Sunday, March 31, 2019

மனிதன் ஒரு territorial மிருகம்

நியாண்டர் செல்வன்
2019-03-31

பரிதாபகரமானவராக ஆவதை தவிருங்கள்

தொடர்தோல்விகள் நம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஒன்று நம்மை பரிதாபகரமானவர்களாக ஆக்குவதுதான். குறிப்பாக ஆண்களுக்கே இதன் பாதிப்புகள் மிக அதிகம்.

மனிதன் பிறவகை மிருகங்கள் போல ஒரு territorial மிருகம். ஒரு நாயின் எல்லையில் இன்னொரு நாய் நுழைந்தால் உடனே சண்டை மூன்டுவிடும். தோற்ற நாய் ஒன்று வென்ற நாய்க்கு கட்டுபட்டு அந்த பகுதியில் வாழவேண்டும். அல்லது சண்டையிட்டு ஜெயித்து அது அந்த பகுதிக்கு அரசனாகவேண்டும்.

ஓநாய்களுக்கிடையே இப்படி சண்டை வந்தால் தோற்ற ஓநாய் கீழே படுத்துக்கொண்டு தன் கழுத்தை கடிப்பதற்கு வசதியாக காட்டும். அது நம் மனித இனத்தில் காலில் விழுவதற்கு ஒப்பானது. ஜெயித்த ஓநாய் நினைத்தால் கீழே கிடக்கும் ஓநாயின் கழுத்தை கடித்து கொல்ல முடியும். ஆனால் அப்படி செய்வதில்லை. வேட்டைக்கு ஒரு துணை ஆச்சு என தன் டீமில் சேர்த்துகொள்ளும். அல்லது அடித்து விரட்டிவிடும்.

ஆனால் குழுவில் உள்ள பிற ஓநாய்கள், நாய்கள் அதனுடன் அதன்பின் ஒன்று சண்டையிடும். அதன்பின் அதன் இடம் குழுவில் ஏழாவதா, எட்டாவதா, இரண்டாவதா என தீர்மானமாகும். இந்த ரேங்கிங் ஆர்டர் தீர்மானமானபின் குழுவில் அமைதி நிலவும்.

மனித இன ஆண்களிடையே இந்த குணாதிசயம் அதிகம் உண்டு. ஒரு குழுவில் புதியதாக ஒருவன் வந்து சேர்ந்தால் அவன் வலிமை, திறம ஆகியவறை அளவிட்டு அவனுக்கான இடத்தை குழுவில் தீர்மானிப்பார்கள். ஓநாய்கள் போல அடித்துக்கொள்வது கிடையாது :-) ஆனால் புதியதாக ஒரு கம்பனியில் சேர்கிறீர்கள். ஏற்கனவே இருக்கும் ஆண்கள் உங்கள் திறமை என்ன, ஆளுமை என்ன என அளவிட்டு தம் குழுவுக்குள் உங்களுக்கான இடத்தை தீர்மானிப்பார்கள்.

இரு ஆண்கள் அறிமுகம் செய்துகொண்டால் அவர்கள் தமக்குள் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வி "எங்கே வேலை பார்க்கறீங்க?" என்பதுதான். அதைபொறுத்து தான் எதிராளியின் இடத்தை தம்முடன் ஒப்பிட்டு தீர்மானிப்பார்கள்.

ஆக இதில் கடைசி இடத்தை பிடிக்கும் வலிமையற்றவர்களின் நிலை என்ன?

அவர்கள் தலையில் எல்லா வேலைகளும் கட்டபடும். விட்டால் "தம்பி போயி நாலு டி சொல்லிட்டு, சிகரெட் வாங்கிட்டு வா" என்பது போன்றவேலைகள் கட்டபடும். இதற்கும் ஒரே கம்பனியில் ஒரே விதமான வேலைகளை செய்யும் ஆண்களுக்கிடையே கூட இத்தகைய படிமநிலைகள் உருவாகும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் குழுவின் கடைசி ரேங்கில் இருந்து அனைவரின் ஏவல்களையும், ஏச்சுகளையும் பொறுத்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.

எலிகளுக்கிடையே நடந்த சோதனையில் ஒரு கூண்டில் பெரிய வலுவான ஆண் எலிகளை அடைத்து வைத்து அதனுள் ஒரு சின்ன வலுவற்ற எலியை அனுப்பினார்கள். தோற்கடிக்கபட்ட எலி அதன்பின் கொத்தடிமை மாதிரி ஆகி எலிக்கூண்டினுள் கடைசி இடத்தில் இருந்தது. அதை அதன்பின் எடுத்து சம வயதுடைய, சம பலமுள்ள எலிகளுக்கு நடுவே விட்டாலும் அதன் அடிமை மனபான்மை மாறவில்லை. அது இந்த புதிய இடத்திலும் முதலிடத்துக்கு ஆசைப்படாமல் இருக்கும் தலைமையை ஏற்று கடைசி இடத்தில் வாழ ஆரம்பித்துவிட்டது. அது பிறருடன் பழகுவது, உற்சாகமாக இருப்பது எல்லாமே குறைந்தன. அது தன்னை தனிமைபடுத்திக்கொண்டு ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கி அதனுள் வாழ ஆரம்பித்துவிட்டது.

மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை கொடுத்தவுடன் அது மீன்டும் சுறுசுறுப்பானது. ஆக இந்த எலிக்கு மூளையில் தொடர்தோல்விகள் செரடோனின் அளவை குறைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்.

நீங்கள் இப்படி உங்களுக்கே தெரியாமல் ஆண்கள் கூட்டத்தில் ஒரு கம்பனியில், வீட்டில், உறவில், நட்புகளுக்கிடையெ கூட் கடைசி இடத்தில் இருக்கலாம். பல சமயம் அந்த குழுவில் உள்ளவர்களுக்கே இது தெரியாமல் இருக்கும். ஆனால் தொடர்தோல்விகள் உங்களை மனரீதியாக பாதித்து நீங்கள்  பணிபுரியும் இடத்தில் அனைத்து வேலைகளும் உங்கள் தலையில் கட்டபடும் நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.

தொடர்தோல்விகளால் துண்டவருக்கு சிறு சிறு வெற்றிகளை அடைவது தான் பாதிப்பை சரி செய்யும் வழி.

உங்களுக்கு சமமானவர்கள் உங்களை அடக்குவது போல தெரிந்தால் "நோ" சொல்லி பழகவும். இது உங்கள் எல்லைகோட்டை நீங்கள் தீர்மானிப்பதுபோல. உங்களுக்கான எல்லைகோட்டை நீங்கள் தீர்மானித்தால் அவர்கள் அதன்பின் அதனுள் வரமாட்டார்கள். முன்பே சொன்னதுபோல மனிதன் ஒரு
territorial animal.

அவர்களிடம் இருக்கும் திறமையை நீங்களும் வளர்த்துக்கொள்ள முயலவும். படிம அமைப்பில் மேலேறுங்கள்.

படிம அமைப்பின் மெல்நிலையில் நீங்கள் இருந்தால் கீழ்நிலையில் இருப்பவர்களை கைதூக்கி விடவும்.

அன்றாட வாழ்வில் சிறு சிறு வெற்றிகளை உடல்பயிற்சி மூலம் அடையவும். ஒரு குறிக்கோளை எட்டுவது கூட வெற்றிதான். அதுவும் உங்களை வெற்றியாளராக மாற்றும். அந்த வெற்றி பிற துறைகளிலும் எதிரொலிக்கும்.

https://www.facebook.com/100001446818079/posts/2206418672749672/

No comments:

Post a Comment