Sunday, October 23, 2016

முத்தலாக்

தலாக் சட்டம் என்றால் என்ன?

விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. பின்வரும் வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.

முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.

அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.

அதுவும் பயன் தராதபோது அடித்துத் திருத்த வேண்டும் என்று திருக்குர்ஆன் 4:34 வசனம் கூறுகிறது.

மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல் : புகாரீ 1294, 1297)

விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.

இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாத்தை ஏற்றவர்களை விட, அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆண் வலிமை உள்ளவனாகவும், பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும்போது இரண்டு பாதுகாவலரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது சில நேரங்களில் நடந்தே தீரும். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.

இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும். இதனால்தான் மனைவியரைத் துன்புறுத்துவது மற்றவர்களை விட குறைவாகவே முஸ்லிம்களிடம் இருக்கிறது.

இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.

இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.

"உன்னை விவாகரத்துச் செய்கிறேன்'' என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பின் பெண்களுக்குப் பாதுகாப்புத் தொகை வழங்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளதால் அதைத் தீர்மானித்து பெற்றுத் தருவதற்கேற்ப ஜமாஅத்தினர் முன்னிலையில் இதை உறுதி செய்ய வேண்டும்.

வேறு எந்தச் சடங்குகளும் இல்லை.

விவாகரத்துச் செய்திட ஒவ்வொரு கணவனுக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் திருமண உறவு அடியோடு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க : திருக்குர்ஆன் 65:4)

இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

முதல் தலாக் கூறி இருவரும் சேர்ந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.

முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அந்தக் காலக்கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இதுதான் இறுதி வாய்ப்பாகும்.

மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.

ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை முறைப்படி விவாகரத்துச் செய்துவிட்டால் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

(திரும்பவும் அழைத்துக் கொள்ளத்தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான் என்று கூறும் 2:229 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு தடவைதான் விவாகரத்து நிகழ்ந்துள்ளது. ஒரு தடவை விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அதுபோல் இப்போதும் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 2932, 2933, 2934

ஒரு நேரத்தில் கூறப்பட்ட மூன்று தலாக் மூன்று தலாக்காகவே கருதப்படுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.

விவாகரத்துச் செய்த உடன் மனைவியை ஆதரவற்ற நிலையில் விட்டு விடக் கூடாது. அவளது எதிர்காலப் பாதுகாப்புக்காக போதுமான பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும். இதைச் செய்து கொடுப்பது ஜமாஅத்தார்களின் கடமையாகும்.

இது பற்றி அறிய 74வது குறிப்பை வாசிக்கவும்.

இது ஆண்கள் விவாகரத்துச் செய்வது குறித்த சட்டமாகும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

---------

இஸ்லாமிய விவாகரத்துச் சட்டம் என்பது இறைவன் அருளியது. மனிதர்களின் சட்டப்படி விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் கோர்ட்டில் தகுந்த காரணம் சொல்ல வேண்டும் அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் கணவனை ஒழுக்கமற்றவன் அல்லது ஆண்மையற்றவன் அதனால் விவாகரத்து வேண்டும் என்றும் பெண்ணை நடத்தை கெட்டவள் பிள்ளை பெற இயலாதவள்  என்று சொல்வதாக கேள்விப்படுகிறோம் இது உண்மையா?


இஸ்லாமியச் சட்டப்படி ஒர் ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால் (அவளுடைய மாதவிடாய் முடிந்து சுத்தம் ஆன பின்) அவளை நோக்கி  “தலாக்” என்ற வார்த்தையை ஒரு முறை பிரயோகிக்க வேண்டும் அதற்குப் பின் அவளை கணவன் தன்னுடைய வீட்டில் வைத்து உணவளித்து உடையளித்து பராமரிக்க வேண்டும் 3 மாத காலத்திற்கு.. அவளும் கணவன் வீ்ட்டை விட்டு செல்லக் கூடாது (அவள் நடத்தை கெட்டவளாக இருந்தால் அவளை வைத்து போஷிக்கத் தேவையில்லை) இந்த 3 மாத கால கட்டத்தில் அவர்கள் ஒரே வீட்டில் வாழச் சொல்வதின் நோக்கமே அவர்கள் இடையே இணக்கம் ஏற்படுலாம் என்பதே இந்த 3 மாத காலத்தில் அவர்கள் இணைந்து விட்டால் ............. இணைந்து கொள்ளலாம்

அப்படி இணைய விரும்பவில்லை என்றால் கணவன்  (அவளுடைய மாதவிடாய் முடிந்து சுத்தம் ஆன பின்)  இரண்டாம் முறையாக ”தலாக்” என்ற வார்த்தையை பிரயோகித்து முன் சொன்னவாறே 3 மாத காலம் மனைவியை தன்னுடைய இல்லத்தில் வைத்து போஷிக்க வேண்டும் இதுவும் அவர்கள் இடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்படவே

அப்படி இணைய விரும்பவில்லை என்றால் கணவன் 3ம் முறையாக தலாக் என்ற வார்த்தையை பிரயோகிக்கலாம் 3ம் முறை பிரயோகித்து விட்டால் விவாகரத்து உறுதியாகி விடும். இந்த விவாகரத்து விசயத்தில் இரண்டு நீதமான சாட்சிகளை  இறைவன் வைத்துக் கொள்ளச் சொல்கிறான்


ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று 3முறை சொல்வது ஒரே தடவை தலாக் என்று சொல்வதாகத் தான் கருதப்படும் என்ற கருத்தை மார்க்க அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்

இஸ்லாமிய சட்டப்படி விவாகரத்து என்பது கணவன் மனைவி மற்றும் இரண்டு குடும்பங்கள் இடையே ஆனது. இது கோர்ட்டுக்கு போவதில்லை அதனால் நீதி காவல் துறை அரசாங்கத்திற்கு இன்னல்கள் ஏற்படுவதில்லைஆனால் மனித சட்டப்படி விவாகரத்திற்கு கோர்டில் அப்ளை செய்து விட்டு கணவன் மனைவி தனியாக வாழ்ந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் கோர்டுக்கு வர வேண்டும். இதனால் அவர்கள் இடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிப்பதால்

.

அடுத்து கணவன் மனைவி பிரிந்த பின் இஸ்லாமிய சட்டப்படி அவர்களுக்குப் பிறந்த  பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு கணவனுக்குத் தான்.  கணவனிடத்தில் தான் பிள்ளைகள் வளர வேண்டும்.


ஓர் இந்துச் சகோதரர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்....... 4 பெண்களைத் திருமணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் ............. ஒர் இஸ்லாமியப் பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்ய அனுமதிக்குமா?
இஸ்லாம் இறைவன் வழங்கிய இறுதி மானுட வாழ்வியல் கோட்பாடு.........
யாருக்கு சக்தி உள்ளதோ ( அதாவது உடல்ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக ) அவரே இரண்டு அல்லது 3 அல்லது 4 மனைவிகளை திருமணம் செய்ய இறைவன் அனுமதித்துள்ளான்...........
(முஹம்மது நபியவர்கள் தங்கள் மனைவியர்களுடன் ஒரே இரவில் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு ஒரு முறை குளிப்பார்கள் என்ற அறிவிப்பு உள்ளது. இது எத்தனை பேருக்கு சாத்தியம்)
ஆனால் யார் தன்னுடைய மனைவியர்களுக்கு இடையே நீதி செய்ய முடியாது நீதமாக நடந்து கொள்ள இயலாது அதற்கான பொருளாதார மற்றும் உடல் ரீதியான சக்திகள் தனக்கில்லை  என பயப்படுகிறாரோ அவர் ஒரு மனைவியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது இறைவனின் ஆணை
அவனுடைய தூதர் முஹம்மது ஒரு படிமேல் சென்று............ யார் ஒரு பெண்ணைக் கூட வைத்து வாழ்வளிக்க இயலாதவரோ (பொருளாதார ரீதியாக) அவர் அந்தப் பொருளாதார நிலையை அடையும் வரை நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும் ( தன்னுடைய இச்சையை அடக்கிக் கொள்ள) என்ற இன்னொரு அறிவுறுத்தலை வழங்குகிறார்

ஓர் இஸ்லாமிய ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய இயலுமா

ஒரு சிலர் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யலாம்

3 என்பது மிக மிகக் குறைவு

4 சாத்தியமே இல்லை இந்தியாவில் ( அரபு நாடுகளில் வேண்டுமானால் சாத்தியப்படலாம் அவர்கள் கொழுத்த பணக்காரர்கள் என்பதால் ....... ஆனால் நம் நாட்டில் உள்ள பொருளாதார நிலையில் விலைவாசி உலையில் ஒரு மனைவியுடன் வாழவே திக்கித் திணறும் இஸ்லாமியன் ........ 2 ஒருவேளை சாத்தியப்படலாம் 3ம் 4ம் சத்தியமாய் சாத்தியமே இல்லை

பெரும்பாலானவர்கள் ஒரு விசயத்தை சிந்திப்பதேயில்லை. அது

ஆண் பெண் விகிதாச்சாரம் (sex ratio) நான் சொன்னேன் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 980 அல்லது 990 பெண்கள் தான் இருப்பார்கள். அப்படியென்றால் 10 அல்லது 20 ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்களே இல்லாத நிலை (ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் தான் உள்ளனராம்..... கீழே ஆங்கில செய்தி காண்க) (இந்த ஆண் பெண் விகிதாச்சாரம் (sex ratio) இஸ்லாமியர்களுக்கும் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் பொருந்தி வரும் பெரிய வித்தியாசம் கண்டிப்பாக இருக்காது )

Sex ratio is used to describe the number of females per 1000 of males. In the Population Census of 2011 it was revealed that the population ratio in India 2011 is 943[1] females per 1000 of males. The Sex Ratio 2011 shows an upward trend from the census 2001 data. Census 2001 revealed that there were 933 females to that of 1000 males.

அப்படியென்றால்

இப்படி ஒர் ஆணுக்கு ஒரு பெண் என்ற நிலை இருக்கும் போது எப்படி ஓர் ஆண் 1க்கு மேற்பட்ட இளம்பெண்களை திருமணம் செய்ய இயலும்

இப்படி திருப்பி பார்ப்போம்

ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் ஒர் இளம் ஆண் திருமணத்திற்கு உள்ள நிலையில் எந்தப் பெண்ணாவது...........இன்னொரு
ஆணுக்கு 2 வது அல்லது 3 வது அல்லது 4வது மனைவியாக போவதற்கு சம்மதிப்பாளா


தலாக் செல்வதற்கு முன் 1.உபதேசம் செய்யுங்கள். 2. படுக்கையில்  தள்ளி வையுங்கள்.3 . லேசாக அடியுங்கள் ( குச்சி அளவு தெரியுமா ? டூத் பிரஷ் அளவான குச்சி). 4. இரு வீட்டாரும் வைத்து சமாதானம் பேசுங்கள். இத்தனைக்கும் முடியாவிட்டால் தான் தலாக் நடைமுறை ஆரம்பமாகும்


இஸ்லாமிய சட்டங்கள்..
'விவாகரத்து"
இஸ்லாமிய சட்டத்தில் வரதட்சணை கிடையாது,
மாறாக, மணமகன் தான்  மணமகளுக்கு தரவேண்டும்.
இதுதான் 'மஹர்"
'மஹர்" தொகை நிர்ணயம் செய்வதும், பெறுவதும் மணமகள் உரிமை.
திருமண பந்தத்தில் மணப்பொருத்தம் என்பது  எல்லோருக்கும் அமைந்திடாது.
அப்படி வேறுபாடு கொண்டு பிரிந்தால் மணமகள் சுயமாக வாழவே இந்த 'மஹர்" தொகை முன் ஏற்பாடு.
மேலும் பிரிந்து வாழும் தம்பதியினரின் குழந்தைகள் பால்குடி மறக்கும் வரை தாய் பராமரிக்க தாய்,சேய் இருவருக்கும் ஆகும் செலவை பிரிந்த கணவனே செலவு செய்ய வேண்டும்.
பால் பருவம் முடிந்த பிறகு அந்த குழந்தைகளை வளர்க்கும் முழு பொருப்பும் தந்தையே சாரும்.
விவாகரத்து பெற்ற மனைவி மறுமணம் புரிந்து புதிய வாழ்வு வாழலாம்.
முந்தைய கணவன் அந்நியர் ஆவார்.
விவாகரத்து எனும் இஸ்லாமிய சட்டத்தில், ஆண் கோரிக்கை வைத்தால் 'தலாக்" பெண் கோரினால் 'குலா"
ஆண் 'தலாக்" கோரிக்கை வைக்க தகுந்த  காரணங்களை சபையில் சமர்பிக்க வேண்டும்.

பெண் 'குலா" கோரிக்கை வைக்க நிர்ப்பந்தம் கிடையாது.
பெண் அந்தரங்க பிரச்சினைகளை வெளிப்படையாக கூற வெட்கம் தடையாக இருப்பதால் இந்த சலுகை.
இஸ்லாமிய விவாகரத்து கிடைக்க மூன்று மாதவிடாய் காலம் ஆகும்.
இந்த இடைவெளியில் தம்பதிகள் மணம் ஒன்றினால் மீண்டும் திருமண பந்தத்தை தொடர அனுமதி உள்ளது.
கடந்து விட்டால் முடிவு விவாகரத்து ஆகும்.

மீண்டும் அதே தம்பதியர் சேர்ந்து வாழ விரும்பினால் விவாகரத்து அடைந்த பெண் வேறு ஒருவரை திருமணம் முடித்து, அவர்கள் தாம்பத்யம் கொண்டு வாழ்ந்து, அந்த தம்பதியினர் 'தலாக்" அடைந்தால் மட்டுமே மீண்டும் பழைய தம்பதியினர் திருமண வாழ்வு வாழ முடியும் .

No comments:

Post a Comment