Saturday, March 16, 2019

சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை

உன்னதமான லட்சியத்தில் அடிபடையில் கட்டியெழுப்பட்ட பெரிய இயக்கங்கள் சிதஞ்சு சின்னாபின்னமாகி கேவலப்பட்டு நிற்பதற்கு கீழ்கண்ட இரண்டு காரணங்களே மிக முக்கியமானது:

1) பொருளாதார குற்றங்கள் அல்லது வரவு/செலவு விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை.

2) பாலியல் குற்றங்கள் (அது எந்த வடிவத்திலேயும் இருக்கலாம்)

என்னுடைய இந்த கருத்துக்களை ஒரு whistleblower-ன் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி. அல்லது ஒரு spoiler-ன்
அர்த்தமற்ற உளறல்களாக எடுத்துக்கொண்டாலும் சரியே.

-----

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #1:*

"மாணவ/மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவளர்கள்" - ஆகியோர்களிடமிருந்து திரட்டப்படும் phone number, email போன்ற தகவல்களை "PAART நிர்வாகமோ, PAART நிர்வாகத்தால் நியமிக்கப்படும் ஊழியர்களோ, PAART உடன் இணைந்து பணியாற்றும் சகோதர அமைப்புகளோ" - தவறான வகையில் பயன்படுத்தாது.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #2:*

பெண்கள் தங்களது கல்வி மற்றம் வேலை வாய்ப்பினை மூலம் அடையும் பொருளாதார தன்னிறைவினால் மட்டுமே சுயமரியாதையான அறிவார்ந்த வாரிசுகளை/சமூகத்தை உருவாக்க முடியும். PAART இதை ஆழமாக நம்புவதின் காரணமாக, தனது அனைத்து கல்வி/வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி/விழிப்புணர்வு முகாம்களில், பெண்களின் பிரநிதித்துவத்தை நிலைநாட்டும். இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காலப்போக்கில் முறையாக ஆய்வு செய்து படிப்படியாக களையப்படும்.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #3:*

PAART - ன் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பொதுமக்கள் நிர்பந்தமின்றி வழங்கும் நன்கொடைகளைக் கொண்டே அமைந்துள்ளது. எனவே வரவு/செலவு பற்றிய விபரங்கள் 100% வெளிப்படையானதாகவே இருக்கும். ஒரு ரூபாய்க்கான வரவு/செலவு கணக்கை கூட சந்தேகத்திற்கு/சங்கோஷத்திற்கு இடமின்றி PAART உறுப்பினர்களோ/பொதுமக்களோ எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் படிப்படியாக செய்யப்படும்.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #4:*

அரசு வேலை வாய்ப்புகளில் சேர்வதற்காக மாணவர்களுக்கும்/இளைஞர்களுக்கும் நம்மால் முடிந்த வழிகாட்டுதல்களையும்/பயிற்சிகளையும் வழங்கி உதவுவதே பிரதான நோக்கமாக கொண்ட PAART எந்தவிதமான சுயநலநோக்கமுமின்றி இறைவனின் பொருத்தத்தை நாடியே இச்சீரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எனவே, "PAART ஒழுக்க அல்லது பொருளாதார குற்றங்களில் ஈடுபடும்" - என்று நம்புவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #5:*

இங்கே யாரும் கேள்விகளுக்கும்/விசாரணைகளுக்கு அப்பாற்பட்ட "புனித பசுக்கள்" கிடையாது என்பதால், அவதூறுகளற்ற ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் தீவிரமாக நம்பும் PAART, அதை ஊக்கப்படுத்தவும் செய்கிறது. மேலும், நடப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்களையும் நிர்வாக நடைமுறைகளையும்  எவ்விதமான ஒளிவுமறைவுமின்றி அனைவருக்கும் தெரிவிக்கபடும்.

-----

மேற்கூறப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே நான் சில நேரங்களில் (எனக்கு நேரம் கிடைக்கும் போது) எனது கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். இதுநாள் வரையிலும் மேற்கூறப்பட்ட எனது நம்பிக்கையில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஏப்ரல் மாதத்திற்கான புதிய பயிற்சித் திட்டங்களைப் பற்றி பேசும் போது பெண்களின் போன்நம்பர், இமெயில் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியதைப் பற்றிய கவலையும் விவாதமும் வந்ததால், "அப்படி ஒரு கஷ்டமும் ரிஸ்க்கும்" இருக்கும் பட்சத்தில் "கொஞ்ச காலத்திற்கு அதை தவிர்ந்து கொள்ளலாமா?" என்பதுதான் எனது கருத்தின் சாராம்சம். கட்டுமானத்தில் போது ஏற்பட்ட உயிரிழப்பில் நாம் நேரடியாக சம்பந்தப்படா விட்டாலும் நமது வளாகத்தினுள் நடந்ததால் உள்ளபடியே அது நமக்கு சிக்கலான விசயமாகத்தான் இருந்தது. அதனால் ரிஸ்க் குறைவான விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தலாம் என்பது தான் எனது ஆலோசனை.

"பொள்ளாச்சி மாதிரியான சம்பவம் தைக்காவிற்கு மேல் நடைபெற சாத்தியமிருக்கிறது" - என்று நான் சொல்ல வரவில்லை.

-----

No comments:

Post a Comment