Thursday, February 26, 2015

அடத்தூஊ கேடுகெட்ட காவி பன்னிகளா

அடத்தூஊ.... கேடுகெட்ட காவி பன்னிகளா....
சக மனிதனை தொடவோ அல்லது தனக்கு நிகராக அருகில் உட்காரவோ கூட அனுமதிக்காத ஈனப்பிறவிகள் வாழும் இதே நாட்டில்,
.
அவர் யார், என்ன சாதியென்று பார்க்காமல் சாக்கடை ஓரமாக கிடந்த தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி உணவளித்து உடையளித்து பாதுகாத்த அன்னை தெரேசாவை கொச்சை படுத்தும் ஈனப்பிறவிகளே....
.
உங்கள் மூஞ்சியில் காறி உமிழ்கிறேன்... த்தூஊஊஊ....
.
அன்சாரி முஹம்மது

---------------------------------------------------------------------------------------------------------------

மதங்களின் மீது வெறுப்பேறி இருந்த ஒரு காலம் இருந்தது, பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மதங்கள் மனித வாழ்க்கையின் எச்சங்களை, மனித மனத்தின் வக்கிரமான சகிக்க இயலாத இன்னொரு பக்கத்தை இயல்பான வாழ்க்கைக்கு உந்தித் தள்ளும் வடிகாலாக தொடர்ந்து இருந்து வந்திருப்பதை வரலாற்றில் வாசித்து அறிய முடிந்திருக்கிறது.
.
"மார்க்ஸ்" சொன்னதைப் போல "மதம் மனித மூளையால் விடை கண்டறியப்படாத பல்வேறு குழப்பமான கேள்விகளுக்கான பதிலாய் உருவெடுத்திருக்கிறது", பல்வேறு பெயர்களும், கோட்பாடுகளும் பொதிந்து கிடந்தாலும் அடிப்படையில் மதங்கள் மனித மனத்தை வடிகட்டும் வேலையைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது அல்லது கூட்டு சமூகத்தின் மனசாட்சியை அழிவு, அச்சம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து பன்னெடுங்காலமாக அது காப்பாற்றி வந்திருக்கிறது. மரணமும், பிரிவும் மனிதனுக்குக் கொடுக்கிற சொல்லொனாத் துயரத்தை மதம் ஓரளவு துடைத்திருக்கிறது.
.
நிகழ்காலத்தில் புழக்கத்தில் இருக்கிற மதங்களில் கிறிஸ்துவத்தின் மீது எனக்கு அளப்பரிய மரியாதை உண்டு, எல்லாவற்றுக்கும் பொதுவான கடவுளரைத் தொழுவதற்குக் கூடப் பல படிநிலைகளையும் தடைகளையும் உண்டாக்கி வைத்திருந்த பிற்கால இந்துத்துவத் கோட்பாடுகளுக்கு நடுவே மனிதக் குழந்தைகளை அழைத்து உணவூட்டி, உடை கொடுத்து ஒரே வகுப்பறையில் அமர வைத்த மதம் கிருத்துவம்.
.
தந்தை பெரியாரின் திராவிடக் கருத்தாக்கம் உள்ளீடு செய்யப்பட்டு தமிழ்ச் சமூகம் உயர் சாதிக் கோட்பாட்டு ஆளுமையில் இருந்து பரவலாக விடுபடுவதற்கு முன்னதாகவே கிறிஸ்துவம் நமது கூட்டு சமூக மனநிலையில் பொதுவுடைமை கருத்தாக்கத்தையும், அறிவேற்றத்தையும் தீவிரமாகவே உள்ளீடு செய்திருக்கிறது. இன்றைக்கும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில், கிறிஸ்துவத் தேவாலயங்களும், கல்வி நிலையங்களும் சமூக மாற்றத்திலும், சமூக நீதியிலும் பெருமளவு தாக்கம் உருவாக்கி இருக்கின்றன.
.
உயர் ஞான மரபு, முக்தி, முற்றும் துறத்தல் என்று இந்து மதம் வெகு மக்களின் வாழ்க்கையில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டிருந்த போது கிறிஸ்துவ மதமும் அதன் போதகர்களும் வாழ்க்கையின் விளிம்பில் கிடந்த எமது மக்களை தங்கள் திருக்கரங்களால் பூசிக்க மட்டும் அழைக்காமல், அவர்களை கல்வி கற்கவும், பொது சமூக நீரோட்டத்தில் கலந்து மதிப்புறவும் உதவி செய்தார்கள். கெட்டியாய் உறைந்து போயிருந்த நலமுற்ற மக்களையே சீண்டாமல் கிடந்த மதங்களிடையே அழுகிக் கிடந்த தொழு நோயாளிகளையும், புழுக்கள் நெளிந்த நோயாளிகளையும் அரவணைத்துக் கொண்டார்கள்.
.
எல்லா மதங்களையும் போல கிறிஸ்துவத்திலும் பல்வேறு நிறை குறைகளும், முரண்களும், குற்றங்களும் இருக்கலாம், ஆனால், தமிழ்ச் சமூகத்துக்கு கிறிஸ்துவம் ஒரு பெரும் கொடை என்பதை மனசாட்சி உள்ள எந்தத் தமிழனும் மறுக்க முடியாது. தென் மாவட்டங்கள் பலவற்றில் கல்வியும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் இல்லாது அழிந்து கொண்டிருந்த எமது மக்கள் பலரின் வாழ்க்கையில் கிறிஸ்துவமும், கிறிஸ்துவ தேவாலயங்களும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது.
.
அந்த வரிசையில் இந்திய சமூகத்தின் இன்னொரு மூலையில் கிடந்த மேற்கு வங்கத்தையும், அதன் நிலப்பரப்பு மக்களையும் தனது தூய அன்பினாலும், பெருங்கருணையினாலும் "அன்னை தெரேசா" போன்ற மகத்தான மனிதர்கள் அரவணைத்துப் போற்றினார்கள். வீதியில் எறியப்பட்ட அனாதைக் குழந்தைகளின் உணவுக்காகக் கொடை கேட்டு தெருக்களில் அலைந்த அன்னையின் முகத்தில் எச்சில் உமிழப்பட்ட கொடுங்கனத்திலும், அமைதியின் உருவாய், "கிறிஸ்துவத்தின் பெயரால் இந்த எச்சிலை நான் எடுத்துக் கொள்கிறேன், ஆனால், எமது குழந்தைகளுக்காய் வேறு ஏதேனும் கொடுங்கள்" என்று கேட்ட தாய்மையின் பெருவடிவம் அன்னை தெரேசா.
.
பொதுவான கடவுளை வணங்குதற்கும் தனிப்படிகளைக் கட்டி வைத்து, கடவுளின் பெயரால் மனிதர்களை இழிவு செய்யும் பிற்கால இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு கிறிஸ்துவத்தையும் அதன் மகத்தான கல்வி மற்றும் சமூகப் பணியாற்றிய மனிதர்களையும் விமர்சிப்பதற்கோ, புழுதி வாரித் தூற்றுவதற்கோ எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை.
.
கிறிஸ்துவம் மானுடக் குழந்தைகளை ஒருங்கிணைத்து ஒரே வரிசையில் அமர வைத்த அதே காலத்தில் தான் பொதுக் குளங்களில், பள்ளிகளில், தெருக்களில், அரசியலில் என்று சமூகத்தின் எல்லாப் படிநிலைகளிலும் எமது குழந்தைகளை அண்ட விடாமல் செய்தது இந்து மதத்தின் "சோ கால்ட்" உயர் குடிக் கூட்டம், இன்று வரைக்கும் குழந்தைகளாய் மானுடத்தின் பூக்களாய் மலர்கிற பிஞ்சுகளை, பூமியின் புன்னகை போலச் சிரிக்கிற பிஞ்சுகளை வர்ணத்தின் பெயரால், சாதியின் பெயரால் மனம் குறுக வைக்கிற உங்கள் வக்கிர மதத்தை விடப் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது கிறிஸ்துவமும் அதன் பணிகளும்.
.
### போங்கடே நீங்களும் உங்க மதமாற்ற ஊளையும் ### — feeling Devine with the work of Mother Teresa & Christianity in India.
.
Arivazhagan Kaivalyam


No comments:

Post a Comment