சமூக/பொது நலனுக்காக பாடுபடுவதாகச் சொல்லப்படும் எந்தவொரு கொள்கையையும்/இயக்கத்தையும்/கட்சியையும், நம்புவதற்கோ பரப்புவதற்கோ கொண்டாடுவதற்கோ எந்தவொரு நாயும் வேறெந்த பன்றிடமும் அனுமதி வாங்க தேவையில்லை.
அதே போல், சமூக/பொது நலனுக்காக பாடுபடுவதாகச் சொல்லப்படும் எந்தவொரு கொள்கையையும்/இயக்கத்தையும்/கட்சியையும், சந்தேகிப்பதற்கும்/விமர்சிப்பதற்கும்/கேள்விகேட்பதற்கும் எந்தவொரு பன்றிக்கும் உரிமையுண்டு, அதை எந்த நாயும் மறுக்க முடியாது.
யாருக்கும் தன்னை "அறிவிற்சிரந்த மேதையாக" நினத்துக்கொள்ள உரிமையுண்டு என்பது போல, அந்த மேதமையை தக்க தரவுகளோடு நிரூபிக்கும்வரை மறுப்பதற்கு எதிர்தரப்பிற்கும் உரிமையுண்டு.
ஆனால், எல்லா நாய்களும்/பன்றிகளும் தாங்கள் மட்டும்தான் உலகை உய்விக்க வந்த உத்தமர்கள் போல வெறிப்பிடித்து திரிகிறார்கள்.
தன்னை விமர்சிப்பவர்களுக்கு அறிவுநாணயத்தோடு பதிலளிக்க துப்பில்லாமல் தேசவிரோதிகள்/காபிர்கள்/முனாபிக்குகள் என்று கூறி கையடித்து சுகம் கண்டுவிட்டு பிள்ளைக்காக வயிற்றை தடவி கொள்கிறோம்.
கடைசியில் இது முற்றிப்போய் தனது நம்பிக்கைகளை கேள்வி கேட்பவர்களை உயிர்வாழ தகுதியற்றவனாக நினைக்க தொடங்குகிறார்கள்.
------
பிரேமலதா விஜயகாந்தின் தான்தோன்றித்தனமான பேச்சுக்களை கண்டிக்க முற்படும் பலரும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ விஜயகாந்தை இதனுடன் ஒப்பிட்டு அவரை உயர்த்தி பிடிக்க முற்படுகினறனர்.
நான் சொல்ல வருவது, சமூகத் தேவை இல்லாமல் தொடங்கப்படும் எந்த ஒரு கட்சியோ இயக்கமோ காலப்போக்கில் நீர்த்துப் போகும். வலுவான தடங்களோ கொள்கை கருத்துக்களோ இல்லாமல் தேர்தல் அரசியலை மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் ஒரு கட்சி மற்றும் அதன் தலைமையை முழு முற்றாக நிராகரிப்பதே அரசியலின் இலக்கணம்.
அப்படி சீர்தூக்கி பார்த்தால் இங்கே நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் பிரேமலதாவும் விஜயகாந்தும் மட்டும் அல்லர். ஒட்டுமொத்த தே மு தி க வையும் முழுவதுமாக ஒதுக்கித் தள்ள வேண்டும். இதனடிப்படையில் இங்கே அ தி மு க வையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாறாக கருத்தியில் ரீதியாக வலுவான கட்சி அமைப்புகளாக தி மு க, கம்யூனிஸ்ட், நாம்தமிழர் மற்றும் பா ஜ க வையே கருத வேண்டும். இவற்றின் நன்மை தீமை அலகுகளை கொண்டு யாருக்கு ஆதரவு என்பது நம் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டது.
இந்த தேர்தல் மக்களின் தாக்கத்தில் ஒருசேர நிகழ்ந்த அலையாக மாறக் கூடிய அனைத்து சாத்தியங்களும் கொண்டதாக இருக்கப் போகிறது. நிச்சயம் இது விழிப்புணர்வுக்காண ஒர் அழைப்பு. கடந்த ஐந்து வருடங்களாக பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் வாக்குகளை செலுத்த முற்படுகையில் எந்த தீமையையும் அவர்களால் துடைத்தெறிய முடியும்.
No comments:
Post a Comment