Friday, July 27, 2018

தம்பி கார்ல் மார்க்ஸ் கணபதியின் பதிவுக்கு எழுதிய  மறுப்பு.

Poppu purusothoman
2018-07-28

தம்பி கார்ல் மார்க்ஸ் கணபதியின் பதிவுக்கு எழுதிய  மறுப்பு.

பெண்ணுடலை அனைத்து விதங்களிலும் ஒரு சுரண்டல் கருவியாக்கிய பழைய வாழ்க்கை முறையிலிருந்தும், உடலுழைப்பைப் போற்றும் ஆணாதிக்கத் தளைகளிலிருந்தும் அவளை விடுவித்தே ஆக வேண்டும் தான். பிள்ளை பெறுதல் வலி மிகுந்தது என்றால் அதிலிருந்தும் அவளை விடுவித்து எந்த ஏச்சுப் பேச்சும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போதுதான் சமூகம் முன்னேறிய ஒன்றாகப் பக்குவப்பட்டிருக்கிறது என்று பொருள். பிள்ளை பிறப்பிக்கும் போது ஏற்படும் வலி வேண்டாம். பிள்ளை வேண்டும். எனவே சிசேரியனே செய்து கொள்வேன் என்ற சுதந்திரத்தையும் பெண்ணுக்கு அளிப்பதே நாகரீகமான செயல்.

ஆனால் இந்த வாதங்களுக்கு அண்டக் கொடுக்க சிசேரியனே பெண் விடுதலை. உழைப்பின் வழி அவ்வுடல் பெறும் ஆரோக்கியம் பிற்போக்கானது என்ற வாதம் மறைமுகமாக அவளைப் பலவீனப்படுத்தவே செய்யும்.

நச்சுப் பிடித்த வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் பெண் தலையில் ஏற்றி வைப்பது சரி என்பதல்ல எனது வாதம். ஆனால் உடலை மேலும் மேலும் நலிவுறச் செய்யும் இன்றைய வாழ்க்கை முறையில் பெரிதும் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருப்போர் பெண்களே.

படிக்கும் காலத்தில் இருந்தே தொடங்கும் மனவழுத்தம், பெண் என்பதால் செய்யும் புறக்கணிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அலுவலகத்தில் தொடங்கி அக்கம் பக்க உறவினர் வரை தன்னை நிரூபிக்க கூடுதல் முனைப்புக் காட்டி தறகால பெண்கள் உடல்ரீதியாகச் சந்திக்கும் இழப்புகள் ஏராளம்.

அவள் எதிர்கொள்ளும் மன அழுத்ததால் மாதாந்திர உதிரப்போக்கு ( மாத விலக்கு எனபதிலேயே ஆணாதிக்க ஒடுக்குதல் ஒளிந்துள்ளது என்று தவிர்க்கிறேன்) மூன்று நாட்களுக்கு முன்பே பெரும் உடல், மன வலியாகத் தொடங்கி போக்கின் மூன்று நாடகளைக் கடந்தும் தொடரகிறதை எத்தனை சுகப்பிரசவ எதிர்ப்பாாளர்கள் கவனித்திருக்கிறீரகள்.

ஒரு அங்குல விட்டம் உடைய ஆணுறுப்பை ஏற்க வலி கொள்ளும் பெண் துளை குழந்தையின் ஐந்து அங்குல தோள்ப்பட்டையை வெளித் தள்ளும் அளவிற்கு எப்படி விரிந்து
தர முடியும்? என்பது மிகவும் அறிவார்த்தமான கேள்வி தான். உடலையும் அறிவியலையும் சம விகிதாச்சாரத்தில் ப்ளண்ட் செய்து தேட முயன்றால் தலை சுற்றி விடும். எனவே
பிள்ளையின் வளர்ச்சி முழுமை பெற்றதும் வயிற்றைக் கிழித்துத் தையல் போடுவது சரியான முறையாகத் தோன்றும். பிரச்சனை அத்தோடு முடிந்து விட்டால் சரிதான்.
ஆனால் முதுகுத் தண்டின் உட்புறத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நரம்புத் தொகுதியில் குறுட்டாம் போக்கில் மரத்துப் போவத்றகாக செலுத்தப்படும் மருந்தினால் எத்தனை பெண்கள் இயல்பான நடையைக் கூட இழந்திருக்கிறாரகள் என்பதை அறிவியல் நிரூபணமாகிய நவீன மருத்துவம் உங்களுக்குச் சொல்லியிருந்தால் வயிற்றைக் கிழிக்கிற வாதை புரிபடும்.
சிசேரியனுக்குப் பின்னர் பெண் இயல்பு நிலைக்குத் திரும்புவது 20 % க்கும் குறைவு.

உடலைப. பற்றி அறிதல் வேறு. உயிரறிவியல் வேறு. உயிரறிவியல் எளிய 2+2=4 சூத்திரத்திறகுள் அடங்காத்தது.

அதிலும் நமது கலாச்சாரத்தில் ரெண்டு உசிரு என்ற பெயரில் இரட்டை அளவு உணவு போட்டு திணிக்கிற அலும்பு ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப அதிகம். கர்ப்ப காலம் உடலில் நிறைய மாற்றங்கள் நடக்கும். திடீரென்று நிறைய பசிக்கும். அப்புறம் பசியே இல்லாமல் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நவீன மருத்துவ முறைக்கு மருந்துக்கும் இல்லை. நமது பாரம்பரியத்திலும் இல்லை. பசிக்காத போது உடலுக்கு உள்ளும் புறமும் ஓய்வு தருவதைக் காட்டிலும் மேலான சிகிச்சை ஏதும் இல்லை. பொங்கி வழியிற ஒங்க செண்டிமெண்ட கொஞ்சம் நிறுத்துங்கப்பா அக்கறை வேடதாரிகளே.

முப்பது வருடங்களுக்கு முன்னர் வரை மகப்பேறின் போது இறப்பு சதவீதம் அதிகம் என்பது உண்மையே. அதற்குக் காரணம் பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழலும், மிகை உழைப்பும், உழைப்பை ஈடு செய்வதற்கான குறைந்தபட்ச உணவு இனமையுமே ஆகும்.
சமூக வளரச்சியால் பொதுச் சுகாதாரம் மற்றும் உணவு விநியோகத்தில் ஏற்பட்ட மேம்பாட்டால் உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருக்கிறது. தற்காலத்தில் மரண விகிதம் குறைந்திருப்பதறகுக் காரணம் நானே அந்த ரவுடி என்று நவீன மருத்துவம் பொறுப்பேற்க முன் வருமானால் தற்காலப் புதுப்புது நோய்களுக்கான பொறுப்பும் அதன் தலையிலேயே விழும். அந்த அடிப் பலமே இருக்குமே பர்ர்வால்லியா? எனவே சற்று ஒதுங்கி நிற்கவும்.

கர்ப்பிணிகள் உடலுழைப்பில் தான் ஈடுபட வேண்டும் எனபதில்லை. கருக் கொண்ட இரண்டாம் மாதம் தொடங்கி இடுப்பு எலும்பை வலுப்படுத்தவும், சீரான ரத்த ஓட்டத்திற்காகவும் அன்றாடம் காலை மாலை 20 நிமிட நடையும். பிறப்புறுப்பு அகலிக்கும்படியான நீட்டி மடக்கும் உடற்பயிறசியும் இருந்தால் போதும். பிள்ளைப் பேறு சுலபமாக முடிவது மட்டுமல்ல. குழந்தைக்கு இயறகையாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு கவசம் கர்ப்பப்பை, கரப்பக் குழாய் மூலம் கிடைக்கும்.

மருத்துவத் துறை நவீனங்கள் அனைத்தும் மனித வாழ்வை எளிமைப்படுத்துவதற்காக ஈர மனம் கொண்ட ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பெரு வணிக மருந்து நிறுவனங்களின் உத்தரவிறகுக் கட்டுப்பட்டு வலிந்து உருஙாக்கப்பட நிரூபணங்கள் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

நவீனமனைத்துமே முற்போக்கானதுமல்ல. மரபு அத்தனையும் பிற்போக்கானதுமல்ல.

நம் முன்னோர் முட்டாள்களோ இல்லையோ. உயிரின் இயறகையான உந்துந்துணரவுபகுக் கட்டுப்பட்டவரகள். ஆய்வுகளையும், ஆதாரங்களையும் விட தனி மனிதர்களுக்குள் தோன்றும் இயற்கை உந்துணர்வு நம்பகமானது. பாதுகாப்பானது.

https://m.facebook.com/story.php?story_fbid=1676720459117529&id=100003387731114

No comments:

Post a Comment