Friday, July 27, 2018

தமிழ்ச்செல்வன் இறங்கற்பா

தமிழ்ச்செல்வன் இறங்கற்பா

எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்,
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத்தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன்- உயிரனையான்-
உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம் தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?

- கலைஞர்.

--------

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என

- ஜெயலலிதா

No comments:

Post a Comment