Wednesday, August 1, 2018

புலிகள் எரித்திரியா மாடல்களை ஊருக்கு கொண்டுவந்தனர்.

கணல் சுவாமி
Via facebook
2018-07-31

புலிகள் எரித்திரியா மாடல்களை ஊருக்கு கொண்டுவந்தனர். அதில் உச்சக்கட்ட மனித விரோத செயல் பாஸ் சிஸ்டம்.! மகளுக்கு கல்யாணம் எனில் அப்பன் அல்லது அம்மை வன்னிக்குள் பிணை வைக்கப்பட்டு யாராவது ஒரு ஆள் கொழும்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இது இன்னமும் எரித்திரியாவில் நடைமுறையில் உள்ளது.!

புலிகளின் சாராயம் கிபீர் மற்றையது இடியன் அதற்கு விளம்பரம் “வெடி போல பதம்”.
மக்கள் வயிற்றோட்டத்தால் செத்தனர். "டெட்றாசைக்கிளின் ஆண்டியாட்டிக் இல்லை, இலங்கை அரசு கொடுக்கவேண்டும்" - என கிளினொச்சி அரச அதிபரிடம் அறிவித்தனர். புலிகளிடம் அரசு கேட்டது "நீ சாராயம் விப்பாய் நான் மாத்திரை கொடுப்பதா? வரி வசூலிக்கிறாய் தானே வாங்கி கொடேன்" - என கிண்டல் பண்ணியது.!

புலிகள் வேறு யாருமல்ல எமது சமூகத்தில் இருந்து மண்ணை மீட்க என அனுப்பப்பட்ட தேவதூதர்கள் தான், அவர்கள் அங்கு போய் திரும்பி மக்களிடம் வந்த பொழுது சாத்தான்களாக மாறியிருந்தனர். அமைப்பை சாட்டி சுயமான அதிகாரங்களை நிலை நிறுத்த முயன்றனர், அதை அமைப்புக்காக என்றனர். அமைப்பும் அதை அனுமதித்தது. திருடர்கள் விபச்சாரிகள் பைத்தியக்காரர்கள் கூட சுடப்பட்டனர். மக்கள் இவற்றை எதிர்க்க அல்லது கருத்து சொல்ல முடியாத நிலைக்கு இசைவாக்கம் அடைய வைக்கப்பட்டனர். இதை மாற்று இயக்கங்களும் செய்தனர். மக்கள் டெரரைஸ் செய்யப்பட்டனர்.

ராஜீவ் கொலை எல்லாம் வேறு நிலை மடமையின் உச்சம். நாங்கள் உலக அடுமடையர்கள் என நாமே நிரூபணம் செய்த செயல் அது அதற்கு என்னிடம் காமெண்ட் இல்லை.

எனது நண்பர் ஒருவர்சொல்வார்:
"சிறுவயதில் இருந்தே ராஜீவ் நாய்க் குட்டிகளின் பிரியர் அவர் தனது ஒவ்வெரு பிராயத்திலும் ஒவ்வெரு நாய்க் குட்டிகளை அணைத்தபடி போடப்பட்டிருக்கும் படங்களை பார்த்து ரஸித்திருக்கிறேன். அந்த நாய்க் கொட்டையின் மசிருக்கு கூட ஸாமானமில்லாத ஆள் பிரபாகரன் அவனை இவர்கள் சும்மா விடமாட்டார்கள் பார்" - என சொல்வார்.

புலிகளின் வன்னி தடுப்பு முகாமுக்கு தமிழீழம் என பெயர்வைத்து கட்டையை போட்டு கப்பம் வசூலித்ததை பெரும் சாதனையாக எடுத்துக்கொள்ள முடியாது. அதை பாக்கிஸ்தானை விட இருமடங்கு அதிக வருமானம் பெறும், இலங்கையை விட மூன்று மடங்கு வருமானம் பெறும் தமிழ் நாட்டுடன் ஒப்பிடுதல் அறிவீனம். அந்த தமிழ் நாட்டின் தொழிற்துறை சிற்பி முதல்வர் கலைஞர் தான். ஆக அவர்களது அறிவு வறுமைக்கு தமிழகம் தானா பொறுப்பு?

கலைஞரும் திமுகவும் ஆயுதப் போராளிகளுக்கு பண்ணிய உதவிகளை விட சாமானிய இலங்கை தமிழருக்கு பண்ணிய உதவிகள் அதிகம். டெலோவின் மீதான கொலைத் தாக்குதலுக்கு பின்னர் கலைஞரிடம் ஆயுததாரிகள் கிட்ட நெருங்க முடியாது என்பது உண்மை.

எனக்கு பிடித்தமானவனை கொலைசெய்த பின்னர் அந்த கொலை செய்த கும்பலுடன் உறவை பேணுவது எனது  நட்புத்தன்மையின் மீது என் மீது எனக்கே அருவருப்பை ஏற்படுத்தும் நிலையாகும்.

கடைசிவரை அந்த விடயத்தில் ஶ்ரீசபாவின் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை, கலைஞரும் தனது ஓர்மத்தை நிரூபித்தே செல்கிறார்.

ராஜீவை கொன்ற பின்னர் "சோனியாவோ ராகுலோ பிரியங்காவோ இவர்களை மன்னிக்கவேண்டும்" - என எதிர்பார்ப்பது இருக்கிறதே அதைவிட கேவலமான கோழைத்தனமான செயல் வேறு ஒன்றும் இல்லை.!

No comments:

Post a Comment