துளசி கதை
இது நாயக்க மன்னர்கள் காலத்து
வரலாறு.தஞ்சாவூரை நாயக்க
மன்னர்கள் ஆண்டார்கள். மதுரையை
ஆண்டவர்கள் மதுரை நாயக்கர்கள்.
தஞ்சையை ஆண்டவர்கள் தஞ்சை
நாயக்கர்கள். தஞ்சை நாயக்கர்கள்
வைணவர்கள். அதாவது
நாமக்காரர்கள்.
எனவே இந்த வைணவர்களின்
அரசாட்சியை ஒழித்துக் கட்ட
சைவர்கள், மராத்தியர்களுடன் பேசித்
தஞ்சாவூர்மீது படையெடுத்து
வரும்படி செய்தார்கள்.
மராத்தியர்களுக்குச் சைவர்கள்
கூறிய யோசனை இது. நவராத்திரி
சமயம் தஞ்சைமீது படையெடுங்கள்.
அதுதான் சரியான சமயம்.
ஏனென்றால் நவராத்திரியின் போது
ஆயுதங்கள் எல்லாம் பூசையில்
இருக்கும். அதை எடுக்காமலிருக்க
ஏற்பாடு செய்கிறோம் என்றும்
கூறினார்கள்.
அதுபடி மராத்தியர்கள்
நவராத்திரியின் போது வந்தார்கள்.
மராத்தியர்கள் படை எடுத்து
வந்திருக்கிறார்கள்; தடுத்து நிறுத்த
வேண்டும் என்று தஞ்சை நாயக்க
மன்னரின் தளபதிகள் சொன்னார்கள்.
ஆயுதமோ இல்லை, பூசையில்
இருக்கிறது. என்ன செய்வது?
குருக்களையும் புரோகிதர்களையும்
கேட்டார்கள். குருக்களின் யோசனை
எப்படி இருக்கும்? குருக்கள்
சொன்னார்: ஆயுதத்தைப் பூசையில்
வைத்திருக்கிறோம். எனவே
ஆயுதத்தை எடுத்தால் அம்பாள்
கோபிப்பாள், மகாதோஷம் என்றார்.
மன்னர் கேட்டார்: மராத்தியர் படை
எடுத்து வந்திருக்கிறார்களே, தடுக்க
என்ன வழி?
குருக்கள் அருமையான ஆன்மிக
யோசனை ஒன்று சொன்னார்.
பூசைக்கு ஏராளமான துளசி
வந்திருக்கிறது. அதைக் கோட்டை
வாசலில் போட்டு விட்டால் அதைத்
தாண்டி எதிரிகள் வர மாட்டார்கள்.
துளசியைத் தாண்டுவது மகாபாவம்
என்றனர்.
இவ்வாறு புரோகிதர்களின் புளுகை
அன்றும் நாயக்க மன்னர்களும்,
அவருடைய பக்தர்களும்
நம்பினார்கள்.
அங்குள்ள துளசியையெல்லாம்
கோட்டை வாயிலில் போட்டார்கள்.
துளசியின் விசேடம்(!)
மராத்தியனுக்குத் தெரியுமா?
தெரியவில்லை. மராத்தியர்களிள்
குதிரைகளுக்கும் தெரியவில்லை.
கோட்டைக்குள் மராத்தியர்கள்
மளமளவென்று வெள்ளம் போல்
புகுந்தார்கள். தஞ்சை நாயக்கர்களின்
தலைகளைப் பனங்காய்களைப் போல்
சீவித் தள்ளினார்கள். தஞ்சை நாயக்கர்
ஆட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி
இருந்த இடத்தில் மராத்தியர் ஆட்சி
ஏற்பட்டது.
அன்று துளசியின் பித்தலாட்டத்தைச்
சொல்ல தந்தை பெரியார் போல் வேறு
ஒருவரும் இல்லை. இராப்பகலாய்
இருபது நாள் கொள்ளையடித்தார்கள்.
துளசி பார்த்துக் கொண்டிருந்தது.
துளசிக்குள்ளிருந்த அம்பாளும்,
சக்திகளும் பட்ட அடியால் அங்கேயே
மாண்டு போனார்கள்.
தஞ்சை நாயக்கர் ஆதிக்கம் துளசிப்
பிரசாதத்தின் மகிமையால் நம்பி
மன்னர்களின் அலுவலர்கள் தம்
கடமையைக் கைவிட்டனர்.
எனவே அந்தக் காலத்துப் புலவன்
பார்ப்பான் பெருத்து வடுகன்
துரைத்தனம் பாழ்ந்ததுவே என்று
பாடினார். பிரசாதமும், பூசையும்
மலிந்து விட்டது என்பதுதான் இதன்
பொருள்.
நூல் : இந்து மதம் எங்கே போகிறது?
No comments:
Post a Comment