Tuesday, October 23, 2018

விவசாயம் எனும் புனித பசு - poovanan ganapathy

Poovanan ganapathy
2018-10-23

விவசாயம் எனும் புனித பசு

எந்த தொழிலும் குறைவானது அல்ல என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.ஆனால் அனைத்திலும் சிறந்தது உழவு தொழில்,உழவன் இல்லை என்றால் உலகே இல்லை என்று ஒரு தொழிலை மிகவும் தூக்கி பிடித்து கொண்டு மற்றவற்றை இழிவாக பார்க்கும் பார்வை எப்படி வந்தது என்று தெரியவில்லை.

உழவோடு தொடர்புடைய பழக்க வழக்கங்கள்,மரபுகள் மிகவும் புனிதமாகவும் உயர்வாகவும் ,வேட்டையாடுதல்,மீன் பிடித்தல் ,பாண்டங்கள் செய்தல்,துப்புரவு பணி,மயான பணி போன்றவை குறைவாகவும் பார்க்கப்படும் பார்வை இன்றும் உண்டு.தங்கள் மூடத்தனங்களை விடாமல் பிடித்து கொண்டிருக்கும் குழுக்களில் பூசாரிகளுக்கு இணையானவர்கள் உழவர்கள்.

மனிதன் evolve ஆகி வாழ ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து பார்த்தல் விவசாயம் என்பது 3000 வருடத்துக்கு முன்பு இருந்து தான். அதுவும் மிக குறைந்த அளவில் தான்.

உழவு தொழில் மனிதனால் உருவாக்கப்பட்டதே மதுவுக்காக தான். போதை தரும் கனிகள்,உணவு தாவரங்களை ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய காடுகளை அழித்து நிலங்களை உருவாக்கினான்.

காடுகள் அழிய மிக மிக முக்கிய காரணம் விவசாயம் தான்.மரங்களுக்கு எதிரியும் விவசாயம் தான்.

அதிக எண்ணிக்கையில் உயிரினங்கள் கொல்லப்படுவதும் உழவு தொழிலால் தான் .காடுகள் அழிந்து விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்தன .இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் zhum முறை பயிரிடுதல் உண்டு. காட்டை கொளுத்துவார்கள்.தப்பித்து ஓடி வரும் அணைத்து உயிரினங்களையும் வேட்டை யாடி அவற்றை சேகரித்து ,காய வைத்து சில மாதம் வரை உண்ண வைத்து கொள்வார்கள்.பிறகு எறிந்த காட்டில் விதை நெல் தூவுவார்கள்.அதை அறுவடை செய்வார்கள்.இரு முறை விதை நெல் தூவப்படும். பின்பு வேறொரு காட்டு பகுதியை எரிப்பார்கள்.7 ஆண்டுகளுக்கு பின், முன் எரிக்கப்பட்ட காட்டு பகுதிக்கு வருவார்கள் (அதிக இடங்கள் இருந்தால் 20 ஆண்டுகள் கழித்தும் வருவார்கள். குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் கழித்து தான் முன்பு எரிக்கப்பட்ட இடத்துக்கு வருவார்கள்)

இதில் என்ன கடினம் இருக்கிறது.சைவ உணவு என்று சொல்லப்படுவது மனிதனின் உணவில் மிக குறைவான பங்கே வகிக்கிறது.மக்கள் தொகையில் மிக குறைவான மக்களே சைவ உணவை மட்டும் உண்பவர்கள்.அதை பெரிய உயர்வு என்று கற்பித்ததால் அதனை அதிகம் உண்ண துவங்கிய மக்கள் கூட்டமும் குறைவு தான்.

இப்போது பயிர் செய்யபடும் 90 சதவீத பயிர்கள் வந்தேறி பயிர்கள் தான்.சில நூறு ஆண்டுகளுக்கு முன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டவை தான்.பல்வேறு விவசாய முறைகளும் இறக்குமதி செய்யப்பட்டவை தான்.பெண்களுக்கு சொத்தாக நிலம் கொடுக்க கூடாது,படித்த பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள் என்ற வாதங்கள் எழுந்ததால் இந்த பதிவு.இன்றைய படிப்பு விவசாயிகளுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது என்று பேசுபவர்கள் பலர் இருப்பது வருத்தம் தரும் ஒன்று.மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.

https://m.facebook.com/story.php?story_fbid=2133238866687895&id=100000054060235

----

சார். ஒரு சிறு மாறுபாடு மட்டும்  உண்டு. உண்மையாக விவசாயம் செயபவன் எவனும் விவசாயத்தை தூக்கி பிடிப்பதில்லை. அவன் அதை ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கிறான். அதில் லாபம் வேண்டி உழைக்கிறான். உண்மையில் படிப்பினை அவன் மதித்தான், அதில் அதிகாரம் உள்ளது என்பதையும் உணர்ந்தான் ஆகவே தான் உடனடியாக தன் பிள்ளைகளை படிக்க வைப்பதே முதன்மை என நினைத்தான். படிப்பு அவசியமற்றது என எண்ணியது என் தாத்தா காலத்தியது. ஆனால் அதில் படித்து வெளி வந்த பிள்ளைகளை வெளியே தனக்கு போட்டியாய் வருவதை விரும்பாதவர்களே விவசாயம் புனிதமானது , அதை செயபவன் கடவுள் என தூக்கி பிடிக்கின்றனர். இப்படி பேசுபவன் எவனும் விவசாயம் செய்வதில்லை. மாறாக விவசாயியின் பிள்ளைகளை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்தி அவனை மீண்டும் அதற்குள்ளேயே வைத்திருப்பதற்கான ஒரு வழியே. ஊருக்கு வெளுப்பவர் வீட்டு பையனை பார்த்து அது புனிதத் தொழில் அதை செய்பவன் உயர்ந்தவன் என்று சொல்வதற்கும் இதற்கும் வேறுபாடில்லை... காலம் காலமாக விவசாயம் செய்பவன் சரியாக இருக்கிறான். புற்றீசல்கள் தான் பிரச்சனை .

No comments:

Post a Comment