சம்பந்தம் என்னும் திருமண முறை நடை முறையிலுள்ள மலபாரில் நாயர்கள் போன்ற அடிமட்ட வகுப்பினர் தங்கள் பெண்களை பிராமணர்கள் காமக்கிழத்திகளாக வைத்துக் கொள்வதை ஒரு கௌரவமாகக் கருதுகின்றனர்.
மன்னர்களே கூட தங்கள் ராணிகளுடன் முதலிரவை அனுபவித்துக் கன்னிக் கழிப்ப தற்கு பிராமணர்களை விரும்பி அழைத்தனர் (16-ஆம் நூற்றாணாடின் மத்தியில் இந்தியாவுக்கு வந்து மலபாரில் சுற்றுப் பயணம் செய்த லுதவிகோ டி வர்த்தேமா பின்வருமாறு கூறுகிறார்: “இந்தப் பிராமணர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வது முறையானதும் அதேசமயம் உகந்ததுமாகும். நம்மிடையே குருமார்கள் இருப்பதுபோன்று இவர்கள்தான் சமய வினை முறைகளில் பிரதானமானவர்கள். மன்னர் ஒரு பெண்ணை தன்னுடைய மனைவியாகத் தேர்ந்தெடுத்ததும் இந்தப் பிராமணர்களில் மிகச் சிறந்தவனை மிகவும் தகுதியானவனை அழைத்து தன்னுடைய மனைவியுடன் முதலிரவைக் கழித்து கன்னிக் கழிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறான்.
அந்தப் பிராமணன் இந்தத் காரியத்தைச் செய்ய தானே விருப்பாவத்துடன் செல்லுவதாக செல்லுவதாக நினைத்துவிடாதீர்கள். இதன் பொருட்டு மன்னன் அவனுக்கு நூறு முதல் ஐநூறு டுகாட்பணம் தருவதற்குக் கடமைப்பட்டிருக்கிறான். கள்ளிக் கோட்டையில் மன்னனைத் தவிர வேறு எவரும் இவ்வாறு செய்வதில்லை. வர்த்தேமாவின் சுற்றுப் பயணம் (ஹக்லுயத் சமுதாயம்), தொகுதி I பக். 141. ஏனைய யாத்ரிகர்கள் இந்தப் பழக்கம் மிகப் பரவலாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஹாமில்டன் தமது கிழக்கிழந்தியப் பயண அனுபங்களில் பின்வருமாறு கூறுகிறார்.
“சமோரின் திருமணம் செய்து கொள்ளும்பொது, மணப்பெண்ணை நம்பூரி (நம்பூத்ரி) அல்லது தலைமைப் புரோகிதன் அனுபவிக்கும்வரை அவளுடன் அவன் கூடி வாழ முடியாது. புரோகிதான் விரும்பினால் மேலும் மூன்று இரவுகளை அவளுடன் கூடி மகிழலாம். ஏனென்றால் அவளது மண உறவின் முதல் கனிகள் அவள் வழிபடும் தெய்வத்துக்கு புனித காணிக்கையாகப் படைக்கப்பட வேண்டும். பிரபுக்கள் சிலரும் வரவேற்கின்றனர். சமானிய மக்களும் தங்கள் பெண்களை புரோகிதர்களின் வீடுகளுக்கு அனுப்பும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொகுதி I பக்கம் 308.
இந்தப் பழக்கம் குறித்து புச்சனன் தமது பயண நூலில் பின்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “தமூரி குடும்பப்பெண்கள் பொதுவாக நம்பூதிரிகளால் கருவுறச் செய்யப்படுகின்றனர்; அவர்கள் விரும்பினால் நாயர்களின் உயர்நிலையில் உள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; எனினும் நம்பூதிரிகள் புனிதத்தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப்படுவதால் எப்போதும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.”பிங்கர்டெனின் பயணங்கள், தொகுதி VIII, பக்கம் 734.
மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட்டீரின் ஆசிரியரான திரு. சி.ஏ. இன்னல் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருகக்கத்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கத் தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் “தாலிகட்டும் திருமணம்” என்னும் மற்றோரு ஏற்பாடு நடைமுறையி இருந்து வருகிறது. மலையாளிகளின் திருமண பழக்க வழக்கங்களிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது.
இதன்படி,ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே சாதியை அல்லது உயர் சாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலிகட்டப்படுகிறது.
இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்து கொள்ள முடியும். தாலிகட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண்ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற்காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருப்படுகிறது. கீழ்ச்சாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்) சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும், தொகுதி I, பக்கம் 101.)
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 9)
No comments:
Post a Comment