Sunday, July 1, 2018

ரஸம் வச்சுட்டு இது சாம்பார் தான்னு எங்கள நம்ப வைச்சுடுவாங்க

பெங்களுர் வந்த ஒர்க் முடிஞ்சு நேத்து ஒரு கான்ப்ரன்ஸ் கம் கெட் டு கெதர் மீட்..
கான்ப்ரன்ஸ்ல பேச வந்த சீப் கெஸ்ட் தனி தனியா சிலரிடம் கேள்வி கேட்டார் ..
நல்ல பதில் கிடைச்சா அவர்களிடம் அடுத்தடுத்து  பல கேள்வி...பதில் சரி இல்லன்னா கேள்வி பாஸ் ஆன் செய்தார்..
அப்படி பாஸ் செய்ய பட்டு என் கிட்ட வந்த கேள்வி.

" என் கஸ்டமர் என் கிட்ட மாம்பழம் வேணும்னு கேட்டு சில விதைகளை தந்தார் ..நானும் அந்த விதைகளை பயிர் செய்தேன் .அது  வேப்ப மரமா வளர்ந்து வேப்பம்பழம் காய்ச்சுது..இப்ப நான் என்ன செய்யனும் ?"

". நீங்க விளைய வச்சது  மாம்பழம்னு தான்னு கஸ்டமர நம்ப வைங்க .அவர் உங்க கிட்ட விதைய மாத்தி குடுத்து ஏமாத்தி இருக்கார்..நம்மள ஏமாற்றுபவர்களை நாம 200% ஏமாத்தனும்..அது தான் என் லாஜிக் ".

" சரி. கஸ்டமர் மாம்பழம் கேட்டு விதை தந்தார் .நானும் விளைய வச்சேன்..மாம்பழம் தான் விளைஞ்சது...ஆனா அணில் தின்னுட்டு போய்டுச்சு. இப்ப என்ன செய்னும் ?"

". அலட்சியம் உங்க தவறு.. கஸ்டமர் கிட்ட உண்மை சொல்லி அதற்கான தண்டனை அனுபவிங்க..அடுத்த பழத்தை கவனமா பாது காத்து தரேன்னு டைம் கேட்டு திரும்ப உற்பத்தி செய்து தாங்க. "

"  இப்ப மாம்பழம் விளைஞசுது..மாம்பழம் ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு வேற ஒரு கஸ்டமர் டபிள் மடங்கு ரேட் கேட்டான். காசுகாக வித்துட்டேன்..இப்ப கஸ்டமர எப்டி சமாளிக்கிறது ?"

" நீங்க சீட்..கமிட் மெண்ட்க்கு உண்மையா இல்ல..இதுக்கு  நான் ஆலோசனை சொல்ல மாட்டேன் "

" சரி..இப்ப கஸ்டமர் மாம்பழம் கேட்டான்..வேப்ப பழ விதை தந்தான்..நான் கஷ்ட்ட பட்டு அதில் மாம்பழம் விளைய வச்சுட்டேன்..இப்ப என்ன செய்னும் "

". மாம்பழத்தை நல்ல விளைக்கு வெளில வித்துடுஙக..வேப்பம் பழத்தை வேற எங்கிருந்தாச்சும் வாங்கி கஸ்டமர்கிட்ட இது தான் மாம்பழம்னு குடுங்க...ஏமாத்ற கஸ்டமர்க்கு உண்மையா இருக்க அவசியமில்ல..உங்க உழைப்புக்கான லாபம் கிடைச்சாகனும் .".

"  இம்ப்ரஸ்ட்...இந்த பதில்களுக்கான  ஆரம்பம் அல்லது எங்க கத்துகிட்டிங்க "

". எங்க பாட்டிகிட்ட தான்...தண்ணியா ஒரு ரஸம் வச்சுட்டு இது சாம்பார் தான்னு எங்கள நம்ப வைச்சுடுவாங்க...😊 "

....

ஹால்ல  சிரிப்பு அடங்க ரொம்ப நேரமாச்சு..

#தேவி

No comments:

Post a Comment