பழூரான்
2018-11-10
நீதிபதி ராஜ மன்னார் குழு மத்திய மாநில அரசு உறுவுகள் குறிந்து பரிந்துரைகளில் என் பார்வையில் மிக முக்கியமானவை:
* 304 (பி) நீக்கப்பட வேண்டும் அது என்ன 304(பி) மாநில அரசு இயற்றும் அதாவது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டவரைகளுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட வேண்டும்.
* பொதுப்பட்டியலின் வரம்புக்குள் உள்ள விவகாரங்களுக்கு மத்திய அரசு இயற்றும் சட்டத்தைவிட மாநில அரசு இயற்றும் சட்டமே மேலோங்கி இருக்கவேண்டும் .. அதற்கு 254 ஆ பிரிவு திருத்தப்பட வேண்டும்.
* மாநில அரசுகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரங்களான 256.,257 , 339(2),334(6) போன்ற பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் .. அத்தகைய அதிகாரம் எதுவும் மத்திய அரசிடம் இருக்க கூடாது .
* இதற்கு மாற்று ,,? அனைத்து மாநிலக் குழு (Inter state council ) எல்லா முதல் அமைச்சர்களும் அல்லது முதல்வரின் பரிதிநிதிகள் கொண்டு அனைத்து மாநில குழு உருவாக்கப்பட வேண்டும் அதன் தலைமை பிரதமராக இருக்க வேண்டும் . மத்திய அமைச்சர்கள் யாரும் அந்த குழுவில் இடம் பெற கூடாது . நாட்டின் பாதுகாப்பு , அயல்நாட்டு ஒப்பந்தம் , நாணய செல்வானி, பொதுப்பட்டியில் இருக்கும் விவகாரங்கள் அனைத்தும் அனைத்து மாநில குழுவில் விவாதிக்க படவேண்டும் .. Inter state will council மாநில அரசையும் மத்திய அரசையும் கட்டுபடுத்துவதாய் இருக்க வேண்டும்.
* தற்போது உள்ள 263 வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள அனைத்து மாநில குழு பயன்ற்றது .அதனால் எந்தவித பலனும் கிட்டாது .
* நிதி ஆணைக்குழு : அரசியல் அமைப்பில். உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு என்பது மாநிலங்களின் நிதி வாயில்களையும் தேவைகளை மட்டுமே பரிசளிக்கிறது .. ஆனால் மத்திய மாநில அரசின் நிதி தேவைகளை பரசிளிக்க வேண்டும் . நிதி ஆணைக்குழு என்பது நிலையான அமைப்பாக செயல்படவேண்டும்.. அனைத்து மாநில குழுவின் பரிந்துரையின் பெயரில் நிதி அணைக்குழுவில் உறுப்பினர்கள் நியமிக்க பட வேண்டும். நிதி ஆணைக்குழுவின் பரிந்துரையை மத்திய மாநில அரசுகளை கட்டுபடுத்தும் அதிகாரம் இருக்கும் படி சட்டதிருத்தம் செய்ய வேண்டும் .
* திட்டக்குழு : தற்போது மாநில அரசிற்கு நிதி எப்படி வருகிறது ? இந்த திட்டகுழுவின் வரலாறு என்ன? 1917 சோவியத் யூனியன் வேளான் துறையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது .இந்த குறைகளை சீர் செய்ய சமதர்ம சிற்பியான லெனின் தான் திட்டமிடுதலுக்கு ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார் . திட்டகுழுவை உறுவாக்கினார் . குறுகிய காலகட்டத்திற்குள் சோவியத் யூனியன் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை சந்தித்து .
* தற்போது மாநில அரசிற்கு நிதி எப்படி வருகிறது ? 12 வது நிதி குழுவிற்கு முன்பு வரை 70 % கடனாகவும். 30% மானியமாகவும் தரப்பட்டது . 12 வது நிதி குழுவிற்கு பின்பு மத்திய அரசு மாநில அரசிற்கு கடன் தரும் முறையை நிறுத்துக் கொண்டது . கடனை வெளி சந்தையில் பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு வந்தது . ஆனாலும் ஏற்கனவே மத்திய அரசிடம் பெற்ற நிதி சுமை இன்னும் உள்ளது .
* 12 வது நிதி குழுவின் விதி Fiscal Responsibility and Budget Management Act என்ன என்றால் மாநிலத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் (gsdp - Gross State Domestic Product) 3 விழுகாட்டிற்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதி பிறப்பித்தது .
* தற்போது தமிழ்நாட்டில் உள்ள fiscal deficit எவ்வளவு 40,530 .. கிட்டதட்ட 3% தாண்டிட்டுட்டோம்.. இந்தாயவிலே நிதி பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ் நாடு மூன்றாவது இடம்.
* சட்டப்படி அமைக்கப்படும் திட்ட குழு என்பது மத்திய அரசு கட்டுபாட்டிலோ,அரசியல் கட்சி சார்புள்ளதாகவோ இருக்கக்கூடாது . அமைச்சர்கள் யாரும் திட்டகுழுவில் உறுப்பினராக இருக்க கூடாது .. யார் இருக்கலாம் வல்லுனர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பொருளாதார , அறிவியல் , தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே இருக்க வேண்டும் .. திட்ட குழுவினர் பணி மாநில அரசில் தொடங்கும் திட்டங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் . நிதி ஆணைக்குழு மானியங்களுக்கு பரிந்துரையை செய்யும் போது திட்டக் குழுவின் பரிந்துரையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ராஜமன்னார் குழு பரிந்துரைத்த மாநில சுயாட்சி கோட்பாடுகள் மறுமொழியில். படித்துவிட்டு தங்கள் பார்வையில் மிக முக்கியமான பரிந்துரைகளை என்ன என்று பதிவிடலாம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2487739547919956&id=100000518043474
No comments:
Post a Comment