Thursday, February 5, 2015

இஸ்லாம் மதம் தழுவினால் என்னா வெறி வருகிறது

சாதீயத்திற்கு எதிராக எனனை இனனும்அதிகமாக எழுத துாணடிய தோழர் இளமாறன் பாவாடைசாமியின் வேதனை பதிவு இது!!
.
21ம்நுாற்றாணடிலும் இப்படி பல காட்டுமிராணடிக்ள இருக்கிறார்கள்! இநது மதம் எப்படிபட்ட நஞ்சை இநத நாட்டில விதைத்திருக்கிறதெனபதறகு சாட்சி இநத ஒருபதிவே போது!ம்!!

  • எவனடா இநது இஙகே? 
  • 85 சதவீதம் இநதுக்கள இருப்பதாக மார்தட்டும் பிறமதக்காரனை மிரட்ட பட்டியலின மக்களை உஙகள கூட்டஙகளில் சேர்த்து-எண்ணிககைக்காக பலத்தை காட்டத்தான் நாஙகளா என்று கேட்டிருக்கும் கேளவிக்குஎன்ன பதில தருவீாகள்?
  • சாதிவெறியை துணடாட இஸ்லாம் மதம் தழுவினால் என்னா வெறி வருகிறது?
  • ஆதாயத்திறகாக மதம் மாறினார்கள் என்று கூவும் குள்ள நரி கூட்டஙகளே!! இநத பதிவிறகு என்னபதில தருவீர்கள்?

------------------------------------------------------------------------------------
இள மாறன் பாவாடை சாமி
Yesterday at 10:11am ·
அவமானம் !!அவமானம் !!அவமானம்!!
------------------------------------------------------------------------------------
.
இன்னிக்கு நடந்தத நெனைச்சா இப்படிதான் எழுத தோணுது.!!
ச்சே ஏன்டா இப்படி ஒரு பிறவி எடுத்தோம்னு இருக்கு.
நடந்தத அப்படியே எழுதறேன். என் மேல ஏதாவது தப்பு இருக்கான்னு சொல்லுங்க. இந்த பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.
.
எனக்கு பல வருசமா க்ளோஸ் பிரன்டு ( இனிமே அவன் பிரன்டும் இல்லை ஒரு -------- இல்லை) வீட்டில தைப்பூசத்துக்கு சாமி கும்புட்றாங்கன்னு என்னைய கட்டாயம் வரணும்னு சொல்லி இருந்தான். சரிண்ணு நானும் அவன் வீட்ட நல்லா கழுவி சுத்தம் பண்ணிட்டு ( நேத்திக்கு 12 மணி வரைக்கும்) இன்னிக்கு காலைல ஆறு மணிக்கே நல்லா சுத்த பத்தமா குளிச்சிட்டு பொங்கலுக்கு எடுத்த புது டிரெச போட்டுகிட்டு கெளம்பி அவன் வீட்டுக்கு போயிட்டேன்.
.
போனதுலேயிருந்து ஒரு நிமிசம் கூட ரெஸ்ட் இல்ல. சாமி கும்புட ஜாமான் வாங்கிட்டு வர- சாப்பாட்டுக்கு ஹெல்ப் பண்ண -அப்படின்னு செம வேல.- நம்ம பிரண்டு வீட்ல பங்சன் நாம செய்யாம வேற யாரு செய்ய போறாங்கன்னு அலுப்பு பாக்காம எல்லா வேலயும் செஞ்சேன்.- அதுல நான் எந்த கொறையும் வைக்கல-. நம்ம நண்பர் வீட்டு பங்சன நம்ம வீட்டு பங்சனா நெனைக்குற ஆளு நான்-.- சாமி கும்புடுறதுனால நேத்து ஒனர் வீட்ல குடுத்த பிரியாணிய கூட சாப்புட்ல-. நேத்திக்கே நல்லா முடி வெட்டி ஷேவ் பண்ணிட்டேன்!!.
.
மொத அவமானம் !!
-------------------------------
.
இன்னிக்கு காலைலே நான் அஅவன் வீட்ல ரொம்ப நேரமா அடக்கி வச்சிருக்க முடியாம ஒன்னுக்கு அடிக்க போனே்ன!!போறப்பவே அவன் அப்பா என்கிட்ட சொன்னாரு- தம்பி !!கக்கூஸ்ல நல்லா தண்ணி ஊத்தீருப்பான்னு சரின்டு ஒன்னுக்கு போன உடனே நல்லா தண்ணி ஊத்துனேன். -வெளிய வந்த வொடனே அவன் அப்பா திருப்பி என்கிட்ட தண்ணி நல்லா ஊத்துபான்னாரு.- எனக்கு எதும் புரியல- சரின்டு திருப்பி நல்லா கக்கூஸ்ல தண்ணி ஊத்துனேன்.- கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் அவங்க சொந்தகாரரு ஒருத்தரு கக்கூஸிக்கு போனாரு சரி இவருக்கும் அதே மாதிரி அட்வைசு பன்னுவாங்கன்னு பாத்துகிட்டே இருந்தேன். ஆனா ஒரு பய வாய தெறக்கல. சரி வேற யாராவது கக்கூஸ்க்கு போறப்ப எனக்கு சொன்ன மாதிரி ஏதாவது அட்வைஸ் பன்னுவாங்கன்னூ பாத்துகிட்டே இருந்தேன். ஒரு வார்த்த சொல்லல-.ஒரு வழியா சாமி கும்புட்டுட்டு சாப்பாடு போட ஆரம்பிச்சோம்!!
.
இரணடாவது அவமானம்
----------------------------------------
.
திடீருனு பிரன்டு அப்பா என்கிட்ட வந்து நீ சாப்பாடு போட வேணாம்பா !!நீ உக்காந்து சாப்டுன்னு சொல்லிட்டாரு.- சரி காலேலேர்ந்து பம்பரமா சுத்தி சுத்தி வேல செஞ்சோம்- இன்னும் பட்டினியா இருக்கோமேன்னு அக்கறைல சொல்ராருன்னுட்டு- சரி சாப்டலாம்ணுட்டு கைய கழுவிட்டு சாப்பிட உக்காரப்ப அவுரு இங்க உக்காராத !!கீழ உன் பிரன்ண்டு ரூம்ல போய் உக்காரு!! அங்க சாப்பாடு வரும்னாரு!!. நான் உடனே எதுக்கு உங்களுக்கு கஷ்டம்?? இங்க மொட்ட மாடிலயே சாப்புடுறேன் அப்பிடிண்ணேன் அவரு உடனே இல்லப்பா சொன்னா கேளு கீழ போ உனக்கு விசயத்த அப்புறம் சொல்றேன்னாரு!!
.
எனக்கு அப்ப ஒன்னும் புரியல!! சரி நம்மள தனியா சாப்டறப்ப நல்லா கவனிப்பாங்க போலருக்குண்ணு நெனைச்சுகிட்டு கீழ என் பிரன்டு ரூமுக்கு போயிட்டேன்.--- என்னோட பிரன்டு அவன் அக்கா பிள்ளைங்க ஸ்கூல் படிக்குதுங்க -சாப்பாடு குடுக்க போயிட்டான்-.தனியா சாப்புட ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சு!! சரி பிரன்டு வர வரைக்கும் வெயிட் பன்னுவோமான்னு இல்ல என்ன செய்லாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கறப்பவே திடு புடுன்னு வந்தாங்க!! இலைய போட்டு சாப்பாட போட்டு குழம்பை ஊத்தி கூட்டு பொறியல வச்சுட்டு போயிட்டாங்க -. இருந்த பசிக்கு நானும் சரின்னு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். சாப்டுக்கிட்டே மெல்ல யோசிக்க ஆரம்பிச்சேன் எதுக்கு நம்பள இப்படி தனியா உக்கார வச்சி சாப்பாடு போடுராறாங்க!!
.
சாதாரணமா ஒண்ணுக்கு அடிக்க போனா இப்படி அட்வைஸ் பன்றாங்க. சரி பிரண்டு வரட்டும் கேட்டுக்கலாம்ன்னு ஒரு யோசன. அவன்ட எப்படி கேக்கறதுன்னு ஒரு குழப்பம். அதுக்குள்ள இலைல இருந்த சாப்பாடு தீந்துருச்சு!! சரி சாப்பாடு வாங்கி ரசம் வாங்கி சாப்பிடலான்னு பாத்துகிட்டே இருந்தேன் யாரையும் காணம். எச்ச கையோட எந்திரிச்சு போய் சோறு போடுங்கன்னு கேக்கவா முடியும்.?? பொறுத்து பொறுத்து பாத்துட்டு சரி கெளம்பலாம் வீட்டில போயி கொஞ்சம் சாப்டுக்கலாம்ன்னு எந்திரிச்ச உடனே பிரன்டு அம்மா வந்துட்டாங்க அவுங்க என்கிட்ட என்னப்பா?? அதுக்குள்ள எந்திரிச்சுட்ட?? நல்லா சாப்புடுப்பா அப்படின்னாங்க. எனக்கு மடிச்சு வச்ச இலைய திருப்பி தொறந்து வச்சு சாப்புட அசிங்கமா இருந்துச்சு. சரின்னுட்டு பாலிசா இல்லீங்கம்மா போதும் புல்லா சாப்பிட்டேன்னு சொல்லிட்டு எச்சி இலைய தூக்கிகிட்டு போய் போட்டு கை கழுவிட்டேன்.!! திருப்பி மெல்ல நான் வந்து பாக்குறேன்- நான்சாப் பிட்இடத்த என்பிரண்டு அம்மா தண்ணி ஊத்தி கழுவோ கழுவுன்னு கழுவி வுட்டுகிட்டு இருக்காங்க.--
.
எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா போச்சு நான் என்ன பண்ணி மாதிரியா தின்னேன்.?? ஏண்ணா சாப்புடுற விசயத்துல நான் ரொம்ப கன்டீசனா இருப்பேன்-. ஒரு சோத்து பருக்கைய கீழ சிந்தமாட்டேன்- கருவேப்பிலை தானேண்ணு தூக்கி போட மாட்டேன்1.ஏண்ணா எங்கப்பா நான் ஐஞ்சு வயசா இருக்கறப்பவே தவறீட்டாரு. அதுக்கபறம் எங்கம்மா ஒண்டி ஆளா கட்டட வேல செஞ்சு வர கூலில தான் நான் என் தம்பி அண்ணன் நாலு பேரும் சாப்புடுணும். பள்ளிக்கூடம் இருக்குறப்ப பிரச்சன இல்ல சத்துணவு வரும். --லீவு நாள்ல சாப்பாட்டு க“்ஷ்டம் தாங்க முடியாது -பல ராத்திரி பட்டினியாவே தூங்கிருவேன் -. ஏதோ இப்ப நானும் தம்பியும் வேலைக்கு போறதுனால சாப்பாட்டு பிரச்சன இல்ல.
.
மூணாவது அவமானம்
------------------------------------
.
சரி விசயத்துக்கு வருவோம் அதுக்குள்ள பிரண்டும் வந்துட்டான் !!.சரின்னு சொல்லிட்டு கிளம்பிறப்ப பிரண்டு அம்மா வேக வேகமா வாசலுக்கு வந்து என்கிட்ட தம்பி!! தம்பி கோவிச்சிகாம மாடிக்கு போயி வேலகாரம்மா கூட சும்மா ஒரு கை புடிச்சி அத தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு போப்பா அப்டின்னாங்க. --என்னத்த ஒரு கை புடிச்சி என்னத்த தூக்கி போடனும்னு யோசிச்சிகிட்டே மாடிக்கு போனப்பதான் தெரிஞ்சுச்சு எல்லாரும் சாப்பிடட எச்சி இலைய ஒரு பெரிய சாக்குல விரிச்சி அதுல போட்டிருந்தாங்க. எனக்கு சரியான டென்சன் ஆயிருச்சு-- ஆனா பிரன்டு கூப்பிட்டான்னு வந்தோம்!!!!நம்ம எதாவது டென்சன்ல பேசுனா அவுனுக்கு மனசு கஸ்டப்படுமேன்ட்டு பேசாம ஒரு கை புடிச்சி எச்சி மயிரு இலைய குப்பை தொட்டில தூக்கி போட்டுட்டு திரும்பிகூட பாக்காம சைக்கிள எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
.
இத நெனச்சு நெனச்சு டென்சன் மேல டென்சன்.இருந்த கடுப்புக்கு பிரன்ட நேர்ல பாத்து நல்லா நாலு கேக்கணும்னு முடிவு பண்ணிட்டு அவனுக்கு போன் அடிச்சேன்.-- ரொம்ப பிசி பிசின்னு சீன் மயிரு போட்டான்.-- த-க்காளி வரீயா இல்ல நான் வீட்டுக்கு வரட்டுமான்னேன். என்ன நெனைச்சானோ தெரியல அலறி அடிச்சுகிட்டு பைக்ல ஓடியாந்துட்டான்!!.
.
நாலாவது அவமானம்
-----------------------------------
.
வந்த உடனே நடந்த எல்லாத்தயும் சொன்னேன். கடைசியா எச்சி இலைய எடுக்க சொன்னப்ப ஏன்டா பேசாம இருந்தேன்னு அவன கேட்டேன்-. அப்படி இல்ல- இப்படி இல்லண்ணு ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு கடசியா ஒரு நூறு ருவாய குடுத்து-- அப்பா குடுக்க சொன்னாருன்னான். எனக்கு வந்துச்சே கடுப்பு !!ஏண்டா நான் இந்த காசு பு---------தான் வந்தேன்னு நெனைச்சியா?? புடிச்சி ஏறு ஏறுன்னு ஏறி வுட்டேன்.-----
.
ஆனாலும் எனக்கு மனசு கேக்கல. இதுக்கு சாதிய தவிற வேற காரணமில்ல!! ஏன் அப்படி சொல்றேண்ணா அங்க மொட்டைமாடியில எல்லார் கூடயும் சேந்து உக்காந்து சாப்பிட்ட ஒரு ஆளு சரியான தண்ணி வண்டி !!பல தடவ சாக்கடையில உழுந்து கெடக்கறத ஊரே பாத்திருக்கு--- அந்த ஆளு அவுங்க சாதின்னு சரி சமமா உக்கார வச்சு தான் சாப்பாடு போட்டாங்க.-- வயசுல பெரியவங்க சாதி பாப்பாங்கன்னு தெரியும்-- ஆனா நம்ம வயசு பசங்க அவ்வளவுக்கா சாதி பாக்க மாட்டாங்கன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன். --இப்பதான் தெரியுது எல்லா பயலுகளும் உள்ளுக்குள்ள நல்லா சாதிய வச்சிகிட்டு இருக்கானுங்க
.
என்னைய ரொம்ப பேரு நைசா நக்கல் நையாண்டி பண்ணீருக்கானூக-- ஆனா இப்படி டைரக்டா செஞ்சது செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி. எனக்கு ஒரு டவுட்டு --இப்படி சாதி சுத்தம் பாக்குறானுங்களே--அவுனுங்க சாதிகாரனுங்களுக்கு மட்டும் வட்டிக்கு உட்டு வர வருமானத்துல சாப்புடுவானுங்களா.?? இவனுங்க திங்குற சோத்த நெறைய மள்ளருங்க தான வெள்ளாம பண்ணி தராங்க !!அது மட்டும் எப்படி சுத்தமாவுது.?
.
இதுல ஒரு காமடி அவுங்க வீட்ல தலைவர் பிரபாகரன் பெரிய படத்த மாட்டிருப்பானுங்க--. பிரபாகரன் என்ன அவுங்க சாதி காரனுக்கா போராட்டம் பண்ணாரு எல்லாத்துக்கும் சேத்துதான போராடுனாரு.
.
நம்ம தெரு பயலுகள்ட்ட விசயத்த சொன்னேண்ணா உட்டு உரிஉரிண்ணு உரிச்சுருவாங்க-- ஆனா அடிச்சு ஒதச்சு வாங்குனா அது என்ன மரியாதை??. பழகிகிட்டு இப்படி பண்ணாஅவுனுங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்ணு பேசாம இருக்கேன். ஆனா நெனைக்க நெனைக்க பயங்கர டென்சனா ஆவுது.


No comments:

Post a Comment