Monday, October 31, 2016

இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான தந்திரம்.


தோழர் வே மதிமாறன் அவர்களின் பதிவு

இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குழந்தையையும் கத்தியால் குத்தியவர்கள், ‘தலாக் பிரச்சினையால் பாவம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்வதைக் கத்தியால் குத்திய கொலைக்காரனே நம்ப மாட்டான். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான தந்திரம்.

பெரியாரைவிடத் தீவிராம பெண்ணியம் பேசியவர்கள் யாரும் கிடையாது. ஆனால் அவர், ‘ ஒரு தாழ்த்தப்பட்டவர் என்னிடம் வந்து என்னால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், எனக்குத் தீண்டாமை வேணாம், கடவுள் வேணும் என்றால் என்னிடம் என்ன பதிலிருக்கிறது.

இந்து மதத்தில் கடவுளை கும்பிடுகிற எல்லாருக்கும் தீண்டாமை இருக்கிறதா? ஆனால், தாழ்த்தப்பட்டவர் மட்டும் நாத்திகனாக மாறி, கடவுள் மறுப்பு பேசி, இந்து மதத்தை ஒழித்து அதன்பிறகுதான் தீண்டைமை ஒழியனும் என்றால் என்ன நியாயாம்?’ என்று தன்னையே கடுமையாக விமர்சித்துக் கொண்டு,

‘உனக்குத் தீண்டாமையும் இருக்கக் கூடாது. கடவுள் வழிபாட்டு உரிமையும் உடனடியா வேண்டும் என்றால் முஸ்லிமா மாறிடு. காலையில ஏய் ன்னு கூப்பிட்டவன், மத்தியானம் நீ முஸ்லிமா மாறிட்டா, சாய்ந்திரம் பாய் ன்னு கூப்பிடுவான்.

அப்படி ஒருவர் இஸ்லாமியனாக மாறும்போது, அங்கே பெண்களைப் பர்தா போட்டு மூடுறான். தலாக் சொல்லி விரட்டி விட்டுறான் என்று சொல்வது மோசடியான வாதம். அது ஜாதியை, இந்துமதத்தைப் பாதுக்காக்கதான் பயன்படும்’ என்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்படும்போது, கடவுள் மறுப்பு பேசுவது மசூதியை இடிக்கும் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக மாறிவிடும் என்பதுபோல்,
இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியின்போது தலாக் பிரச்சினையை முதன்மைபடுத்தவது. இந்து அமைப்புகளின் இஸ்லாமிய எதிர்ப்புக்கே பயன்படும். அவர்களும் தலாக் பிரச்சினையைதான் பிரதானப் படுத்துகிறார்கள்.
*

நன்றி : தோழர் மதிமாறன்

No comments:

Post a Comment