Thursday, April 18, 2019

3) யாருக்கு ஓட்டுப் போடக்கூடாது? சீமான்

பகிரி

*யாருக்கு ஓட்டுப் போடக்கூடாது?*

(3) சீமான்

ஒரு சிறுவனின் பக்கத்து வீடுகளில் "வோல்வோ S40, BMW 520, Benz CLA" என காஸ்ட்லி கார்கள் வாங்கினார்களாம். அவற்றில் பவர்புல் என்ஜின், ஏபிஎஸ், ஈபிடி, ஏர்பேக், ஸ்லீப் டிடெக்சன், அந்த சென்சார் இந்த சென்சார் என எக்கச்சக்கமாக பலரும் சிந்தித்து யோசித்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த பல விசயங்கள் இருந்தன. இவற்றைப் பார்த்த சிறுவன் ட்ரைசைக்கிளில் கிரைண்டர் மோட்டரை மாட்டி "இது தான் கார்" என்றானாம். அவனது முயற்சி பாராட்டுக்குரியது தான். ஆனால் அதை பென்ஸ் காருக்கு மாற்று எனக் கூறினால் "*ங்***தா போடா மடப்பயலே" என சீமான் மாதிரி தான் திட்டத் தோன்றும்.

இத்தனை வருடம் ஆயிரக்கணக்கானோர் சிந்தித்து செதுக்கி யோசித்து செய்ததை எல்லாம் "நான் வந்தா மஞ்ச நோட்டிஸ் விட்ருவேன்" என உளறுவது எல்லாம் அல்டிமேட் லெவல். கிரைண்டர் கார் அறிவாளியின் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு விசயம் இரு விசயம் என்றால் பரவாயில்லை. பேசிய அத்தனையுமே ஸ்கிசோஃபிரெனியா வந்தவரின் கற்பனைகள். ஏஸி ரூம்ல மாட்டுப்பண்ணை, எம்பிஏ படிச்சு பால் கணக்கு, ட்ரெயினில் காத்தாடி மாட்டி கரண்ட், அதுவும் விலைப்பட்டியலோட. (நாளைக்கு பெட்ரோல் விலை என்னனே எவனாலும் சொல்ல முடியல.)

இப்படி 99% நிஜத்திற்கு பொருந்தாத immature கற்பனைகள். இவற்றில் ஒன்றே ஒன்றை செய்ய முயற்சித்தால் கூட நாடே குட்டிச்சுவராகப் போய்விடும். முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தனர். சீமான் தான் அரசியலையே ஒரு ஃபேண்டசி சினிமா ஆக்கிவிட்டார்.

---

எதிர்கால கற்பனைகள் தான் மூடத்தனம் எனறு கடந்தகால வரலாறு என்னவென்று பார்த்தால் எல்லாமே நாற்றம்.

ஆமைக்கறி, அரிசிக் கப்பல், அறுபதாயிரம் யானை என அள்ளிவிட்டவை ஏராளம். அதன் நோக்கம் என்ன, என யோசித்தால் உணர்ச்சியைத் தூண்டி வசூல் செய்வதைத் தவிர வேற ஒன்றும் இல்லை. நாட்டை விட்டு வெளியேறி குற்ற உணர்ச்சியில் திரிந்த ஈழத் தமிழர்களை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி அவர்களின் மடமையைப் பயன்படுத்தி வசூல் செய்யும் வியாபாரத் தந்திரம் தான்.

சீமான் எத்தனை முறை நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனக் கேட்டால் அவருக்கே தெரியாது.

* அண்ணாதுரை பிச்சக்காரப்பய, பெரியார் வந்தேறி என்பது. சிலநாட்களில் பேரறிஞர் அண்ணா, பெரியார் வழிகாட்டி என்பது.

* கடவுள் எதிர்ப்பு அப்படியே கடவுள வழிபாடு.

* இயற்கை மருத்துவம் -அப்பல்லோ பிரசவம்,
* வாரிசு அரசியல் எதிர்ப்பு -மச்சான்னுக்கு சீட்,
* தமிழ்தேசியம் - பாராளுமன்ற போட்டி,

* எளிய தமிழ்ப்பிள்ளை - இசுசூ கார், நட்சத்திர விடுதி,

பேச்சுக்கும் செயலுக்கும் 1% கூட தொடர்பு இருப்பதே இல்லை.

---

சீமானின் மிகப்பெரிய பாதிப்பு அவரைப் போன்ற ஒரு கூட்டத்தை உருவாக்கியது தான். இயற்கை மருத்துவம், இலுமினாட்டி சதி, சர்க்கரை வியாதியே இல்லை, தடுப்பூசி தப்பு, வீட்ல பிரசவம் என தவறான வழிகாட்டலால் இந்த ஐந்து வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியா- பாகிஸ்தான் பார்டரில் இறந்தவர்களை விட மிக அதிகம்.

அடுத்த பாதிப்பு லேப் டெஸ்ட், யாரைப் பார்த்தாலும் லேப் டெஸ்ட் எடுத்து சாதியைச் சொல்வது வந்தேறி என்பது இது முற்றிப் போய் சமுத்திரக்கனி லாரன்ஸ் வரை வந்துவிட்டது. இப்போது ஆட்டோ இம்யூன் நோயாக தங்கள் கட்சி வேட்பாளரையும் கூட வந்தேறி என்கின்றனர். இந்தப்போக்கு நா.த.கவில் இனி அதிகமாகிக்கொண்டே தான் இருக்கும்.

சீமான் அவரது உயரத்தை அடைந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. இந்த "பீக்"ஐத் தாண்ட வேண்டுமென்றால் பெரிய மாற்றத்தை அவர் செய்ய வேண்டும்.

அவரது இரசிகர்கள் எல்லாம் விடலைப் பருவத்தினர். அவர்கள் வளர்ந்து ஓரளவு தெளிவு பெறும் போது நாதகவை விட்டு வெளியேறி விடுகின்றனர். முன்னாள் நாதக என்ற புதுப்பிரிவு இருப்பதே இதற்கு சாட்சி. இப்படி வெளியேறுவதைத் தடுக்காமல் இனி கட்சி வளராது.

---

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் 2009ல் தன்னெழுட்சியாக வந்த அலையை சீமான் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அப்போது கல்லூரியில் படித்தவர்களில் பலர் குழந்தை குட்டி என செட்டில் ஆகி விட மிச்ச சொச்சத்தை வைத்து தான் கட்சி நடத்துகிறார். பலர் பேருக்கு கட்சியில் இருக்கிறார்களே தவிர ஆக்டிவ் பணிகள் செய்வதில்லை. கல்லூரி மாணவராக செய்த கட்சிப்பணிகளை குடும்பம் குழந்தை என இருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

எந்த இரண்டாம்கட்ட தலைவரும் வளரக்கூடாது என்பதில் சீமான் தெளிவாக இருக்கிறார். அவரை மீறி கட்சியில் ஒரு பெயர் வெளியில் தெரியும் போது ஓரங்கட்டப்படுகிறார். இந்த நடவடிக்கைகள் கட்சியை ஒரு போன்சாய் மரமாக வைத்திருக்ககும் சீமானின் முடிவைத் தான் காட்டுகிறது. கட்சி அதிகம் வளர்ந்தால் அவருக்கு ஆபத்து என நினைக்கிறார் போல.

அதுபோல ஒத்த கருத்துடையவர்களையும் விரட்டி அடிப்பது. நாதகவினருக்கு முக்கிய எதிரி காங்கிரஸ் அல்ல. மற்ற தமிழ்தேசிய குழுவினர் தான். வேல்முருகன், திருமுருகன் காந்தி, பாமக, வைகோ, உதயகுமார் என அனைத்து தமிழ் தேசிய அமைப்புகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். அனைவரையும் பகைத்துக் கொண்டு ஒரே ஒரு அமைப்பு ஏகபோகமாக வெல்வது என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை கனவில் கூட நடக்காது. இது தெரிந்தும் சீமான் இதே வழியில் தான் செல்கிறார்.

---

நேர்மையின்மை - சீமானின் பெரிய பிரச்சனை நேர்மையின்மை. ஆரம்ப காலங்களில் புலிகளின் பெயரைச் சொல்லி வசூல் செய்தார் என்ற சர்ச்சை. பிறகு வைகுண்டராசன் தொடர்பு, ம.நடராசன் தொடர்பு, ஸ்டெர்லைட் நன்கொடை, விக்னேஷ் பெயரில் வசூல் இணைய வசூல் என வசூல் மன்னனாக விளங்குகிறார்.

அதைப் பற்றிய எந்தக் குற்றச்சாட்டிற்கும் அவர் பதில் அளித்ததில்லை. ஒரு அடிப்படையான நேர்மையில்லை.

அதேபோல சர்வாதிகாரப் போக்கு, குடும்ப அரசியல், வெளிப்படையற்ற தன்மை, தான்தோன்றித்தனமான வேட்பாளர் தேர்வு என தவறு மேல் தவறு செய்கிறார்.

ஆரம்ப காலங்களில் எந்த இணையம் சீமானை புகழ் பெற வைத்ததோ அதே இணையம் தான் இப்போது காமெடி பீஸாக அவரை மாற்றிவிட்டது. அவரது கட்சியினர் என்று சொன்னாலே சிரிக்கும் நிலைமைக்குச் சென்றுவிட்டது. இதற்கு முழுக்காரணமும் சீமான் தான். அவர் அள்ளிவிட்ட பொய்களும், நேர்மையில்லா செயல்களும், அனைவரையும் பகைக்கும் குணமும் தான்.

மாற்று என்பது குடிநீருக்கு பதில் இளநீர் தான். ஆனால் சீமானோ மாசடைந்த சாக்கடை நீராகத்தான் உள்ளார். இவரை மாற்று என்பது அறிவற்றோர் கூறும் சொல்.

No comments:

Post a Comment