Wednesday, August 1, 2018

கலைஞர் திருட்டு ரயிலேரி வந்தாரா

//இதுக்கு பதிலா மார்கண்டேய கட்சுவ செருப்பால அடிச்சிருக்கலாம்..//

கலைஞர் சொத்து மதிப்பை பற்றி மார்கண்டேய கட்சு போன்ற சாதி வெறியர்கள் உளிட்ட சிலர் கேள்வி எழுப்புகிறார்.

கலைஞர் பிறந்ததே வசதியான குடும்பத்தில்தான். அவர் பெற்றோர் அன்றாடம் காய்ச்சிகளில்லை. அந்த காலத்திலேயே ஆங்கில மீடிய பள்ளியில் படித்தவர்.. வசதி இருந்ததால்தான் அவரால் முரசொலி கையெழுத்து பத்திரிகை நடத்த முடிந்தது. பள்ளிப் பருவத்திலேயே, 18 வது வயதிலேயே அதை அச்சில் கொண்டு வர முடிந்தது...

20 வயதிலேயே சினிமாவில் உரையாடல் எழுதும் வாய்ப்பு பெற்றார் (1944) 28 வயதில் பராசக்தி (1952), ஆனால் அதற்கு முன்னரே ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற வெற்றிப்படங்களை தந்திருந்தார். 33 வயதில்தான் எம்எல்ஏ (1957) 43 வயதில்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் (1967).. ஆனால் 28, வயதிலேயே அவர் கோடீஸ்வரர்.

பராசக்தி படத்தின் உரையாடலை புத்தகமாக போடுவதற்கு அக்காலகட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கலைஞருக்கு தரப்பட்டது என்று சொல்வார்கள். அந்தபணத்தின் மதிப்பு இன்று அண்ணாசாலையில் ஒரு பெரிய சொகுசு அப்பார்ட்மென்ட் வாங்குவதற்கு ஒப்பானது.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது 31வது வயதில் (1955)அவர் கோபாலபுரத்தில்  வீடு வாங்கிவிட்டார்.காரும் வாங்கிவிட்டார். 1955ல் வாங்கப்பட்ட வீட்டில்தான் அவர் இன்னும் இருக்கிறார்.அந்த வீட்டையும் தன் வாழ்நாளுக்கு பிறகு மருத்துவமனையாக செயல் பட வேண்டுமென்று மக்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

இது நாள் வரை தன் உழைப்பில் வந்த அந்த வீட்டில்தான் வாழ்கிறார்.
சிவாஜி எம்ஜிஆர் என்ற இரு பெரும் திரை ஆளுமைகளுக்கு வாய்ப்புகள் வழங்கி வளர்த்தெடுத்தவர்.அவர் வாய்ப்பு வழங்கி வளர்த்தெடுத்த நடிகர்களில் எஸ்எஸ்ஆரும் ஒருவர்.
கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்த போது, எம்ஜிஆர் சிவாஜி இருவரிடமும் சொந்தமாக கார் இல்லை.

ஒரு வாதத்துக்கு, கலைஞர் தவறு செய்திருந்தால், தவறான வழில் சொத்து சேர்த்திருந்தால், கலைஞர் ஆட்சியில் இருந்ததைவிட, மிக அதிகமாய் அதிமுக தானே இங்கே ஆட்சில் இருந்தார்கள், கேவலம் ஒரு FIR கூட போடமுடியவிலையா?? அதற்கு வக்கில்லையா?? ஆண்மையில்லையா??? கலைஞர் ஆட்சியில் இருந்ததைவிட அதிக காலம் அதிமுகவும், அவரை ஜென்ம எதிரியாக கருதும் ஆட்களும் தானே இங்கேயும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்கள் / இருகிறார்கள், நடவடிக்கை எடுக்கலாம்மே.. யார் தடுக்கிறார்கள்??

ஐந்து முறை முதல்வராய் இருந்த கலைஞர், இதுவரை எத்தனை முறை ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ளார் ??, சிறை செல்வது இருக்கட்டும், எத்தனை வழக்குகள் கோர்ட்டில் விசாரணை நடந்திருக்கிறது????, விசாரணை இருக்கட்டும், எத்தனை வழக்குகள் அதாரபூர்வமாய் போட்டனர்????? ஒரே ஒரு ஊழல் வழக்கை கூட கலைஞர் மீது போட முடியவில்லையே, 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக நிர்வாகத்தில் இல்லாத சட்ட நிபுணர்களா??? ஜெயாவிடம் இல்லாத அரசு அதிகாரம்மா????

சிலர் வித்தியாசமாக திமுக விஞ்ஞான பூர்வமாக, அதாவது சைன்டிபிக் முறையில் ஊழல் செய்தது என சொல்வார்கள்.. அதாவது, யாராலும் கண்டுபிடிக்க முடியாதாம்.. அப்படியானால், சர்க்காரியா மட்டும் எப்படி கண்டுபிடிப்பார்??? சரி, விஞ்ஞான பூர்வம் என்றால் என்ன??? ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும் ஒன்றைத்தான், அறிவியல் பூர்வமான ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படும்.. ஆனால், எந்த ஒரு புகாரையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்காமல், விஞ்ஞான பூர்வ ஊழல் என்பது சுத்த டுபாகூர் தகவல்.. மக்களை முட்டாளாக்கும் ஒன்று...

2G விஷயத்தில் கூட, எழு வருடங்களாக விசாரணை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும், பலமுறை சோதனைகள் நடத்தி, இதுவரை என்ன கண்டுபிடித்தார்கள்???? எதை நிரூபித்தார்கள்?? - ஒன்றும் இல்லை.. நீதிபதி சைனியே "எழு ஆண்டுகளாக யாராவது ஒரே ஒரு ஆதாரத்தையாவது கொண்டுவது கொடுப்பார்கள் எனகோர்ட் வாசலை திறந்துவைத்து உட்கார்ந்திருந்தேன், ஆனால், ஒருவரும் வரவில்லை" என தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, 2G வழக்கு எந்த ஒரு அடிப்படை ஆதராமும் இல்லாத வழக்கு என ஏழாண்டுகள் விசாரித்து தள்ளுபடி செய்து, எல்லோரையும் விடுதலை செய்துவிட்டார்..

இப்படி தமிழகத்தின் உச்ச ஆளுமைகளை வளர்த்துவிட்ட மாபெரும் ஆளுமையை ஏதோ வசதி வாய்ப்பற்று வக்கற்று இருந்தவர் போலவும் திருட்டு ரயில் ஏறி வந்தார் என்றும் வாயால் ஆய் போவது போல பலர்  பேசுகிறார்கள்.

இது குறித்து கலைஞர் அவர்களே சொல்லியது..

"தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.

முரசொலி தொடங்கி முதல் கார் வரை...

எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.

அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.

முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் வழங்கிவருகிறது.." என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவாக, கலைஞர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யாராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?

கலைஞர் மீது பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட, அவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)

இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன.

இனியாவது உருப்படியான வரலாறை தெரிந்து கொண்டு பேசுங்கள்  மனிதர்களே...

https://m.facebook.com/groups/482986601880039?view=permalink&id=1054663178045709

No comments:

Post a Comment