Friday, August 3, 2018

மருத்துவமனையில் இறப்புகளே இல்லையா? அவர்களை ஏன் கைது செய்வதில்லை?

Ravishankar ayyakannu
2018-08-03

கேள்வி: நவீன அறிவியல் மருத்துவமனையில் இறப்புகளே இல்லையா? அவர்களை ஏன் கைது செய்வதில்லை?

பதில் 2:

License உள்ள ஒருவர் ஒழுங்காக வண்டி ஓட்டுகிறார். பயணத்தின் போது பிரேக் வேலை செய்யவில்லை. விபத்து நேர்கிறது. அதற்காக அவர் கைது செய்யப்பட மாட்டார். ஆனால், குடித்து விட்டு ஓட்டினால் கைது செய்யப்படுவார். நவீன மருத்துவத்திலும் மருத்துவரின் கவனக்குறைவுக்குத் தண்டனை உண்டு.ஆனால், நோயாளி உடல்நிலைச் சிக்கலால் இறப்பதற்குத் தண்டனை இல்லை.

போதிய கல்வித் தகுதி, அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்ப்பது என்பது license இல்லாமல் வண்டி ஓட்டுவதற்குச் சமம். நீங்கள் license இல்லாமலேயே வண்டி ஓட்டலாம் என்று பிரச்சாரம் செய்தால் கைது செய்யாமல் கொஞ்சுவார்களா? உயிரோடு யார் விளையாடினாலும் கைது தான்.

ஆனால் நீங்களோ, எம் முன்னோர் எல்லாம் license வாங்கியா மாட்டு வண்டி ஓட்டினார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

https://m.facebook.com/story.php?story_fbid=10157771824823569&id=576438568

No comments:

Post a Comment