Saturday, March 16, 2019

நம்பிக்கையே வாழ்க்கை - பூவண்ணன்

பூவண்ணன் கணபதி
2019-03-12

நம்பிக்கையே வாழ்க்கை

  யாரையும் நம்பாதே என்று (உலகம் அழிய போகிறது,பாவிகளே பாவிகளே என்று கூவுவதை  போல) எந்த கொடூர நிகழ்வு நடந்தாலும் தூக்கி கொண்டு கலாச்சார சாதி,மத மொழி வெறி கூட்டம் ஓடி வரும்.இப்போது முற்போக்காளர்கள் சிலரும்  இதில் சேர்ந்து கொண்டு எவனும் ஒழுங்கில்,யாரையும் நம்பாதே என்று அடித்து ஆட துவங்கி இருக்கிறார்கள்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் யாரையாவது நம்பி தான் வாழ்கிறோம்,மருத்துவமனையில் ஊசி போட போகும் செவிலியரோ ,மருத்துவரோ சரியான மருந்தை தான் போட போகிறார்கள் என்று நம்புகிறோம். வங்கியில் கொடுக்கும் பணம் சரியான பணம் என்று நம்புகிறோம்,வாகனம் ஓட்ட போகும் விமானி முதல்  பத்து பேரை அடைத்து அழைத்து செல்லும் ஷேர்  ஆட்டோ  ஓட்டுநர் வரை நம்பி  நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் என்று எண்ணி தான் அதில் பயணம் செய்கிறோம்..

இன்னும் சொல்ல போனால் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்றான பாலியல் தேவைகள் மற்றும் குடும்பத்திற்கான துணை தேர்விலேயே கண்ணை மூடி கொண்டு செவ்வாய் தோஷம் ,நாள் பார்த்து ஆளை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் கூட்டம் தான் அதிகம்.முன்பு எப்படி இருந்த தேசம்,மாநிலம் இப்படி ஆகி விட்டது என்று கொட்டப்படும் பொய்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.குழந்தை திருமணமே அதிகம் நடந்து வந்த கலாச்சாரம் தான் இது.திருமணத்திற்கு பிறகான கலவி காரணமாக பிறப்புறுப்பு சார்ந்த காயங்கள் மற்றும் நோய்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பெண் குழந்தைகள் உயிரிழந்து வந்த மாநிலம் தான் இது.

  மஹாத்மா காந்தியின் மனைவிக்கும் ,புரட்சி பாரதியின் மனைவிக்கும் பதினாலு வயதில் குழந்தை பிறந்து விட்டது .வயதுக்கு வந்த பெண்ணை முதலில் ராஜ பிரசாதம் என்று ராஜாவுக்கு,ஜமீன்தாருக்கு ,ராஜகுருவுக்கு ,கோவில் குருக்களுக்கு அனுப்பி வந்த அற்புத கலாச்சாரத்தை தான் இங்கிருந்த மதம்,சாதி மொழி சார்ந்த கலாச்சாரங்கள் அடிப்படையாக கொண்டு இயங்கின .

மனைவியை வைத்து சூதாடி தோற்ற பிறகு அவர்கள் முன் மனைவியை நீ  சூத்திர பெண் போல(அதாவது விதுரர் தாய் போல substitute ஆக நியோக முறைக்கு போக வேண்டும் என்றால் மறுப்பில்லாமல் செல்ல வேண்டும் )  இரு என்று பங்காளி ஆடையை உருவும்  கதை தான் இங்கு பெரும் காவியம்.குழந்தை பேறு தர உயர்ந்த வர்ணத்தை கொண்டு முயற்சிப்பதை பெருமையாக என்னும் கலாச்சாரம் தான் இங்கு இன்றுவரை இருந்து வந்த கலாச்சாரம்.அப்படி வந்தவரை பார்த்து பயந்து மஹாராணி தனக்கு பதிலாக பணிப்பெண்ணாய் அனுப்ப அவளுக்கும் குழந்தை பாக்கியம் தந்ததை கண்ணில் ஒத்தி கொண்டு படிக்கும் கூட்டம் இங்கே கலாச்சாரம் கெட்டு விட்டது,அன்றாய்டு போன் ,பள்ளி,கல்லூரிகள்.முகநூல் ,நட்பு ,காதல்  தான் அனைத்துக்கும் காரணம் என்று குதிப்பதை விட அவலம் வேறு இருக்க முடியுமா ?

பெண்ணை இழிவாக,குறைவாக,போக பொருளாக நடத்துவதே இங்கு பல நூறு ஆண்டுகளாக கலாச்சாரம். பெண்ணுக்கு சொத்துரிமை என்பதை பெரும் தீங்காக பார்க்கும் ஆச்சாரியர்கள் முதல் நிலச்சுவான்தார்கள் வரை வாய்ப்பு கிடைக்கும் போது அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு  பெண்களை இப்படி நடத்துவதில் ஆச்சரியம் என்ன ?

கான்சருக்கான மருத்துவமோ ,மகப்பேறு மருத்துவமோ,ஆகாய பயணங்களோ ,  பெண்களின் உரிமைகளோ முன் எப்போதையும் விட இன்று பல மடங்கு முன்னேறி தான் இருக்கிறோம்.அந்த காலம் பொற்காலம் என்று கூவும் யாருக்கும் துளி கூட அறிவும் கிடையாது ,சமத்துவத்தில் நம்பிக்கையும் கிடையாது.எதையும் பயன்படுத்தி தங்களின் பிற்போக்குத்தனத்துக்கு ஆள் சேர்க்கும் கூட்டம் பொள்ளாச்சியில் நடந்த குரூரமான குற்றங்களை பயன்படுத்தி தங்கள் மதம்,சாதி கலாச்சாரம் என்று பிதற்றுகிறது.

  ஆயிரம் மகப்பேறுகளில் ஓரிரண்டு பேர் மருத்துமனைக்கு சென்றாலும்  மருத்துவ நெகிலிஜென்ஸ் காரணமாக உயிரிழப்பு  நடப்பது போல நட்பு,காதல் என்பதில் ஒரு சில நம்பிக்கை துரோகங்கள் இருந்தாலும் அது தான் முன்னே செல்லும் வழி.இனி யாரும் குழந்தை திருமணத்துக்கோ அல்லது வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் ,திருமணம் வரை யாருடனும் பேச விட மாட்டோம் என்றோ திரும்பி அந்த ?பொற்காலத்துக்கு அழைத்து செல்ல முடியாது.

https://www.facebook.com/100000054060235/posts/2340459229299190/

No comments:

Post a Comment