Thursday, January 5, 2017

Best of twitter 2016:

Best of twitter 2016:

twitter.com/Rajinthan077:
பேசிட்டு இருந்த பொண்ணு, திடீர்னு பேசாம இருந்தா... அவங்க வீட்ல பேசி முடிச்சுட்டாங்கனு அர்த்தம்!

twitter.com/chevazhagan1:
என் காதல் கதையை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த மனைவி, ‘என்னங்க, கதையில ஒரு ட்விஸ்ட்டுகூட இல்லை’ என்கிறாள் # அடிப்பாவி... அந்தத் திருப்புமுனையே நீதான்டி!

twitter.com/yugarajesh2: 
சூர்யா, நிஜமாவே சிங்கமாக மாறுகிற வரைக்கும் ஹரி படம் எடுத்துக்கிட்டே இருப்பார்போல! # `சிங்கம்-3’

twitter.com/chevazhagan1: 
சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்!

twitter.com/withkaran:  
மிக்ஸிக்கு ஒரு சைலன்ஸர் கண்டுபிடிங்கய்யா... ‘சட்னி அரைக்கிறேன்’னு காலையிலயே எழுப்பிவிட்டுறாங்க!

twitter.com/venkatesh6mugam: 
பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும் பெண்ணும் ஒரு `மிதப்போடு’தான் வெளியே வருகிறார்கள்!

twitter.com/g_for_Guru:
 பர்த்டே பார்ட்டியில் ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கிறப்ப, பிரிக்க முடியாத மாதிரி பேக் பண்ணிக் குடுங்கப்பா, அங்கேயே பிரிச்சு அங்கேயே அடிச்சுக்குதுங்க!

twitter.com/udanpirappe: 
அம்மா அழைப்பு மையத்தை 20,000 பேர் தொடர்புகொண்டனர் - ஜெயா நியூஸ் # இதுக்குப் பெருமைப்படக் கூடாது சென்றாயன்... வெட்கப்படணும்!

twitter.com/king_prasath: 
இந்தப் பூமி,  வேறு ஒரு கிரகத்தின் நரகமாகவும் இருக்கலாம்!

twitter.com/Sathik_Twitz: 
பொண்ணுங்களைப் பொறுத்தவரையில், அவங்க யார் மேல இம்ப்ரஸ் ஆகுறாங்களோ... அவன் நல்லவன்; அவங்க மேல யார் இம்ப்ரஸ் ஆகுறானோ... அவன் கெட்டவன்!

twitter.com/sowmya_16: 
அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

twitter.com/i_Soruba:
 சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு :-)

twitter.com/KartikThoughts:
 ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது!

twitter.com/meenammakayal: 
எதைப் பற்றியும் ஓர் அளவுக்கு மேல் சிந்தித்தால், எல்லாம் முட்டாள்தனமாகத்தான் தோன்றுகிறது!

twitter.com/deebanece:  
நான் கிஸ்ஸிங் ஸ்மைலி அனுப்பினதுக்கு, நீ செருப்பு ஸ்மைலி அனுப்புனியே அப்போ அது ‘லவ்’தானே ஜெஸ்ஸி?!

twitter.com/VignaSuresh: 
அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக்கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!

twitter.com/indirajithguru: 
பையில் இருந்த சிகரெட் காணாமல்போகும் வரை, மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த விஷயம் பல தந்தைகளுக்குப் புரிவது இல்லை!

twitter.com/teakkadai:
 வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!

twitter.com/SettuOfficial: 
`யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் நண்பன்;  `இப்ப யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் உயிர் நண்பன்!  

twitter.com/naiyandi:
 ரீசார்ஜ் செய்யக்கூட காசு இல்லை என்பதுதான் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது!

twitter.com/meenammakayal: 
`இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

twitter.com/Lalithajeyanth: 
நான்: வாவ்..! Rainbow பாருடா!
மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?
மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.

twitter.com/indirajithguru: 
என் அம்மாவுக்கு என்னைவிட நன்றாகப் பொய் சொல்லவரும் என்பது, எனக்குப் பெண் பார்க்கப் போகும் போதுதான் தெரியும்!

twitter.com/kattathora:  
ஸ்கூல்ல இருந்து திரும்பும் மகள், `அப்பா... இன்னிக்கு என் உண்டியல்ல இருந்து காசு எடுத்தியா?’ எனக் கேட்கும்போது, கொஞ்சம் மானக்கேடாதான் இருக்கு! 

twitter.com/pshiva475: 
சண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்!

twitter.com/navi_n: 
நாம் கழுவிவைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்!

twitter.com/paidkiller: 
என்னை நானே கதறக்கதற அடிச்சு, மிதிச்சு, தரதரனு இழுத்துட்டுப்போறேன்... ஆபீஸுக்கு!

twitter.com/Shiva__27: 
சாப்பிடும்போது `கடைசியில ரசம் ஊத்திக்கணும்’னு சொல்றது, தட்டை ஈஸியாக் கழுவுறதுக்காக ஏதோ ஒரு பொண்ணுதான் கண்டுபிடிச்சிருக்கணும்.

twitter.com/mekalapugazh:  
சிவராத்திரிக்கு விடுமுறை அறிவிப்பது என்றால்... அடுத்த நாள்தானே விடணும்!

twitter.com/jroldmonk:
 ‘வீடு வாங்கியிருக்கேன்’, ‘காரு வாங்கியிருக்கேன்’னு சொல்றாங்க. ஆக்சுவலி நீங்க எல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா!

twitter.com/withkaran: 
தே.மு.தி.க-வுல இனி எல்லாம் அண்ணிதானாம். `நான் எல்லாம் செக் பண்ணிட்டேன். நீங்க வீட்டைப் பூட்டிட்டு மட்டும் வாங்க’னு கேப்டன்கிட்ட சொல்லிருச்சுபோல!

twitter.com/thalabathe: 
பிரிஞ்சதுக்கு அப்புறம் `என்னைய மறந்துடு’னு பொண்ணுங்க கெஞ்சின காலம் போயி, `இப்ப தயவுசெய்து செல்ஃபியை டெலிட் பண்ணிடு’னு வந்து நிக்குதுக!

twitter.com/VignaSuresh: 
`இந்தா’ என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது!

twitter.com/urs_priya:
 அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்!

twitter.com/Lekhasri_g: 
ஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்!

twitter.com/ BoopatyMurugesh: 
ஆபீஸ்ல வேலை பார்க்கலாம்னு உட்காரும்போது `மீட்டிங்’னு கூட்டிப்போய்டுறாய்ங்க. மீட்டிங்ல வெச்சு `என்ன வேலைபார்த்த?’னு கேட்கிறாய்ங்க. :-(

twitter.com/ aroobii: 
தனிமனிதத் தவறுகளை `தனிமனித சுதந்திரம்’ எனக் கடந்துவிடவும் ஏற்றுக்கொள்ளவும் பழகுகிறீர்கள்!

twitter.com/ arattaigirl: 
`நல்லா வாழ மாட்ட’ என்பதைவிட `நல்ல சாவு வராது’ என்பதுதான் மோசமான சாபம்!

twitter.com/ KingViswa: 
ஒரு பிரபலம் தன் நண்பனாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். தன் நண்பன் பிரபலமாவதை நிறையப் பேர் மனதார விரும்புவதும் இல்லை; ரசிப்பதும் இல்லை!

twitter.com/amuduarattai: 
பேக்குக்குள் ரகசிய அறை, ரகசிய அறைக்குள் பர்ஸ், பர்ஸுக்குள் போன், போனும் சைலன்ட் மோடு... என, பெண்களின் போன்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பு நிறைந்தவை!

twitter.com/Rajeshveeraa: 
சின்னக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கய்யா... சிப்ஸ் பாக்கெட்ல ரெண்டு எடுத்தா கத்துது!

twitter.com/sorubaravi: 
நமது பொய்யைச் சட்டெனக் கண்டுபிடிப்பவர், ஏற்கெனவே அதைச் சொன்னவராக இருக்கக்கூடும்!

twitter.com/kavathu: 
மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்... அவனை மளிகைக்கடைக்கு அனுப்புனா மீதி காசு வராதுனு!

twitter.com/ikrthik: 
கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!

twitter.com/Prazannaa: 
டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா? நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா? # மகளதிகாரம்!

twitter.com/Koothaadi: 
நாம் நேசிக்கும் ஒரு புத்தகத்தை யாரேனும் படிப்பதைப் பார்க்கையில், அந்தப் புத்தகம், நமக்கு ஒருவரைப் பரிந்துரைப்பதுபோல் உள்ளது!

twitter.com/mekalapugazh: 
கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால், நிறையத் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்!

twitter.com/chevazhagan1: 
ரெண்டு கொசுவத்தியைத் தனித்தனியாப் பிரிக்கிறதுக்கு நான் படுறபாடு இருக்கே... ஸ்ஸப்பா!  எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் பிரிச்சாங்களோ! 

twitter.com/arattaigirl: 
பழக்கடையில ஒரு அம்மா.... `ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’ - கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

twitter.com/unmaivilambbi: 
எல்லோர் அலைபேசியிலும் உள்ளது... முன்பு ஒருகாலத்தில் எல்லாமுமாக இருந்த ஒரு நபரின் தொலைபேசி எண்.

twitter.com/manipmp:
 `நாளையில் இருந்து படிக்கிறேன்’னு சொன்னவனும், `நாளையில் இருந்து குடிக்கலை’னு சொன்னவனும் ஜெயிச்சது இல்லை!

twitter.com/vandavaalam:  
டிக்கெட் புக் பண்ணாம, ஊருக்கு பஸ் ஏறிய கடைசித் தலைமுறை நாம்!

twitter.com/pshiva475: 
லேடீஸ் துணிக்கடையில சேல்ஸ்மேன்கிட்ட இருந்து திட்டுவாங்காம தப்பிக்கிற ரெண்டு மெத்தட்ஸ்... இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா, இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?

twitter.com/kumarfaculty:  
`ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன! 

twitter.com/cablesankar: 
மதர்ஸ் டேவுக்கு ரகசியமாக கிஃப்ட் வாங்கிவைக்கும் புள்ளைங்க,  ஃபாதர்ஸ் டேக்கு வந்து `என்ன ட்ரீட்?’னு கேக்குதுங்க. அப்பனா பொறந்தாலே கஷ்டம்யா!

twitter.com/urs_priya: 
கணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே :-)

twitter.com/bommaiya: 
ஓடுற அத்தனை ட்ரெய்ன்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டிவெச்சுட்டு, `திறந்தவெளியில் மலம் கழிக்காதீர்கள்’னு பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ்  பண்றாங்க!

twitter.com/David_EXIM: `உங்களை மாதிரி இல்லை. நம்ம பையனை நான் நல்லவனா வளர்க்கிறேன்’கிறா... # எவ்ளோ நுட்பமா எங்க அம்மாவைத் திட்றா பாருங்கய்யா!

twitter.com/aruntwitz: 
மொபைல் கேமராவுக்கு விதவிதமா போஸ் கொடுக்க தெரியுது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு மட்டும் முகத்தை எப்படி வெச்சுக்கிறதுனுதான் தெரியலை!

twitter.com/iKappal: 
குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?’னு பார்க்கும்!

twitter.com/Sandy_Offfl:
 டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்!

twitter.com/vandavaalam: 
எங்கே பார்த்தாலும்... யாரைப் பார்த்தாலும் வெயிட் குறைக்கிறதுலேயே குறியா இருக்காங்க. ரெண்டு கிலோ குறையும்னா மூளையைக் கூடக் கழட்டி வெச்சுருவானுகபோல!

twitter.com/nithya_shre:  `அண்ணா’ எனச் சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன; பல காதல்கள் அழிந்துள்ளன!

twitter.com/mpgiri: 
எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

twitter.com/srivishiva: 
குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

twitter.com/teakkadai: 
கட்டும் சேலைக்கு மேட்ச்சாக, பெண்கள் தினமும் தங்கள் மொபைல் கேஸை மாற்றிக்கொண்டிருக்கும் வரை பூமி பூப்பூப்பதை நிறுத்தாது!

twitter.com/twittornewton:
 `நம்மால் முடியாது’ என நினைப்பது தன்னம்பிக்கைத் துரோகம்!

twitter.com/iMaandiyar: 
டேய்... அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சுட்டு, உங்கள் கையில முத்தம் குடுத்துட்டுப் போறீங்க :(

twitter.com/chevazhagan1:
 டாஸ்மாக் பார்ல போன் வந்ததும் ஒருத்தன் தனியா போய்ப் பேசுறான்னா, போன் பண்ணது ஒண்ணு பொண்டாட்டியா இருக்கணும்; இல்ல மேனேஜரா இருக்கணும்!

twitter.com/Ulaganandha:  
ஹெட்போன்ல வலது இடது இருக்கா?! இந்த விஷயம் தெரியாம 25 வருஷம் வாழ்ந்துட்டோமே... ச்சே!

twitter.com/sathik_twitz: 
ஒரு செகண்ட்ல கொலவெறி உண்டாக்குறவன்,  டிராஃபிக்கே இல்லாத ரோட்ல பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கிறவன்தான்!

twitter.com/vandavaalam:   
செக்யூரிட்டியே ஏழு மொழி பேசுறான்னு சந்தோஷப்படுறதா, இல்லை... ஏழு மொழி தெரிஞ்சவன் செக்யூரிட்டியா இருக்கானேனு வருத்தப்படுறதா?

twitter.com/karthekarna: 
எவனாவது சீரியஸா எழவு நியூஸ் சொல்லப்போறான். தாடையைத் தடவிக்கிட்டே ‘மகிழ்ச்சி’னு சொல்லிருவோமோனு பயமா இருக்கு. `கபாலி’ ஃபீவர்!

twitter.com/HaridiBaby:
 கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!

twitter.com/Mithrasism:
 வேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்... பொருளாதாரச் சுதந்திரம்!

twitter.com/aruntwitz: 
குப்பை போடுவதும், தொப்பை போடுவதுமே நாட்டின் தலையாயப் பிரச்னைகளாக இருக்கின்றன!

twitter.com/ashokcommonman : `ஜோக்கர்’ படம் ஆரம்பக் காட்சியில் ஒரு மணல் லாரி கிராமத்தைவிட்டுப் போகுது.  ஒரு ஆள் அதே ஊருக்குள்ள தண்ணி கேன் போடப்போறார். குறியீடு... குறியீடு!

twitter.com/SettuOfficial: 
புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி பூஜை போடுகிறார் ஒருவர். கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார் என்ற ஆர்வம் எனக்கு???!!!!

twitter.com/ManiPmp: 
கால்கள் இரண்டையும் தரையில் தேய்த்து, உதடு மடித்து, அனுமார்போல் வைத்திருந்தால், பெண்கள் பைக்கை நிறுத்தப்போகிறார்கள் என அர்த்தம்!

twitter.com/altappu: 
`மோடி எப்படி ரிலையன்ஸ் மாடலாக வரலாமாம்?’ # அட லூஸுகளா... உங்க பிரதமர், ரிலையன்ஸ் மாடல் ஆகலை. ரிலையன்ஸ் மாடலைத்தான் நீங்க பிரதமர் ஆக்கியிருக்கீங்க!

twitter.com/Rama Periasamy: 
`அதை எடுத்துட்டு வா’னு அப்பா சொல்ல, `எது?’னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

twitter.com/manipmp:
 ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

twitter.com/thoatta: 
சைக்கிள்ல எட்டு, பைக்ல எட்டு, ஏன்... கார்லகூட எட்டு போட்டுப் பார்த்திருக்கேன். ஆனா, சிரிக்கிறப்ப வாய்ல எட்டு போடுறது கீர்த்தி சுரேஷ்தான்!

twitter.com/kaviintamizh: 
 காமராஜர் எளிமையாக வாழ்ந்ததைவிட, `அப்புறம் தம்பி... எப்ப கல்யாணம்?’னு கேட்கிற சொந்தக்காரங்களை எப்படிச் சமாளித்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்!

twitter.com/karuthu_ganesan: 
டிஸ்கவுன்ட் சேல்னாலும் தேவைன்னா மட்டும் வாங்குங்க. வாங்கலைனா, நமக்கு 100 சதவிகிதம் டிஸ்கவுன்ட்.

twitter.com/erode_kathir: 
இதுவரை வெளியான வதந்திகளிலேயே பெரிய வதந்தி, `ஓ.பி.எஸ்., எடப்பாடி ரெண்டு பேரும் காவிரிப் பிரச்னைக்காக கவர்னரைச் சந்திச்சாங்க’னு சொன்னதுதான்!

twitter.com/Kozhiyaar: 
கணவன்கள் உறங்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட்டு, சுத்தம்செய்வது மனைவிகளின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு!

twitter.com/mpgiri : 
நேத்து வரை `புத்தகத்தை எடுத்துவெச்சுப் படிக்க உட்கார்டா’னா... வீட்டுக்குள்ளகூட வரலை. இன்னைக்கு பூஜையில வெச்சப்புறம் `படிக்கணும்பா... எப்ப புக் தருவ?’ங்கிறான்!

twitter.com/Dhrogi:
 `ஹீரோயினை வெகுளியாக் காண்பிச்சா பசங்களுக்குப் பிடிக்கும்’னு எவனோ இயக்குநர்களுக்கு நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிவிட்டுருக்கான்!

twitter.com/mokrish:  
இந்த டச் போனில் படித்ததில் பிடித்ததை `வெட்டி’னால் அதை வேறு இடத்தில் ஓட்டும் வரை எல்லா சொற்களும் விரல் நுனியில் இருப்பதுபோல் ஒரு ஃபீலிங்!

twitter.com/Aruns212: 
 தனியாக வீட்டில் இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் பார்ப்பவனை விடவா சிறந்த யோக்கியன் இந்த உலகில் இருந்துவிடப்போகிறான்!?

twitter.com/Jvs2020: 
 சில சம்பவங்களைத் தொந்தரவுசெய்யாதீர்கள்... அது உங்களுக்குத் தீர்க்கமான சில முடிவுகளைக்கூடக் கொடுக்கலாம்!

facebook.com/ArumugaSelvamV:
 ஜல்லிக்கட்டு நடக்க, மாட்டுப் பொங்கல் அவசியம் இல்லை. தேர்தல் மட்டுமே அவசியம் என்பதை உணர்ந்த வருடம் 2016.

facebook.com/vinayaga.moorthy.5070: 
எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

facebook.com/jill.kamatchirajan: 
ராஜீவ் காந்தி படுகொலை, பிரபாகரன் படுகொலை. இந்த இரண்டு துருவக் கொலைகளிலும் தி.மு.க மட்டும் தர்ம அடி வாங்குவது வரலாற்று விநோதம்!

facebook.com/iMuthuram: 
Jio சிம் வாங்காதவனை எல்லாம் `தேசத்துரோகி’னு சொல்லுவாய்ங்களேனு நெனச்சாதான் துக்கம் தொண்டையை அடைக்குது! 

facebook.com/aruna.raj.35: 
பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.

facebook.com/jv.balaji: 
கூரை மேல சோறு போட்டா காக்கா வருதோ இல்லையோ, வீட்டுக்காரன் வர்றான்... அசிங்கமா திட்டிக்கிட்டு. #வாடகை வீடு அட்ராசிட்டீஸ்!

facebook.com/rasanaikkaaran:
 நான் வளர்ற காலத்துல `அப்பா மூட்அவுட்ல இருக்கார். ஏதும் கேட்டு வாங்கிக் கட்டிக்காதே’னு எச்சரிக்கை செய்வார் அம்மா. இப்ப, `பாப்பா மூட் சரியில்லை. அவகிட்ட பேச்சு குடுக்காத’னு தங்ஸ்கிட்டேருந்து எச்சரிக்கை வருது. ஒரு குடும்பத் தலைவருக்கு நாட்டுல மரியாதை இல்லியா?!

facebook.com/saravanan.chan dran.77: 
இரண்டு நாட்களுக்கு முன்பு வரைக்கும் ரோட்டில் ஓர் இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால், அது டாஸ்மாக்; இப்போது ஏ.டி.எம்!

facebook.com/prabhakrr: 
என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன்.
பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல?

No comments:

Post a Comment