை.

21-5-1972 அன்று தமிழகத்திற்கு  இந்திரா காந்தி வருகிறார்,
அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் காவேரி பேச்சு வார்த்தை தொடங்குகிறது

அதாவது மே 1972 லேயே காவேரி வழக்கு தற்காலிக வாபஸ் ஆகிறது.

ஆனால் MGR ஊழல் புகார் தந்ததோ நவம்பர் 1972 .

ஊழல் புகாருக்கு பயந்து காவேரி வழக்கை கலைஞர் வாபஸ் பெற்றதாக கூறுகிறார்கள் அறிவிலிகள்😁

இந்திராவின் தீய எண்ணத்தை புரிந்துக் கொண்ட கலைஞர் 1972 க்கு பின்னர் இந்திராவின் நம்பர் 1 எதிரியாக மாறுகிறார்.

1974 இல் கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதை தமிழகத்தில் எதிர்த்த ஒரே ஆண்மகன் கலைஞர்தான்.
இந்திராவின் அடிமை MGR ஒரு வார்த்தை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் நெடுமாறன் இருந்த இடம் தெரியவில்லை.

1974 கட்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழகத்தின் எந்த உரிமையும் பறிபோகவில்லை என்பதும் அந்த ஒப்பந்தமே இன்றும் சட்டப்படி செல்லாது என்பதே உண்மை.

சர்க்காரியா கமிசன் ஒரு பழிவாங்கும் நடவடிக்கைதான்

1) 1974-ல் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்றார் கலைஞர்

2)1974 ஏப்ரல் 20ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

3)1975 ஜூன் 12-ஆம் தேதி இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்ப வழங்க கலைஞர் இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

4)1975 ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழுவில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) 1975 ஜூலை 21 தேதி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக கண்டன குரல்

6)1975 ஆகஸ்ட் 9,10 மற்றும் டிசம்பர் 28ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7) எமர்ஜென்சி விதிகளை கலைஞர் சரியாக கடை பிடிக்காதது இந்திராவிற்கு மிகப்பெரிய எரிச்சல்

மேற்கண்ட காரணங்களால் கொண்டுவரப்பட்டதுதான் சர்க்காரியா கமிசன்.

கலைஞரை ஒழிக்க வேண்டும் என்றே தமிழக ஆளுநரிடம் கட்டாயப்படுத்தி அறிக்கையில் ஒப்பம் பெற்றார் இந்திரா.

1976 பிப்ரவரி 15ம் நாள் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி தான் காரணமாக இருக்கிறார் என்றார்.

நமது கேள்விகள்

1) எமர்ஜென்ஸி போது எமர்ஜென்சியை ஆதரிக்கக் கோரி பலமுறைகள் கலைஞருக்கு தூது அனுப்பினார் இந்திரா.

கலைஞர் நினைத்திருந்தால் இந்திராவுடன் சமாதானமாக போயிருக்க முடியும். சமாதானமாக போயிருந்தால் ஆட்சிக்கலைப்பும் வந்திருக்காது
சர்க்காரியா கமிஷனே வந்திருக்காது என்பது உண்மையா இல்லையா?

2) தன் நலம் கருதியிருந்தால் இந்திராவிற்கு MGR போல ஜால்ரா போட்டு கலைஞர் சர்க்காரியா கமிசனே வரவிடாமல் தடுத்து இருக்க முடியுமே.

கலைஞர் ஆண்மகன் என்பது இப்போதாவது புரிகிறதா?

3) 1972 நவம்பரில் MGR கொடுத்த ஊழல் பட்டியலில் ஆதாரம் இருப்பின் இந்திரா 1972 லேயே சர்க்காரியா கமிசன் போட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாமே ஏன் எடுக்கவில்லை?

1976 ஜனவரி மாதம் 3 வருடம் கலைஞரின் எதிர்ப்பிற்கிடையே இந்திரா அமைதி காத்தது ஏன்?

4) உண்மையில் கலைஞர் ஊழல் செய்திருந்தால் நேரடியாக போலிஸ் நடவடிக்கை கலைஞர் மேல் 1976 லேயே எடுத்திருக்கலாமே , வழக்கும் போட்டிருக்கலாமே ஏன் போடவில்லை? ஜெ மீது கலைஞர் நேரடியாக வழக்கு போடவில்லையா? தண்டனை பெற்று தரவில்லையா?

5) சர்க்காரியா கமிசன் அறிக்கை முதல் பகுதி 1976 லேயே வெளியிடப்பட்டதே அப்போதே இந்திரா நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6) 1977 இல் ஆட்சிக்கு வந்த MGR சர்க்காரியா இறுதி அறிக்கையை வைத்து கலைஞர் மீது வழக்கு போடாதது ஏன்?

7) 1980 இல்தான் திமுக- இந்திரா கூட்டு வந்தது. அதன் பிறகு 1984 இல் ராஜீவ் அதிமுகவுடன் கூட்டு வைத்து பிரதமானார்.

இந்த நேரத்திலாவது ராஜீவ் காந்தியும் எம்ஜி ஆரும் சேர்ந்து சர்க்காரியா கமிசன் ரிப்போர்ட் மீது நடவடிக்கை எடுத்து கலைஞர் மீது வழக்கு போட்டு இருக்கலாமே. ஏன் வழக்கு போடவில்லை?

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராவது தயாரா?

8) எமர்ஜென்சியின் போது நடந்த சர்க்காரியா கமிசன் விசாரணை எப்படி ஒரு பக்க சார்பாக நடந்தது என்பதாவது தெரியுமா?

அரசு சாட்சிகளை விசாரிக்க  கலைஞர் தரப்பிற்கு  அனுமதி இல்லை என்பதாவது தெரியுமா?

பிறகு எப்படி விசாரணை நேர்மையாக இருந்திருக்கும்?

நடந்தது இதுதான்**

MGR 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety) என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு பரிந்துரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள்.
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்

No comments:

Post a Comment