*வரலாறு தெரிந்து கொள்ளல்: 1*
சமுகத்தில் அடித்தட்டு மக்களாக கருதப்பட்ட தேவேந்திரர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட மக்கள் மேலாடை அணியக்கூடாது என மேல் சாதிக்காரர்களாக கருதப்பட்டவர்கள் தடை விதித்திருந்தனர்.
இதை எதிர்த்து 1930 ஆகஸ் 5ம் நாள் அமராவதிப்புதரில் ஆதிதிராவிம் அமைப்பைச் சேர்ந்த தலைவரான டி.பொன்னையா அவர்கள் "சட்டைக் கட்சி" மாநாட்டை கூட்டினார். பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு ஆதிக்கச் சாதிகள் மேலும் கட்டுப்பாடுகளை விதித்தனர். 1930 டிசம்பரில் ஆதிதிராவிடர்கள் மீதும் , 1931ல் தேவேந்திரர்கள் மீதும் முதலில் 8 கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து பிறகு 11 வகையான கட்டுப்பாடுகனை கொண்டு வந்தனர்.
1. தங்க நகை அணியக்கூடாது
2. பெண்கள் மேலாடை அணியக்கூடாது , பூ, மஞ்சள் பூசக் கூடாது
3. ஆண்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது
4. முடி வெட்டிக் கொள்ளக் கூடாது
5 . மண் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீர்ப் பானையை சுமக்கும் போது சும்மாடாக துணியை பயன்படுத்தக் கூடாது. வைக்கோலை பயன்படுத்த வேண்டும்
6. குழந்தைகளை படிக்க அனுப்பக் கூடாது , மிராசுகளின் ஆடு, மாடுகளை மேய்க்க வேண்டும்
7. நிலத்தை குத்தகைக்கோ , வாரத்திற்கோ வாங்கி உழக் கூடாது.
8. பண்ணைகளில் அடிமை வேலை செய்ய வேண்டும்
9. நிலம் வைத்திருந்தால் மிராசுக்கு குறைந்த விலைக்கு உற்று விட வேண்டும்
10. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மிராசுகளுக்கு கூலி வேலை செய்ய வேண்டும்.
11 . திருமணத்தில் மேளம் , குதிரை சவாரி , பல்லக்கு பயன்படுத்தக் கூடாது . வீட்டுக் கதவையே பல்லக்காக பயன்படுத்த வேண்டும்.
*இது மட்டுமின்றி மிரசுகளின் குடும்ப பிண ஊர்வலத்தில் தேவேந்திரர் , ஆதிதிராவிடர் பெண்கள் அரை நிர்வாணத்துடன் மாரடித்து செல்ல வேண்டும்*
இதை எதிர்த்து Lord Irwin அவர்களுக்கு ஆதிதிராவிட தலைவர் டி.பொன்னையா புகார் கடிதம் அனுப்பினார். ஒரு பலனும் இல்லை .
இந்தச் சூழ்நிலையில் தான் நாடு முழுவதும் இது போன்று நடப்பதை தொகுத்த *அறிவர் அம்பேத்கர்* 1930 முதல் 1931 வரை நடைபெற்ற London Round Table conference ல் பேசி வாதாடினார். அதனைத் தொடர்ந்து Ramsay Mcdonald அறிவித்த Communal award மற்றும் அதைத் தொடர்ந்த பூனா ஒப்பந்தம் முலமும் அரசியல் அதிகாரம் பெற ஒடுக்கப்பட்டோருக்கு மக்கள் மன்றங்களில் இட ஒதுக்கீடு முறை வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் தனித்தனியாக சாதிகளாகவும் , சிறிய அளவிலான தலைவர்கள் மூலமாக போராடிய போராட்டங்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து போராடி , பிரிட்டிஷ்காரர்களிடம் விவாதம் செய்தும் உரிமையை பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் . பிறகு Article 17 ஜ இயற்றி அரசியல் சட்டமாக்கினார்.
அதனால் கொஞ்சமாவது நாம் இப்போது நிம்மதியாக வாழ்கிறோம்.
*வாழ்க அம்பேத்கர் புகழ்*
No comments:
Post a Comment