Devi Somasundaram
வணக்கம் தோழர் உங்க ஊரு பக்கத்துல கோட்டூர்ன்னு ஒரு ஊர் இருக்கு...!
அந்த கோட்டூரில் உள்ள பெருமாள் கோவில், தென்கலை சம்பரதாயத்தை சேர்ந்தது...
அந்தக் கோட்டூர் இல்லையே வசிக்கக்கூடிய வடகலை சம்பரதாயத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர் அந்த தென்கலை பெருமாள் கோவிலுக்கு ஒரு யானையை பரிசாக அளித்தார்....
தானமாக பெற்ற அந்த யானைக்கு மறுநாளே குளிப்பாட்டி தென்கலை நாமத்தைப் போட்டு, ஊர்வலமாக வீதிகளில் அந்த யானையை அழைத்து வந்தார்கள்...
இதைக் கண்ட யானையை பரிசாக கோயிலுக்கு அளித்த வடகலை பார்ப்பனர், கோவில் நிர்வாகத்திடம், யானை நான் கொடுத்தது, அதற்கு வடகலை நாமம் தான் போட வேண்டும் என்று, சண்டை போட்டார்...
இந்தப் பிரச்சனை அதை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகிறது இந்த வழக்கின் பெயரே கோட்டூர் வழக்கு என்றுதான் குறிப்பிடுவார்கள்,
அந்த வெள்ளைக்கார நீதிபதி பல சிக்கலான வழக்குகளை சந்தித்த அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர்...
அவரிடத்திலே வடகலை நாமம் தென்கலை நாமம், என்கின்ற பிரச்சனை வரவும் இரு தரப்பினரின் வாத பிரதிவாதங்களை கேட்டு, அப்படியும் அவருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை,
வந்த நீதிபதி மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளானார்... சரி இதை இப்போது இவர்ககள் முடிக்க மாட்டார்கள் எனவே நாம்தான் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற முடிவோடு ஒரு கோடை விடுமுறைக்கு இந்த நாட்டில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு இங்கிலாந்திற்கு சென்றார்...
அங்கு அவர் மூன்று மாதங்கள் விடுமுறை முழுவதையும் சம்பிரதாயங்களை பிடிப்பதிலேயே செலவிட்டார்.
அனைத்தையும் படித்து மீண்டும் நாகை நீதிமன்றத்திற்கு வந்து கொடுத்த தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது...?
பானா வடிவ 2 பட்டை பட்டை வெள்ளை கோடும், நடுவில் சிகப்பு வண்ண நீல் கோடும், இருந்தாள் அது தென் கலையாகும்....
சிகப்பு கலரில் யூ வடிவில் மெலிதாகவோ, பட்டையாகவோ இருந்தால் அது வடகலை ஆகும்....
தென்கலையரின் 2 வெள்ளைப் பட்டை கோடு, பெருமாளின் இரண்டு தொடைகளை குறிப்பதாகும், நடுவில் உள்ள சிகப்புக் கோடு பெருமாளின் ஆண்குறியை குறிப்பதாகும்...!
வடகலையருக்கு யு வடிவ கோடு பெருமாளின் தொடையை தான் குறிக்கின்றது ஆனால், வடகலையரின், சம்பிரதாயப்படி பெருமாளின் ஆண்குறி இட படாது....
அதுமட்டுமல்லாமல் தானமாகக் கொடுத்த பொருளை சொந்தம் கொண்டாட முடியாது என்று விரிவாக ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார்....
இதை உங்களுக்கு சுருக்கமாக நான் கொடுத்திருக்கிறேன்
No comments:
Post a Comment