தமிழ் தேசியப் பொதூடைமை கட்சியாக இயங்கி வந்து... பிறகு பொதூடைமைக்கும் தமிழ் தேசியத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்று உணர்ந்து... இன்று தமிழ் தேசியப் பேரியக்கம் என்ற பெயரில் இயங்கும் தோழர் மணியரசன் அவர்கள், "பெரியார் ஒரு தமிழர் விரோதி" என்று சித்தரிப்பை தீவிரமாக தொடர்ந்து பரப்புகிறார்.
சரி பெரியாருக்கு மாற்றாக யாரை பரிந்துரைக்கிறார் என்று பார்த்தால்...
ராஜ ராஜ சோழன் - யார் இவன்...
சாட்சாத் ஒரு பார்பன அடிமை...
மக்களை சேரியில் ஓடிக்கியவன்...
சரி, தோழரின் பெரியார் மீதான குற்றச் சாட்டுகளை பார்ப்போம்...
1.பெரியார் தான் முதன் முதலில் இங்கே திராவிடம் என்ற சொல்லை அரசியலில் கொண்டு வந்தார்.அதற்க்கு முன் இங்கே அந்த வார்த்தை இல்லை
இந்த குற்றச்சாட்டின் நோக்கம்... இல்லாத திராவிடத்தை பெரியார் தான் தன் சுயநலத்திற்கு கொண்டு வந்தார் என்று குறிப்பதே.
எவ்வளவு பெரிய வரலாற்றுப்பிழை... திராவிடம் என்ற சொல் ஒன்றும் பெரியாரால் உருவாக்கப்பட்டது இல்லை...
அது 1856 ஆம் ஆண்டு "கால்டுவெல்" என்பவரால் உரக்க சொல்லப்பட்டது... இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் தென்னகத்து மொழிகளுக்கும் ஒரு சம்மந்தம் இல்லை என்றும்... இங்கே உள்ள மொழிகள் ,தமிழை பிறப்பிடமாக கொண்டு வந்துள்ளதாகவும்... தமிழே தலை சிறந்த மொழி எனவும் கூறினார்...
2. "திராவிடம்" என்பது பார்பனர்களை தான் குறிக்கும், பாருங்கள் "மட்டை பந்து ஆட்டக்காரர் - ராகுல் டிராவிட்" ஒரு பார்பனர். அவர் பெயரில் திராவிட் இருக்கிறது.
அடையாளம் என்றால் பொதுவாக இருப்பது தான், கோடிக்கணக்கான மக்களில் இருந்து தோழரால், பாவம் ஒருவரை தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
"விதிவிலக்கு விதியாகாது" என்று தோழருக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
இங்கே ஆரிய பெயர்களை சுமப்பவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று சொன்னால், எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அப்படி உள்ளது இந்த உதாரணம்.
3. பெரியாருக்கு முன்னரே இங்கு "சுயமரியாதை திருமணங்கள்" நடந்துள்ளது. மறைமலை அடிகள் நடத்தி வைத்துள்ளார், பெரியார் ஒன்றும் புதிதாக செய்யவில்லை.
மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், அவர் நடத்தி வைத்தது பார்பன மந்தாரங்கள் அற்ற திருமணமே ஒழிய, ஜாதி ஒழிப்பு திருமணங்கள் அல்ல,
யார் இந்த மறைமலை அடிகள்? பார்பனிய சடங்குகளை ஏதிர்த்து திருமணம் செய்து வைத்தார். ஏன்? பெரியாரை போல், தமிழர்கள் அனைவரும் சமம் என்று நினைத்ததாலா? இல்லவே இல்லை... இவர் சைவ மத ஆதரவாளர்...
பார்ப்பனியத்தை போல தீண்டாமையை போதித்த சைவ மத ஆதரவாளர்... பார்ப்பனியத்தை ஏதிர்க்க காரணம் அதில் தீண்டாமை உள்ளது என்பதால் அல்ல... அது சைவ சமயத்திற்கு போட்டி என்பதால்...
பார்ப்பனியத்திற்கு நிகராக தீண்டாமையை போதித்ததே அடியாரின் "சைவ சமயம்"
தோழருக்கு ஒரு நல்ல உதாரணம் கூட கிடைப்பதில்லை பாவம். கிடைப்பதெல்லாம் பார்பன அடிமை ராஜ ராஜ சோழனும், தீண்டாமையை ஆதரித்த மறைமலை அடிகளும் தான்.
4. பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என சொல்லி விட்டார்.
இவர்கள் என்னமோ அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு தமிழ் வழியில் கல்வி கொடுத்து மக்களுக்கு அறிவு ஊட்டினார்கள் போலவும், அப்போது வந்து பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார் என்பது போலவுமே சித்தரிப்பது.
அன்று தமிழ் மொழி இருந்தது இடைநிலை ஜாதிகள் கையிலும், பார்பனியர் கையிலும், தமிழின் பெருமை பேசியது எல்லாம் "தேவாரம்", "திருவாசகம்", "பெரிய புராணம்" ஆகிய மூட நம்பிக்கைகளையும், தீண்டமைகளையும் ஏடுத்துக்காட்டாக காட்டி
அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன பயன் என்று தான் பெரியார் யோசித்தார்?
தமிழை சைவ சமய பெருமை பேசுவதற்கு பயன்படுத்தினார்களே தவிர, அதனால் மக்களுக்கு என்ன பயன்?
மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்தார், "திருக்குறள்" மாநாடு நடத்தினார்.
அதற்கு முன் திருக்குறளை எந்த "தமிழ் அறிஞர்கள்" கொண்டு சென்றார்கள் என்று "மணியரசன்" தோழர் கூறட்டும்.
பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று கூறும் நபர்களுக்கு பின்னால் "சைவ சமய ஆதரவு" பூனை ஒளிந்து கொண்டு உள்ளது என்பதே நிதர்சனம்.
4. பெரியாரின் நீதிக்கட்சியிலே பார்பன ஆதரவாளர்கள் இருந்தனர்
தோழர் வரலாற்றையே படிப்பதில்லை போலும், வெறும் பெரியார் ஏதிர்ப்புக்கு மட்டும் தேடி தேடி குறிப்பு எடுத்துள்ளார்.
ஆம், நீதிக்கட்சி பார்பனர் அல்லாதோர் இயக்கமாக் செயல்பட்டாலும் அதில் உள்ளவர்கள் பார்பன சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.
அதை பெரியார் உணர்ந்ததால் தான் நீதிக்கட்சியில் இருந்து "'காங்கிரசுக்கு" சென்ற பெரியார் அங்கிருந்து மறுபடியும் "நீதிக்கட்சிக்கு" செல்லாமல்... "சுயமரியாதை இயக்கம்" கண்டு அதன் நீட்சியாக "திராவிடர் கழகம்" தோன்றியது...

- பெரியாருக்கு முன்னர் 1887 ஆம் ஆண்டு முதல் "ஜான் ரத்தினம்" எனும் தோழர் 'திராவிட பாண்டியன் என்ற இதழை நடத்தி வந்தார்
- 1892 ஆம் ஆண்டு அயோத்திதாச பண்டிதர் ,தன்னை திராவிடன் என்று முன்மொழிந்து உள்ளார்
- 1894 ஆம் ஆண்டு இரட்டை மலை சீனிவாசன் ,தான் நடத்தி வந்த "பறையர் ஜன சபை" என்பதை "திராவிட மகா சபை" என நடத்த தொடங்கினார்
- ஜான் ரத்தினம், அயோத்திதாச பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன் ஆகிய அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இங்கே தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு திராவிடம் என்ற அடையாளமே பெரிதும் துணை நின்றுள்ளது என்பது உறுதியாகிறது.
2. "திராவிடம்" என்பது பார்பனர்களை தான் குறிக்கும், பாருங்கள் "மட்டை பந்து ஆட்டக்காரர் - ராகுல் டிராவிட்" ஒரு பார்பனர். அவர் பெயரில் திராவிட் இருக்கிறது.
அடையாளம் என்றால் பொதுவாக இருப்பது தான், கோடிக்கணக்கான மக்களில் இருந்து தோழரால், பாவம் ஒருவரை தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
"விதிவிலக்கு விதியாகாது" என்று தோழருக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
இங்கே ஆரிய பெயர்களை சுமப்பவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று சொன்னால், எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அப்படி உள்ளது இந்த உதாரணம்.
3. பெரியாருக்கு முன்னரே இங்கு "சுயமரியாதை திருமணங்கள்" நடந்துள்ளது. மறைமலை அடிகள் நடத்தி வைத்துள்ளார், பெரியார் ஒன்றும் புதிதாக செய்யவில்லை.
மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், அவர் நடத்தி வைத்தது பார்பன மந்தாரங்கள் அற்ற திருமணமே ஒழிய, ஜாதி ஒழிப்பு திருமணங்கள் அல்ல,
யார் இந்த மறைமலை அடிகள்? பார்பனிய சடங்குகளை ஏதிர்த்து திருமணம் செய்து வைத்தார். ஏன்? பெரியாரை போல், தமிழர்கள் அனைவரும் சமம் என்று நினைத்ததாலா? இல்லவே இல்லை... இவர் சைவ மத ஆதரவாளர்...
பார்ப்பனியத்தை போல தீண்டாமையை போதித்த சைவ மத ஆதரவாளர்... பார்ப்பனியத்தை ஏதிர்க்க காரணம் அதில் தீண்டாமை உள்ளது என்பதால் அல்ல... அது சைவ சமயத்திற்கு போட்டி என்பதால்...
பார்ப்பனியத்திற்கு நிகராக தீண்டாமையை போதித்ததே அடியாரின் "சைவ சமயம்"
தோழருக்கு ஒரு நல்ல உதாரணம் கூட கிடைப்பதில்லை பாவம். கிடைப்பதெல்லாம் பார்பன அடிமை ராஜ ராஜ சோழனும், தீண்டாமையை ஆதரித்த மறைமலை அடிகளும் தான்.
4. பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என சொல்லி விட்டார்.
இவர்கள் என்னமோ அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு தமிழ் வழியில் கல்வி கொடுத்து மக்களுக்கு அறிவு ஊட்டினார்கள் போலவும், அப்போது வந்து பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார் என்பது போலவுமே சித்தரிப்பது.
அன்று தமிழ் மொழி இருந்தது இடைநிலை ஜாதிகள் கையிலும், பார்பனியர் கையிலும், தமிழின் பெருமை பேசியது எல்லாம் "தேவாரம்", "திருவாசகம்", "பெரிய புராணம்" ஆகிய மூட நம்பிக்கைகளையும், தீண்டமைகளையும் ஏடுத்துக்காட்டாக காட்டி
அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன பயன் என்று தான் பெரியார் யோசித்தார்?
தமிழை சைவ சமய பெருமை பேசுவதற்கு பயன்படுத்தினார்களே தவிர, அதனால் மக்களுக்கு என்ன பயன்?
மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்தார், "திருக்குறள்" மாநாடு நடத்தினார்.
அதற்கு முன் திருக்குறளை எந்த "தமிழ் அறிஞர்கள்" கொண்டு சென்றார்கள் என்று "மணியரசன்" தோழர் கூறட்டும்.
பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று கூறும் நபர்களுக்கு பின்னால் "சைவ சமய ஆதரவு" பூனை ஒளிந்து கொண்டு உள்ளது என்பதே நிதர்சனம்.
4. பெரியாரின் நீதிக்கட்சியிலே பார்பன ஆதரவாளர்கள் இருந்தனர்
தோழர் வரலாற்றையே படிப்பதில்லை போலும், வெறும் பெரியார் ஏதிர்ப்புக்கு மட்டும் தேடி தேடி குறிப்பு எடுத்துள்ளார்.
ஆம், நீதிக்கட்சி பார்பனர் அல்லாதோர் இயக்கமாக் செயல்பட்டாலும் அதில் உள்ளவர்கள் பார்பன சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.
அதை பெரியார் உணர்ந்ததால் தான் நீதிக்கட்சியில் இருந்து "'காங்கிரசுக்கு" சென்ற பெரியார் அங்கிருந்து மறுபடியும் "நீதிக்கட்சிக்கு" செல்லாமல்... "சுயமரியாதை இயக்கம்" கண்டு அதன் நீட்சியாக "திராவிடர் கழகம்" தோன்றியது...
No comments:
Post a Comment