Abudhakir Sarfaan
2018-12-12
பொதுவாக எந்த மத்ஹபை எடுத்துக்கொண்டாலும் அதை சார்ந்த இமாம்கள் மனிதன் என்ற வகையில் காலத்திற்கு பொருந்தாத ஒத்துபோகாத, நடைமுறைபடுத்துவதற்கு சாத்தியமற்ற பதுவாக்களையும் வழகியுள்ளார்கள் என்பதை பிக்ஹு துறையோடு கூடிய தொடர்புள்ளவர்கள் புரிந்துகொள்ளவார்கள்.
எனவே அந்த வகையில் ஒரு மத்ஹபை மாத்திரம் பிடித்து தொங்கிகொள்வது இஸ்லாத்தை தூயவடிவில் நடைமுறைபடுத்துவது சாத்தியமற்ற விடயமாக போய்விடும். சில போது அதன் மூலமாக நாங்கள் எதிர்பார்கின்ற நன்மைகளை விட தீமைகள் விளைவதற்கு வாய்ப்பு அதிகம்....
உதாரணமாக ஷாபி மத்ஹபில் சட்டமாக சொல்லப்பட்ட தீர்புக்களுள் ஓன்று:
"ஒருவர் ஒரு பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு, அவரின் மூலம் அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அந்த பெண்பிள்ளையை அவருக்கு திருமணம் செய்துகொள்ளலாம்.
அது மாத்திரம் அல்ல அந்த பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணின் மூலமாக அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அந்த ஆண் பிள்ளையை அந்த பெண்ணுக்கு திருமணம் முடித்துக் கொள்ளலாம்"
எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில்," ஷாபி மத்ஹப்பை மாத்திரம் தான் நாங்கள் சட்டமாக கொள்வோம் என்று கூறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா" இது போன்ற ஒரு நிகழ்வு எமது சமூகத்தில் ஏற்பட்டால் இந்த ஷாபி மத்ஹபின் சட்டத்தை சரி கண்டு அமுல்படுதுவர்களா?
எனவே எல்லா மத்ஹபிலும் ஆங்காங்கே நடைமுறை சாத்தியமற்ற பத்துவாக்கள் நிறைய காணப்படுகின்றன.
இவை அனைத்தும் மார்க்கம் என்ற பெயரில் பூஜிக்கபடுவதே இஸ்லாம் பற்றிய தவறான சிந்தனைகள், கருத்துக்கள் எழுவதற்கு காரணமாக அமைகின்றன.
https://m.facebook.com/story.php?story_fbid=2371696299607575&id=100003016838794
No comments:
Post a Comment