Thursday, January 29, 2015

நடுநிலை செய்திகளை காட்சி ஊடகங்களில் அறிய முடியாது:

நடுநிலை செய்திகளை காட்சி ஊடகங்களில் அறிய முடியாது

தமிழில்
  1. புதிய தலைமுறை - பச்சைமுத்து பாரிவேந்தருக்கு சொந்தமானது. இவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள ஒரு கட்சியின் நிறுவனர். 
  2. தந்தி தொலைக்காட்சி - யின் ஒரு சார்பு நிலைப்பாடு உலகறிந்த உண்மை.
  3. சன் செய்திகள் - கலாநிதி மாறனுக்கு சொந்தம். இவர்கள் செய்தி சார்பு மாறிக்கொண்டேயிருக்கும்.
  4. ஜெயா செய்திகள், கலைஞர் செய்திகள் - முறையே அ.தி.மு.க ,தி.மு.க கட்சிகளின் தொலைக்காட்சிகள்.
தமிழில்தான் இப்படி என்றால் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் இதைவிட மோசமான நிலைமையில் உள்ளன:
  1. ஐபிஎன் - அம்பானிக்கு சொந்தம்.
  2. டிவி டுடே - பிர்லா குழுமத்தின் கையில். 
  3. நியுஸ் 24 - ன் உரிமையாளர்கள் ராஜீவ் சுக்லா, ரவி சங்கர் பிரசாத்
  4. இந்தியா டிவி - பா.ஜ.க தலைவர்களுக்கு சொந்தம்.
  5. இந்தியா நியுஸ் - காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வினோத் சர்மா வுடையது. 
  6. என்டிடிவி - ஜிண்டால் மற்றும் சிதம்பரம் கையில்.
  7. ஜி நியுஸ் - பா.ஜ.க வின் ஆதரவாளர்களுக்கு உரிமையானது.
  8. டைம்ஸ் நௌ - கார்ப்பரேட்களின் செய்தி நிறுவனம். மோடிக்கு முழுக்க முழுக்க ஆதரவு. அவ்வப்போது சிறிது காங்கிரசுக்கும் ஆதரவு எனும் தனது கார்ப்பரேட் நாகரிகத்தை காப்பாற்றிக்கொள்ளும் நிறுவனம்.
உண்மை செய்திகளை நாம் எங்கே தேடுவது.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு - வாழ்க திருவள்ளுவர்

No comments:

Post a Comment