Tuesday, December 11, 2018

உர்ஜித் பட்டேலின் ராஜினாமா அவ்வளவு பெரிய மேட்டரா? - Narain

Narain Rajagobalan
2018-12-10

உர்ஜித் பட்டேலின் ராஜினாமா அவ்வளவு பெரிய மேட்டரா?

ரொம்பவே பெரிய மேட்டர்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்திட்ட நோட்டு தான் இந்தியாவுக்குள் செல்லும். ஒரு நாட்டின் பணத்தில் கையெழுத்திடும் உரிமை பிரமருக்கோ, குடியரசு தலைவருக்கோ, உச்சநீதிமன்ற நீதிபதிக்கோ கிடையாது. அது ரிசர்வ் வங்கி கவர்னருக்கு தான் உண்டு. அவ்வளவு பவர்புல்லான இடம் இது.

1 ) ரிசர்வ் வங்கி என்பது தன்னாட்சி அதிகாரத்தோடு இயங்கக் கூடிய ஒரு அமைப்பு. (Institution). ஒரு கவர்னர் தன்னுடைய பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்வது என்பது “அவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கும் அழுத்தம்” காரணமாக தான் என்பது ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கூட புரியும். அப்படி என்றால், மத்திய அரசு இந்திய ஒன்றியத்தின் ரிசர்வ் வங்கிக்குள் நுழைந்து அதன் அதிகாரங்களை கேள்விக் குறி ஆக்குகிறது என்றுப் பொருள். Governance பார்வையில் இது மோசமானது. இதை தான் இரண்டு பகுதிகளாக “நாம் ஏன் ரிசர்வ் வங்கியோடு நிற்க வேண்டும்” என்று முன்பு எழுதி இருந்தேன்.

2 ) ரிசர்வ் வங்கியின் சுயமான அதிகாரமும், இயங்குதலும் தான் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை தரும். ரிசர்வ் வங்கியின் கவர்னரே பாதியில் போனால் அந்த நம்பகத் தன்மை மொத்தமாய் காலியாகும். இது முதலீடுகள், இந்திய ஒன்றியத்தின் மீதான நம்பிக்கை, சர்வதேச சந்தையில் இந்திய அரசு/நிறுவனங்கள் கொடுத்திருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும். நாம் ஒன்றும் சர்வாதிகாரிகளால் ஆளப்படும் ஆப்ரிக்க நாடல்ல. அங்கே தான் எந்த இண்ஸ்ட்டியூஷனுக்கும் மரியாதை கிடையாது.

3 ) தொடர்ச்சியாக மத்திய காவி பாஜக அரசு இண்ஸ்ட்டியூன்ஷன்களை சிதைப்பதிலும், அதன் நம்பகத் தன்மைகளைக் குலைப்பதிலும் குறியாக இருக்கிறது. தேசிய புள்ளிவிவர நிறுவனம் கொடுத்த ஜிடிபி கணக்குகளில் முந்தைய காங்கிரஸ் அரசின் வளர்ச்சி விகிதம் அதிகமாக வந்ததால், அதை ஒரங்கட்டி விட்டு, நிதி ஆயுக் உருவாக்கிய பொய்யான வளர்ச்சி புள்ளி விவரங்களை முன் நிறுத்தினார்கள். இது சர்வதேச சந்தையில் இந்திய ஒன்றியத்தின் மீதான பார்வையில் சந்தேகங்களைக் கிளப்பியது. இப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் “தனிப்பட்ட காரணங்களால்” வெளியேறுகிறார் என்று பிரஸ் ரிலிஸ் சொல்கிறது. ஆக, காவிகள் தங்களுடைய ஆட்களையும், அடிமைகளையும் எல்லா இன்ஸ்ட்டியூஷன்களில் ஊடுருவ செய்தும், நிறுவவும் செய்கிறார்கள்.

இது ஒட்டு மொத்த இந்திய துணைக் கண்டத்தையே கீழேக் கொண்டு போகும் செயல்.

டீமானிடைசேஷன் சமயத்தில் உர்ஜித் பட்டேல் வாயை மூடிக் கொண்டு இருந்தார். ஆனால் இரண்டே வருடங்களில் ரிசர்வ் வங்கியின் ஆய்வே, அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது தரவுகளோடு நிரூபித்தது. இப்போது அவருடைய சீட்டிற்கே ஆப்பு வைக்க நிதி அமைச்சகம, மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் வரும் போது தான் அதன் ஆபத்து உரைத்து இருக்கிறது. ராஜிநாமா செய்து விட்டார். முற்பகல் செய்பின்.......

அர்விந்த் சுப்ரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவரை எதுவுமே பேசவில்லை. வெளியேறவுடன் டீமானிடைசேஷன் ஒரு மடத்தனம் என்று அமெரிக்காவில் இருந்து சொல்கிறார். நியமித்த எந்த பொருளாதார நிபுணர்களும் முழுமையாக பதவியில் நிலைக்கவில்லை என்கிற dubious பெருமை மோடி அரசுக்கு உண்டு.

இந்த அரசு வெளியேறும் போது, கையில் லட்டு மாதிரி சிதம்பரமும், மன் மோகன் சிங்கும் கொடுத்து விட்டுப் போனதை, குரங்கு கையில் சிக்கிய மாலையாக பிய்த்துப் போட்டு, சின்னபின்னாமாக்கியது தான் வருங்கால வரலாற்றில் நிலைக்கும். வரலாறு மன் மோகன் சிங்கினை எப்போதோ விடுதலை செய்து விட்டது. அது மோடி/அமித் ஷா அராஜக கூட்டணியை அவமானப்படுத்தி செருப்பால் அடிக்க காத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த நாளுக்காக I am waiting!!

https://m.facebook.com/story.php?story_fbid=10156446598951998&id=719151997

No comments:

Post a Comment