Monday, October 22, 2018

வட சென்னை vs வட குருசேத்திரம் - umamaheshvaran

Umamaheshvaran Panneerselvam
2018-10-22

வட குருசேத்திரம்

எனக்குத் தெரிந்த மகாபாரதக் கதையை வைத்து சொல்கிறேன்.

ஒரு கிளைக்கதை என்றும் வைத்துக் கொள்ளலாம். திருதிராஷ்ட்ரனுக்கு திருமணம் முடிக்க திட்டமிடுகிறார் பீஷ்மர். ஊரெல்லாம் தேடி காந்தார தேசத்திலிருந்து  ஒருவழியாக காந்தாரியை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
பின்னொருநாளில் பீஷ்மர் காந்தாரிக்கு ஏற்கனவே மணமாகி விதவை ஆகி பின்னர் அதை மறைத்து திருதராஷ்டிரனை மணம் முடித்திருக்கிறார் என்பதை அறிகிறார்.

மகாபாரதத்தின் இன்னொரு கிளைக்கதை சொல்கிறது காந்தாரி ஒரு ஆட்டை மணம் முடித்திருந்தார் என்று. ஒரு விதவையை மன்னனுக்கு மணமுடித்து வைத்துவிட்டதாக ஊர் மக்கள் பேசுகிறார்கள். திருதிராஷ்டரன் மட்டும் இல்லை என்றால் ஒரு ஆடு தான் டா உங்க அப்பன் என்று கெளரவர்களை ஏளனமாக சிலர் பேசவும் பீஷ்மர் வெறுப்படைகிறார்.

ஏமாற்றி விட்டதாக எண்ணி கடுப்பாகிறார் திருமணம் முடிந்து குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக ஒரு மாளிகையில் வீட்டுச்சிறை வைக்கிறார்.

காந்தாரியின் தகப்பனாரும் சகுனி உள்ளிட்ட இன்ன பிற சகோதரர்களும் சிக்கிக் கொள்கிறார்கள் ஆனால் ஒரு வித்தியாசமான ட்ரீட்மெண்ட் கிடைக்கிறது.

அவர்களை ஒரேடியாக பீஷ்மர் கொன்று விட வில்லை.அன்புடனும் மிகுந்த அக்கறையுடனும் உணவு உடை அலங்காரங்கள் மதிப்பு மரியாதை கொண்டு கவனிக்கிறார். ஒரே ஒரு வியூகம்..அவர்களுக்கு தரப்படும் உணவின் அளவைப் படிப்படியாகக் குறைக்கிறார். உணவு அதிகம் வேண்டும் என்று கேட்பது சத்திரிய மரபுக்கு இழுக்கு என்பதால் சகுனி அண்ட் கோ அமைதியாய் இருக்கிறார்கள். யாவரும் தங்களுக்கு வரும் உணவைத் திரட்டி கடைக்குட்டி சிங்கம் சகுனிக்கு மட்டும் உண்ண கொடுக்கிறார்கள். நாளடைவில் அதுவும் தீர்ந்துபோக ஒவ்வொருவராக மடிகிறார்கள். அவர்களின் உறுப்பை உண்டு தின்று வளருமாறு சுகலவன் ஆகிய சகுனியின் தந்தை சகுனியைப் பணிக்கிறார்.

அதை தின்று வன்மத்துடனும் வேட்கையுடனும் சகுனி வளர்கிறான்
கடைசியில் சுகலவன் மரணிக்கும்போது சகுனியின் பாதத்தை உடைக்கிறார். அய்யோ என்று வலியில் அலறும் சகுனியிடம் சொல்கிறார் " நீ ஒவ்வொரு முறையும் நொண்டும்போதும், எப்படி நீ உயிருடன் இருக்க வைக்கப்பட்டாய், யாரைப் பழிவாங்க வேண்டும், ஏன் உயிர் ஜீவித்திருக்க வேண்டியதன் நியாயத்தையும் நினைப்பாயாக " என்று சொல்லிவிட்டு போகிறார்.

இறுதியில் தந்தையின் ஈமச்சடங்கு செய்ய வேண்டும் என்று சொல்லி சகுனி வெளியே வர கோருகிறான். பீஷ்மர் அனுமதிக்கிறார்.

வெளியே வந்தவன் வெறும்கையோடு வரவில்லை. சுகலவன் இறுதியாக தனது விரல்களை எடுத்துக்கொண்டு அதை வைத்து சொக்கட்டான் கட்டைகள் செய்யுமாறு சகுனிக்கு அறிவுறுத்தியிருந்தார். அந்த சொக்கட்டான் கட்டைகள் சகுனியின் சொற்படி தான் கேட்கும். He mixes occult and vengeance in right proportions and Viola! He gets a dice that plays as per his command.

பின்னர் துரியோதனன் மூலமாக குரு வம்சத்தின் உள்ளே வருகிறான். சொக்கட்டான் உருட்டி யுதிஷ்டிரனை வலையில் சிக்க வைக்கிறான். திரெளபதியின் துகில் உரிகிறது. பின்னர் அதனால் துரியோதனனின் தொடை கிழிகிறது. போரால் குரு வம்சமே துவம்சம் ஆகிறது.

வெளியிருந்து பார்க்க சகுனி கெளரவர்களுக்கு அனுசரனைபோல் தோன்றினாலும் சகுனி செய்தது கெளரவர்கை, பாண்டவர்கள் இருவரையும்
செய்யும் தரமான சம்பவம்.

பாரதக் கதையின் ஹீரோ அர்ஜுனன் என்பார்கள்.
சிலர் கிருஷ்ணன் என்பார்கள்.

எனக்கு ஹீரோ சகுனி.

விஷ்ணு சர்மா கூறும் பஞ்ச தந்திரங்களான

மித்ர பேதம் - நட்பைப் பிரித்தல்
மித்ர லாபம் - நண்பர்களை 
சந்திவிக்கிரகம்-பகைவரை கூடிக் கெடுத்தல்
அர்த்த நாசம்-கிடைத்ததை அழித்தல்
அசம்பிரேட்சிய காரித்துவம்- யோசிக்காமல் செய்து முடித்தல்

என பஞ்ச தந்திர குணங்களின் personification தான் சகுனி.

பாண்டவ நியாயம், கெளரவ நியாயம் விட்டுவிட்டு சகுனியின் மகாபாரதம் என்ற angle ல் பார்த்தால் மகாபாரதமே வேறு perspective.

அவ்வகையில் சகுனி தான் பாரதக் கதையின் வினையூக்கி. The game Changer.

நிற்க.

நுவார் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் பெண்கள் . நக்கலுக்கு சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன்.

நுவார் படங்களின் இருவகைப் பெண்கள் காட்டப்படுவார்கள். அப்பாவி மங்கானிகள். ஒன் சைடு லவ் , காதலனுக்காக காத்திருத்தல், மணாளனே மங்கையின் பாக்கியம் பேக்கு மக்கு ப்லாஸ்திரி வகையறா..

மற்றொரு வகையான பெண்கள் – Femme Fatales என்று சுட்டப்படும் வகைமை. தனக்கு வேண்டுமென்றால் எந்த extremeக்கும் செல்லும் I know what and what not to do, I know what I want வகையறாக்கள். பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் நன்கு பரிசையமான உதாரணம், ஆரண்ய காண்டம்  சுப்பு. யாஸ்மின் பொன்னப்பா நடித்திருப்பார்.

முதல்வகை மங்கானிபோல் ஆரம்பத்தில் தோன்றினாலும் இறுதியில் she ll show her colours as a femme fatales. ஆண்களை தன்னுடைய game of con ல் பகடைகளாக ஆக்கி சுப்பு சம்பவம் செய்யும்போது ஆண்களை மட்டுமே சுற்றி அதுவரை நகர்ந்துகொண்டிருந்த ஆரண்ய காண்டம் அந்த மொமண்ட்டில் ஒரு பெண்ணிய படமாக (  revolving around a woman என்ற அர்த்தத்தில்) மாறும். Neo Noir க்கான சரியான உதாரணமாக, தனக்கு வேண்டியதை சாதிக்கும் Bold, beautiful, manipulative, con artistry என சகலமும் கலந்த ஒரு Femme Fatale க்கு வேறு நல்ல உதாரணம் சமீபத்தில் இதைவிட வேறு இல்லை எனலாம்.

இப்படியாக

ராஜன், அன்பு, குணா ,செந்தில்,  முத்து, தம்பி, வேலு, மணி என ஆண்களை மட்டுமே சுற்றி நகர்வதைப் போல் கதை இருந்தாலும்

சகுனியின் சொக்கட்டான் வித்தை + Femme Fatales க்கே உரிய கல்யாண , அசுப குணங்கள் கொண்ட சந்திராவின் கேரக்டர் விஸ்பரூபம் எடுக்கும்போது, அந்த படத்தின் நரேட்டிவ் வேறு லெவலுக்கு போகிறது.

ஆம்.வட சென்னை படத்தைப் பற்றி சொல்ல தான் இவ்வளவு பீடிகை.

அங்கே சந்திரா தான் puppet master.

She pulls the strings.

The puppets dance to her tunes.

சந்தா செய்வது கிட்டத்தட்ட piper and the mice கதையில் வருவதுபோல் மொத்தமாக ஆண்களை எலிகளாக வைத்து செய்கிறார்.
படத்தில் ராஜன் ஒரு லூசுக் கூ. அன்பு ஒரு எமோஷனல் அவசரக் குடுக்கை.

மற்ற தடிமாடுகள் brawns and brut with no brains. பத்மா , முன்பு சொன்னதுபோல் நுவார் பட இலக்கணத்தின் ஒரு பகுதியான டைப் 1 வகை மங்கானி பெண்.

தெளிவாக அங்க ஸ்கெட்ச் போட்டு கேம் ஆடுவது சகுனி என்ற சந்திரா என்ற Femme fatales. உறவாடிக் கெடுத்தல், நட்பை ஈட்டல், நண்பர்களை பிரித்தல், பெற்றதை இழத்தல் என சிறப்பான Game.  சந்திரா அங்கே Game changer இல்லை. சந்திரா தான் Game மே.

மகாபாரதத்தில் இருந்து நல்லதொரு Blueprint தலைவன் வெற்றிமாறன் எடுத்திருக்கிறார்.

இரண்டாம் பாகம்- அன்புவின் எழுச்சி என்றால்,

முதல் பாகத்துக்கு சந்திராவின் சொக்கட்டான் என்பதே சரியான பேராக இருக்கும் என்பது என் உள்ளக் கிடக்கை.

Protagonist அங்கே ராஜனோ, அன்போ இல்லை.

சந்திரா..

Don't miss her.

Vetrimaaran has delivered one of his bests.
நல்ல எடிட்டிங், இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் இருந்திருந்தால், சமீபத்திய படங்களில் தமிழின் தலைசிறந்த நுவார் படமாக வட சென்னை இருந்திருக்கும்.

More to come..

https://m.facebook.com/story.php?story_fbid=10215315675958588&id=1636056806

No comments:

Post a Comment