Thursday, December 27, 2018

ஏற்கனவே உடைந்து போயிருக்கும் நோயாளி மருத்துவர் உறவை மேலும் நொறுக்காதீர்கள்

மருத்துவர் . மா. அன்புமணி.
2018-12-28

என்னோடு மருத்துவம் படித்த நண்பனுக்கு காசநோய் pleural effusion தாக்குதல்.

இன்னொரு மருத்துவருக்கு முதுகெலும்பில் காசநோய் தாக்குதல்.

ஒரு ஆய்வக நுட்பனருக்கு நுரையீரல், வயிறு இரண்டிலும் காசநோய்.

எத்தனையோ மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணிய்யாளர்கள் எச்ஐவி, மஞ்சள் காமாலை, நோய்த் தொற்று-க்கு ஆளாகியுள்ளனர்.

எல்லாமே நோயாளியிடம் இருந்து எதிர்பாராத விதமாக தொற்றிக் கொண்டது தான்.
அதுபோல பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா வைரசு  நோயாளியிடம் இருந்து தொற்று பரவி உயிர் இழந்த மருத்துவத் துறையினர் ஏராளம்.

இவை எல்லாம் ஆண்டு தோறும் occupational  hazard பணியிட கேடுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன.

எச்ஐவியோ, எப்படைட்டிசு பி யோ உடைய நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது எதிர்பாராதவிதமாக மருத்துவர், செவிலியர் களுக்கு காயம் ஏற்பட்டு நோயாளியின் குருதியோடு தொடர்பு ஏற்படுவது நாளும் நடக்கிறது.

இந்த ஆபத்து நடக்க அனைத்து வாய்ப்புகளும் உண்டு என்று தெரிந்தே எச்ஐவி ரத்தத்தில் கையை குளிப்பாட்டி எடுக்க எவ்வளவு மனத் துணிவு வேண்டும்.

எகிறும் இதயத் துடிப்போடு எச்ஐவி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் அந்த திருமணம் ஆகாத, அல்லது ஆன  இளம் மருத்துவர் செவிலியர்களின் மன உளைச்சலை மைக்ரோ ஹார்ட் அட்டாக்குகளை யாரேனும் அறிவீரா?

எச்ச்ஐவி பாதித்த மஞ்சள் காமாலை பி பாதித்த நபர் சாலை விபத்தில் அடிபட்டு ரத்தம் வழிய வழிய தூக்கிக் கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் போடப்படும் போது, அந்நபருக்கு எச்ஐவி உள்ளதா மஞ்சள் காமாலை பி உள்ளதா என்று அப்போதைய பரபர நேரத்தில் யாரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில்லை.

முகத்தில் தெறிக்கும் நோயாளியின் குருதியை துடைத்துக் கொண்டு டிரையேஜ் ட்ரீட்மெண்ட் கொடுப்போரைப் பற்றித் தெரிந்து கொண்டதுண்டா?

லேபர் வார்டில் பிரசவம் பார்க்கும் போது முகத்தில், உடலில் திடீரென தெறிக்கும் பனிக்குட நீரில் என்ன என்ன நோந்த்தொற்றுக்கு வாய்ப்புள்ளதோ என அச்சம் ஒருபுறமும், தாயும் சேயும் நன்றாக பிறக்கனுமே என்ற பதைபதெப்போடு நகரும் மணித்துளிகளை அறிவீரா?

எல்லையில் போர் நடந்தால் தான் போர்வீரன் கூட குண்டுகளை எதிர்கொள்கிறான்.
ஆனால், ஒரு மருத்துவர் செவிலியர் ஒவ்வொரு நோயாளி யை கவனிக்கும் போதும் குண்டுகள் வீசப்படும் போர் முனையில் தான் நிற்கிறார்கள்.

மருத்துவ விபத்துக்கள், குறைபாடுகள் வேண்டும் என்று நடத்தப்படுவதில்லை.
ஏனெனில் மருத்துவர்களே மருத்துவ விபத்துகளில் நோயாளிகளை விட அதிகம் சிக்குபவர்களாக உள்ளனர்.

கவனமின்மை நிர்வாக குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து க்கு இடமில்லை.

ஆனால், இது தான் சாக்கு என்று வன்மத்தைக் கொட்டாதீர்கள்.

ஏற்கனவே உடைந்து போயிருக்கும் நோயாளி மருத்துவர் உறவை மேலும் நொறுக்காதீர்கள்.
இங்ஙனம்.

https://www.facebook.com/100001078193497/posts/2048071691905417/

No comments:

Post a Comment