Tuesday, October 4, 2016

விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?


இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால்...

  1. மதுரையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
  2. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
  3. திருச்சி மஹாமகம் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
  4. பழனி முருகனுக்கும், திருசெந்தூர் முருகனுக்கும் நேர்த்திக்கடன் செலுத்த பல ஆயிரம் மசூதிகளை கடந்து லட்சகனக்கனக்கான இந்துக்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
  5. நெல்லையிலும், தஞ்சையிலும் லட்சகணக்கான இந்துக்கள் கூடி பல மசூதிகள் வழியாக தேர் இழுத்து செல்கிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
  6. வருடாவருடம் தீபாவளி வருகிறது, பொங்கல் வருகிறது கோடிக்கணக்கான இந்துக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
  7. தினம், தினம் இந்துக்களின் சவ ஊர்வலங்களும், சாமி ஊர்வலங்களும் பல நூறு மசூதிகளை கடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பதட்டம் இல்லை பரபரப்பு இல்லை.
இப்போது கேள்விக்கு வருவோம்...

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா? இந்த கேள்வியை கேட்டு தான் பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்கிறார்கள் காவிகள். இவர்கள் கேட்கும் உரிமை என்ன தெரியுமா?

*வினாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மசூதிகளையும், இஸ்லாமியர்களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் கல்வீசி தாக்கவும், செருப்புகளை வீசி அவமதிக்கவும். "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சிய கட்டு", "பத்து பைசா முருக்கு, பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற மதவெறி கோஷங்களை எழுப்பும் உரிமையையும் தான் இவர்கள் கேட்கிறார்கள்*

"நம்முடைய கடவுளான ன்கிற இந்த கேள்விக்கு பின்னால் இவ்வளவு அடங்கி இருக்கிறது. இவர்கள்விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?" எ கேட்கும் இந்த உரிமையை எத்தனை இந்துக்கள் ஆதரிக்கிறீர்கள். மேல் குறிப்பிட்ட எத்தனையோ இந்து பண்டிகைகளும், திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது இந்த விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் ஏன் இத்தனை பதட்டங்களும், பரபரப்புகளும்?

காரணம் இவர்கள் இந்த விநாயகர் ஊர்வலத்தை தங்கள் வளர்சிக்கும், சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் பயன்படுத்த முனைகிறார்கள். இந்து கடவுளான விநாயகரை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் இந்துத்வாவினரின் இந்த விநாயகர் ஊர்வலங்களை முஸ்லிம்கள் எதிர்ப்பதை விட விநாயகரை கடவுளாக மதிக்கும் உண்மையான ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும். அதுதான் நீங்கள் விநாயகருக்கு செய்யும் உண்மையான பக்தியாக இருக்கும்.

இந்துத்வாவினர் நடத்தும் இந்த மதவெறி ஊர்வலங்களை பெரும்பான்மையான இந்துக்கள் ஆதரிப்பதில்லை என்பதற்கு, இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் செய்தி நிறுவனம் எடுத்துள்ள இந்த கருத்து கணிப்பே சாட்சி. இருந்தாலும் "விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?" என்ற இந்த கேள்வி சரியான கேள்வி தானே என்று 14.81% சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அந்த மக்களும் இந்த கேள்விக்கு பின்னால் உள்ள மதவெறி அரசியலை விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காவே இந்த பதிவு.

இந்தநாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

No comments:

Post a Comment