Tuesday, December 25, 2018

கீழ்வெண்மணி படுகொலை - பார்ப்பனர்களின் பங்கு

//கீழ்வெண்மணி படுகொலை மட்டும் ஒரு பார்ப்பனரால் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு 'திராவிடர்கள்' அதனையே பேசப்படு பொருளாகக் கொண்டிருந்திருப்பார்கள்.
அவர்களின் துரதிஷ்டம், கொன்றது கோபாலகிருஷ்ண நாயுடுவாகப் போய்விட்டான்.//

இப்படி ஒரு பதிவு ஏனென்று தெரியவில்லை யாரோ ஒரு “ திராவிட ஒவ்வாமையால்” பாதிக்கப்பட்ட so called  கம்யூனிஸ்டால் எனக்கு திரும்பத்திரும்ப மீள்பதிவு என்று அனுப்பப் பட்டுக் கொண்டே உள்ளது. அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி போலும்.

பரவாயில்லை ஏதோ பதிலை எதிர்பார்க்கின்றார்கள் போலத் தெரிகின்றது.
பொதுவாகவே அரைகுறை பிரசவங்களுக்கும், பிஞ்சில் பழுத்து வெம்பியதுகளுக்கும், திருவிழாக்களில் விருந்தாளிகளுக்குப் பிறந்தற்கெல்லாம் நான்  பதில் சொல்வதில்லை. ஆனாலும், ஏதோ ஆசைப்படுகின்றார்கள்.

---

முதலில் இதற்கு, “நாகை தாலுக்கா உணவு உற்பத்தியாளர் சங்கம்” என்றுதான் பெயர். அதற்கு அப்போதைய தலைவர் ஆய்மழை மைனர் என்று சொல்லப்பட்ட, ஆய்மழை எஸ்.எஸ். ராமனாதத் தேவர். இது என்ன ஹோட்டல்காரன் சங்கமா? என்றுதான் இரிஞ்சூர் பி. கோபால கிருஷ்ணநாயுடு தலைவரானபோது  "நாகை தாலுக்கா நெல் உற்பத்தியாளர் சங்கம்" என்றாகின்றது.

So called கம்யூனிஸ்ட்களே,
அந்த சங்கத்தின் உப தலைவர் யார் தெரியுமோ? ஆதமங்கலம். ஏ. தியாகராஜ அய்யர்.

அந்த சங்கத்தின் காரியதரிசி யார் தெரியுமோல்லியோ? ஏ.எஸ். மணி அய்யர்.

சட்ட ஆலோசகர் வி.எஸ். ராமஸ்வாமி அய்யங்கார், பி.ஏ.பி.எல். அப்பறம், ஜீ.ராமமூர்த்தி அய்யர்ன்னும் ஒருத்தர் இருந்திருக்கா தெரியுமோ?

எல்லாத்தையும் விட வெண்மணி சம்பவம் நடந்த அன்று மாலை நெல் உற்பத்தியாளர்கள் சங்க கனவான்களும் அவாளது அடியாட்களும், நுனியாட்களுமாக யார் தலைமையில் போனார்கள் தெரியுமா? சாட்சாத் மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்.

பார்ப்பனர்கள் பூராவும் பத்திரமாக பதுங்கிவிட்டார்கள். அங்கே ”தவுசலே” அதாவது பஞ்சாயத்தே என்ன தெரியுமோல்லியோ அரைப்படி நெல்லு இல்ல ஓய்?

செங்கொடிய எறக்கு.,மஞ்சக்கொடிய புடி ங்கறது தான் ஓய்!

அந்த சங்கத்தில் இருந்த பாதி பேர்வழி அவாள்தான். அவா பதுங்கி இருந்ததின் காரணம் எது தெரியுமோ பாவா நவநீத கிருஷ்ணன், ஏ.ஜி.கஸ்தூரி ரெங்கன் என்ற பெரியாரின் பேராயுதங்கள்.

வரலாற்றை வாய்தா வாங்குவதுபோல பார்க்கக்கூடாது. வரலாற்றின் வழி நெடுக நடக்கவேண்டும். அப்போதுதான் பார்வை விசாலமாகும். மீண்டும் என்னை உசிப்பினால்  என்னுடைய கேள்விகள் உங்களுக்கு வலிக்கும்.

எனக்கு பகை முரண் எது ? நட்பு முரண் எது ? என்பதும், இன்றைய அரசியல் சமூகத்தின் அக,புறச்சூழல் புரியும் என்பதால் கடந்து செல்கின்றேன். போதும் என நினைக்கின்றேன்.

அய்ம்பது ஆண்டுகால நெருப்பின் கருகல் வாடையும், அது கலந்த காற்றின் வீச்சும் முகர்வதற்கு நறுமணமாக இருக்காது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.

-கவுதமன் பசு
தோழர் வசீகரன் கார்த்திக் பதிவு.

https://www.facebook.com/100012908281942/posts/566439843796287/

No comments:

Post a Comment