Friday, August 3, 2018

ஆடு மாடு எல்லாம் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கா போகுது?

Janakiraman mohan
2018-08-03

ஆடு மாடு எல்லாம் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கா போகுது? நாம மட்டும் ஏன் போகணும்?

ஹீலர் கூட்டத்தில் எல்லாரிடமும் இந்தக் கேள்வி இருக்கிறது.

மனித இனம் உருவான பரிணாம வளர்ச்சியை விரிவாக எழுதிய sapiens என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை சுருக்கமாக தருகிறேன்..

"மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் மூளை யுடைய அளவு தான். நம்மைப்போல 60 கிலோ எடை உள்ள சராசரி விலங்குகளுடைய மூளை 12 சதுர இன்ச் இருக்கிறது.. ஆனால் முதன் முதலில் உருவான மனித இனத்துடைய மூளையே  36 சதுர இன்ச்... இன்றைய மனிதனுடைய சராசரி மூளை அளவு 80 சதுர இன்ச்.. (ஆமாம், நம் முன்னோர்கள் நம்மை விட முட்டாள்கள் தான்).

உடல் அளவுடன் ஒப்பிடும்போது இவ்வளவு பெரிய மூளையை அடைவதற்கு நாம் நிறைய இழந்திருக்கிறோம்.. பெரிய மூளை நம் உடலின் சக்தி தேவையில் கால் பாகத்தை உறிஞ்சுகிறது..மூளைக்கு சக்தி அளிக்க வேண்டி, நம்முடைய தசைகள் வலுவிழந்தன..

(ஒரு நாயையோ, ஒரு குட்டிக் குரங்கையோ நம்மால் சண்டையிட்டு வெல்ல முடியாது. ஆனால் இந்த உலகை இன்று நாம் ஆட்சி செய்து கொண்டிருகிறோம்.)

இந்தப் பெரிய மூளையை பாதுக்காக்க பெரிய மண்டை ஓடும் உருவானது.. அதே நேரத்தில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நடக்கவும் தொடங்கி இருந்தோம். நடப்பதற்கு ஏதுவாக, நம் இடுப்பின் அளவு சுருங்கத் தொடங்கியது..

அதேநேரம், தலை பெரிதாகும் போது, பிரசவத்தில் குறுகிய இடுப்பெலும்பின் வழியே வரும்போது பிரசவ கால இறப்பு அதிகரித்தது.. இதை சமநிலையில் வைக்க, போதிய வளர்ச்சிக்கு முன்னேயே குழந்தை பெறத் தொடங்கினோம். மற்ற உயிரினங்களின் குட்டிகள் பிறந்த சில மணி நேரத்தில் நடக்கவும், ஓடவும் செய்யும் போது, நமக்கு மட்டும் சில ஆண்டுகள் பெற்றோரின் துணை தேவைப்படுவது இதனால் தான்".

So, ஆடு மாடுகளை ஒப்பிடும்போது இயற்கையாகவே மனிதனில் பிரசவ இறப்பு விகிதம் அதிகம் தான். நம்முடைய மூளை க்கும் சிந்திக்கும் திறனுக்காவும் நாம் செய்த தியாகங்களில் எத்தனையோ கோடி பெண்களை பிரசவத்தில் கொலை செய்ததும் ஒன்று..

ஆனால், மனிதன் தான் பெற்ற மூளையை உபயோகித்தான். உணவு உற்பத்தி மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்தது, குடும்பம் எனும் அமைப்பு மூலம் போதிய உதவிகள் கிடைத்தன. மருத்துவ முறைகள் உருவாகின.. இரத்தப் போக்கு, நோய்த் தொற்று போன்றவற்றை தடுக்க முடிந்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் மனிதன் சிசேரியனை கண்டு பிடித்தான்.

இது எல்லாவற்றின் ஒட்டு மொத்த பயனாக பல ஆயிரங்களில் இருந்த பிரசவ கால இறப்பு விகிதம்  இன்று 60 கும் குறைவாக வந்திருக்கிறது..

இத்தனை கோடி பெண்கள் தன் உயிரை தியாகம் செய்து, நமக்கு இந்த மூளையை பெற்றுத்தந்தால், இப்போ வந்து ஆடு ஆஸ்பத்திரிக்கு போகுதா எனக் கேட்கிறார்கள்.. இவர்கள் எல்லாம் பரிணாமத்தையே ஏமாற்றிய பேர்வழிகள்.

https://m.facebook.com/story.php?story_fbid=10212004602819422&id=1503861056

----

தோழர் விஜயபாஸ்கர்
2018-08-03

ஆடு மாடு எல்லாம் மருத்துவமனை போய் பிரசவம் பார்க்கின்றனவா என்று கேட்கும் அறிவாளிகளுக்கு என் இரண்டு கேள்விகள்.

1. ஆடும், மாடும் சாணி, புழுக்கை போட்டு அதன் மீதே படுத்துக்கொள்ளும். நீ தயாரா?

2. ஆடும் மாடும் தன் தாயை, தன் மகளை தன் தந்தையை தன் சகோதர சகோதரியை புணரும்.. நீ அதைப்போல் செய்ய தயாரா?

https://m.facebook.com/story.php?story_fbid=2057576554252693&id=100000011056138

No comments:

Post a Comment