Friday, January 27, 2017

தடை செய்யப்படவேண்டியது அந்நிய பானங்கள் மட்டுமல்ல, அந்நிய மதங்களும் தான்

வாசுகி பாஸ்கர்
Via Facebook
2017-01-26

"தடை செய்யப்படவேண்டியது அந்நிய பானங்கள் மட்டுமல்ல, அந்நிய மதங்களும் தான்" என்று ஒரு புகைப்படம் என் கண்ணில் பட்டு தொலைத்தது,

அந்நிய மதங்கள் இல்லாத இந்தியாவை நினைத்து பார்த்தால், Final Destination படத்தை விட படு பயங்கரமாக இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ இந்தியாவில் கிறுஸ்துவமும், இஸ்லாமும் Punching Bag ஆகி, மொத்த குத்தையும் வாங்கி கொண்டு ஹிந்து மத படிநிலையில் கீழே உள்ள இனங்களை வாழ வைத்து கொண்டு இருக்கிறது. ஹிந்து மதத்தின், அளவுக்கு அதிகமான அராஜகத்தில், பேய் பங்களா கதவு திறக்கப்பட்டால், எப்படி உள்ளே மாட்டிக் கொண்டவர் வெளியே ஓடுவாரோ, அது போல ஓடி பிழைத்தவர்கள் பலர் என்கிற வரலாற்று உண்மைகளை நாம் மறந்து விட கூடாது.

கணிசமாக இந்த மதமாற்ற சதவிகிதம் உயர்ந்த போது தான், ஹிந்து மதம் என சொல்லப்படுகிற பிராமண மதம், ஓரளவு தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டது, அதுவரை ஒடுக்குமுறையின் வீரியத்தை Granted ஆகவே தான் எடுத்து கொண்டிருக்கிறது. 

தமிழகத்தை Sample piece ஆக எடுத்து கொள்ளுங்கள், கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் பகுதி குறித்து ஆராயுங்கள், அவர்கள் ஏன் கிருஸ்துவர்கள் ஆனார்கள் என்பதற்கு ஒரு வரலாற்று தொடர்பு இருக்கும். மீனவ குப்பம், மலை கிராமம், கூலி தொழிலாளிகள், எஸ்டேட் தொழிலாளர்களில் கணிசமானோர் கிருஸ்துவர்களாக இருக்கிறார்கள், அதற்கான வரலாற்று பின்புலத்தை ஆராய்ந்தால், அங்கே ஒடுக்குமுறை ஆழமாக இருந்திருக்கும்.

மதமாற்ற வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, கல்வியும் பொருளாதாரமும் சமூகத்தில் கிடைத்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம், மார்வாடிகளுக்கு சமமாக வடசென்னை தொழிலதிபர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதை கவனிக்கலாம். பிராமணர்கள் ஆதிக்கமாய் இருந்த அரசு பணிகளில் குறிப்பிட்ட அளவு கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருப்பதை தரவாகவே நம்மால் தரமுடியும், இது எப்படி சாத்தியம் ஆனது என்பது தான் நான் சொல்ல வருவது,

இவர்கள் சொல்லும் இந்த அந்நிய மதங்கள், கல்விக்கும், மருத்துவத்துக்கும் இந்த பூமியில் செய்த சேவைகள் கணக்கில் அடங்காதவை, அதை ஒரு போதும் இந்திய சமூகம் மறந்து விட கூடாது. மதமாற்றம் என்கிற விமர்சனத்தை ஹிந்து மத பிரியர்கள் குற்றசாட்டுகளாய் வைத்தாலும், ஹிந்து மதத்தின் அராஜகத்துக்கும், ஒடுக்குமுறைக்கும் முன்னே, இந்த மதம் மாறுவது, கௌரவ குறைச்சலாக இந்த மக்களுக்கு தெரியவில்லை.ஏனினில்; அவர்கள் இந்து மதத்தில் இருந்த வரை, கெளரவம் என்பது அகராதியிலும் கிடைக்காத வார்த்தை. கல்வியும், தின்ன சோறும், சமூகத்தில் மரியாதையும் விட, ஒரு சுயமரியாதையை புதிதாக ஏற்படுத்தி விட முடியுமா?

புத்தத்தை தழுவ போகிறேன் என்கிறார் அண்ணல் அம்பேத்கர், ஹிந்து மத சாஸ்திரிகள் எல்லாம் பதறுகிறார்கள், இப்படி செய்வதால் இந்தியா முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரிடம் இந்த மதமாற்றம் எதிரொலிக்கும் என அஞ்சுகிறார்கள், இதை கை விட சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள்,

அண்ணல் ஒரு கோரிக்கை வைக்கிறார், இந்த திட்டத்தை நான் கை விட வேண்டுமானால், "ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்த்தவர் சங்கராச்சாரி ஆக முடியுமா?" என்றார், இதை கேட்டவர்கள் வாயடைத்து போனார்கள், "முடியும்" என்று சொல்லி விட்டால் தான் பிராமண மதத்தை குழி தோண்டி புதைத்தாக வேண்டுமே, மௌனமானார்கள். இன்று வரை இவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.  

என் மதத்து காரன் வேறு மதத்திற்கு போனாலும் பரவாயில்லை, அவன் எனக்கு சமமாக என் இடத்தில் வரவே முடியாது என்கிற சித்தாந்தத்தை கொண்டது எப்படி எல்லோருக்குமான மதமாக இருக்க முடியும்? இதற்கு Parallel ஆக, எந்த சமூகத்தை சேர்ந்தவரும், முறைப்படி கிறிஸ்துவத்தை பயின்றால், ஆலய தலைமையை வகிக்க முடிகிறது, அங்கி அணிய முடிகிறது, காலத்தால் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும், அந்த மதத்தின் அடையாளத்தோடு, அந்த மதத்தினராகவே முடிகிறது. இந்தியா முழுக்க இந்த மதத்தவர் தாக்க பட்டால், அந்த மதத்தவர் தாக்கப்பட்டார்கள் என்றே எதிர்ப்புகள் பதிவாகிறது, ஆனால் ஹிந்து மதத்தில் தான் உத்திர பிரதேசத்தில் தாக்கப்பட்டது தலித் என்றால், உடம்பில் உள்ள ventilator கள் மூடி கொள்கிறது.

பிற மதத்தை தழுவியதால் என்ன நடந்தது என்பது இதுவரை, அந்நிய மதங்கள் உள்ளே வராமல் போய் இருந்தால், இந்தியாவின் நிலை என்னவென்பதை சொல்கிறேன்,

இன்னொருவரை ஒடுக்கி, தனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான் என்பதை சித்தாந்தமாக கொண்ட ஹிந்து மதத்திற்கு, ஒருவனை ஒடுக்கி கொண்டே இருக்க வேண்டும் என்பது சாம்பாரில்  சரளமாக நெய் ஊற்றுவதை போல, ஒடுக்குமுறை இங்கே சாஸ்திரம்,

அப்படி பட்ட மதத்தில், எதிர்ப்பதற்கு அந்நிய மதங்கள் இல்லாமல் போய் இருந்தால், மீண்டும் தன் மதத்தவர் நோக்கி இந்த பேய்கள் திரும்பும், மற்ற மதத்தின் சதவிகிதத்தை கன்டு அஞ்சியாவது சேரிகளுக்கு படையெடுக்கும் சாமிகள், மீண்டும் ஊர் திரும்பும். இவ்வளவு கெடுபிடிகள் இருக்கும் காலத்திலேயே சேரியில் எரித்த ஹிந்து மதத்தின் தேரையும், அந்த ஊர் மக்களையும் போய் பார்த்து, ஆறுதல் சொல்ல, எந்த இந்து மத Authority ஆட்களுக்கும் இங்கே யோக்கியதை இல்லை, ஒரு வேலை அந்நிய மதங்கள் இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்பது யோசியுங்கள். 

இந்த 2017 , 27 ஆம் தேதி கூட, ஒரு ஐயரை தாழ்வாக பார்க்கும் ஐயங்கார்கள் இருக்கிறார்கள், இந்த ஐயர், ஐயங்கார் ஒன்றாக இருப்பது கூட, பொது எதிரி உருவானதால் தான், ஒருவேளை பிராமணியத்தை எதிர்க்க நாமெல்லாம் இல்லையென்றால், பழைய பிராமண பிரிவுகள் எல்லாம் தலையெடுக்கும், ஒருவரோடு ஒருவர் சேர்ந்து மீண்டும் அடித்து கொள்வார்கள், சாஸ்திர சண்டை தினம் நடக்கும்.

ஆக, இவர்கள் ஒன்றாக இருப்பதற்கே கடுமையான இந்த எதிர்ப்பு தான் காரணம். இது இல்லாத இந்தியாவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

No comments:

Post a Comment