Copy paste
*ஒரு முறை ராஜாஜி திருச்சியில் பேசும் போது:*
எனக்கு பரம்பரை எதிரி ராமசாமி நாயக்கர் தான் - எனக் கூறினார்.
*அதற்கு பதிலளித்த தந்தை பெரியார்:*
இதை அவர் முட்டாள்த்தனமாகச் சொல்லவில்லை. அவருடைய தாய் தகப்பனை எனது தாய், தகப்பனுக்கு தெரியாது, எனது தாய் தகப்பனை அவருடைய தாய் தகப்பனுக்கு தெரியாது.
பிறகு எப்படி பரம்பரை எதிரி என சொன்னார் என்றால், என்னை ராவணன், சூரபத்மன், இரணியன் ஆகியோர்களின் சந்ததியாகவும், தன்னை ராமன், கிருஷ்ணன் ஆகியோர்களின் சந்ததியாகவும் கருதி தான் சொன்னார்.
சூரபத்மன் பார்ப்பானை மீன் பிடிக்க சொன்னான், ஏற்றம் இறைக்கச் சொன்னான், விறகு உடைக்கச் சொன்னான்.
ராவணனும் பார்ப்பானை அடிமைப்படுத்திய வைத்திருந்தான்.
இரணியன் பார்ப்பன சேரிக்கு நெருப்பு வைக்க சொன்னான். ஆபாச கடவுளையும், புராண புரட்டுக்களையும் ஒழிக்கச் சொன்னான்.
இதை தான் நானும் சொல்கிறேன். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி இவ்வாறு கூறுகிறார்
*அதேபோல கலைஞருக்கும், பார்ப்பான் குருமூர்த்திக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. பிறகு ஏன் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என அடிமை எடப்பாடியை வைத்து காய் நகர்த்துகிறான்?*
கலைஞர் பெரியார் வழி வந்த ராவணன் வம்சம்.
குருமூர்த்தியும் கலைஞரை எதிர்க்கும் ஏனைய பார்ப்பனர்களும் ராஜாஜி வழிவந்த ராமன் வம்சம்.
ஆக இந்த ஆரிய திராவிட போர் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் நடக்கும் அரசியல். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நடக்கப் போகும் அரசியல்!
ஆக இந்த போரில் இருந்த ஒரு முக்கிய தளபதி வீழ்ந்துள்ள நிலையில் இன்னும் பலமான போர் தந்திரத்தோடும், படை பலத்தோடும், மதி நுட்பத்தோடும் போரை எதிர்கொள்ள தயாராவோம்.
No comments:
Post a Comment